ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!
ரஜினிகாந்தின் ரசிகர் மன்றம் மக்கள் மன்றம் ஆக மாறியது..!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த ஆண்டின் கடைசி நாள் மறக்க முடியாத நாளாக மாறிப்போனது.
ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31-ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவரது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரசிகர்கள் முன்பு அறிவித்தார். ஆன்மீக அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
ரஜினி தொடங்க உள்ள புதிய கட்சியின் பெயர் கொடி என்ன? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தான் தொடங்க இருக்கும் கட்சியில் சேர நினைப்பவர்கள், மாற்றத்தை விரும்புபவர்கள் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த ரஜினி அதற்காக புதிய இணையதள முகவரி ஒன்றையும் அறிமுகப்படுத்தினார்.
அந்த இணையதளம் மூலமாக ரஜினி மன்றத்தில் இதுவரையில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளி...









