மதுரையை அதிர வைத்த சீமராஜா இசை விழா..!
மதுரை மாநகரை தெறிக்க விட்ட, "சீமராஜா" இசைத்திருவிழா!
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த,
'சீமராஜா' இசை வெளியீடு
பாக்ஸ் ஆபிஸ் இளவரசன் சிவகார்த்திகேயனின் பிரபலத்தை பரவலாகக் காட்டியது. சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெரும் எண்ணிக்கையில் இந்த இசை விழாவில் குவிந்திருந்தனர். சிவகார்த்திகேயன் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கும் நட்சத்திரமாக மாறியிருப்பதை அங்கு போடப்பட்ட கோஷங்களே பறை சாற்றின.
விழா நடந்த இடம் வண்ண விளக்குகளால் மின்னியது. பெரிய அளவில் நட்சத்திரங்கள் கூடிய ஒரு விண்மீனைப் போலவே ஒரு நாள் முழுக்க மதுரை இருந்தது. நாட்டுப்புற நடனங்கள் மற்றும் பழமையான கிராமிய நாட்டுப்புற கலைகள் பார்வையாளர்களை வரவேற்றன, அந்த பகுதியே திருவிழாக்கோலம் பூண்டிருந்தது.
"இசையமைப்பாளர் இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம், பாடலாசிரியர் யுகபாரதி, ஹீரோ சிவ...









