சேலம் வாழப்பாடி அருகே குடிபோதையில் தகராறு செய்த நபர் மீது போலீஸ்காரர் லத்தியால் தாக்குதல்: குடிபோதையில் தகராறு செய்த நபர் மரணம்!
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பாப்பநாயகன்பட்டி சோதனைச்சாவடியில் மதுபோதையில் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரை, காவலர் லத்தியால் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
https://youtu.be/wl-Eyt6_UlY
இந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போதையில் வந்த முருகேசன் என்பவரின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். பைக்கை பறிமுதல் செய்த போலீசாரை போதையில் இருந்த முருகேசன் சில வார்த்தைகளை அநாகரிகமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் தாக்கினார். லத்தியால் போலீஸ்காரர் அடித்த நிலையில் முருகேசன் மயங்கி விழுந்தார்.
சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மதுபோதை முருகேச...
'இந்த கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன்' சசிகலா பேசியதாக ஆடியோ வைரல்!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சட்டசபை தேர்தல் நேரம் என்பதால் அவரின் அரசியல் முடிவு பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக அவர் திடீரென அறிவித்தார். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி கண்டு ஆட்சியை இழந்தது
இந்நிலையில், சசிகலா தொண்டர் ஒருவரிடம் தொலைபேசியில் பேசியதாக ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. அந்த ஆடியோ உரையாடல் வருமாறு:-
https://www.youtube.com/watch?v=DEwL01ZvGTY
ஹலோ லாரன்ஸ் நல்லா இருங்கீங்களா,
தொண்டர்: நல்லா இருக்கோம்மா... உங்க குரல கேட்கவே சந்தோஷமாக இருக்குமா...
சசிகலா: வீட்டுல எல்லோரும் நல்லா இருக்காங்களா
தொண்டர்: எல்...