வெள்ளிக்கிழமை, அக்டோபர் 31
Shadow

செய்திகள்

TMJA சங்க விழாவில் சின்ன வயது தீபாவளி அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர் சி.வி.கணேசன்!

TMJA சங்க விழாவில் சின்ன வயது தீபாவளி அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர் சி.வி.கணேசன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள், நடிகைகள்
  சின்ன வயது தீபாவளி அனுபவங்களை பகிர்ந்த அமைச்சர் சி.வி.கணேசன் தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் சுவாரஸ்யம் தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,வழக்கம்போல் சென்னை பிரசாத் லேப்பில் சிறப்பாக நடந்தது. 2025ம் ஆண்டு சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன்(தொழிலாளர் நலன், திறன்மேம்பாட்டுதுறை), பூச்சி.எஸ்.முருகன்( தமிழ்நாடு வீட்டுவசதிவாரியதலைவர், நடிகர் சங்க துணைத்தலைவர்) மற்றும் நா.இளங்கோவன் (அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ், ஆவடி), தேசியவிருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கடலோரகவிதைகள் ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார்(எஸ்.கே.பிக்சர்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். விழ...
கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா!

கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா* *ஸ்டண்ட் சில்வாவுக்கு விருது வழங்கி கவுரவித்த கேரளா அரசு* தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர். ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத...
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்களின் மூலம் ராகங்களை ரசிகர்களுக்கு எட்டச் செய்யும் புதிய முன்னெடுப்பு!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்களின் மூலம் ராகங்களை ரசிகர்களுக்கு எட்டச் செய்யும் புதிய முன்னெடுப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    *துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் முன்னணி திரைப்பட பாடகர்களுடன் இணைந்து சென்னையில் நடத்தும் புதுமையான இசை நிகழ்ச்சி RRR (ரீல் ரியல் ராகா)* *தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி திரைப்பட பாடல்களின் மூலம் ராகங்களை ரசிகர்களுக்கு எட்டச் செய்யும் புதிய முன்னெடுப்பு* துபாயை சேர்ந்த மென்பொருள் நிபுணர் வெங்கடேஷ் சங்கர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயம் இல்லை என்றாலும் அவரது மகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரபலம். 'தங்க மீன்கள்' படத்தில் நடித்து சிறு வயதிலேயே பாராட்டுகளை வென்ற சாதனாவின் தந்தையான வெங்கடேஷ் சங்கர், இசை மீது கொண்ட தீராக்காதலின் விளைவாக முற்றிலும் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளார். பாரம்பரிய இசையின் ராகங்களையும் அவை திரைப்பட பாடல்களில் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன என்பதையும் பாமர ரசிகர்களுக்கும் சுவாரசியம் குன்றாமல் விளக்கும் வகையில் து...
மலை கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன்

மலை கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *மலை கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன் மகிழ்ச்சி* தமிழ் சினிமாவில் பல இயக்குநர்கள் தங்கள் படத்தை கமர்சியல் அம்சங்களுடன், வெற்றி இலக்கை எளிதாக தொட்டுவிடும் முயற்சியாக தான் இயக்கி வருகிறார்கள். வணிக வெற்றி என்பது இன்றைய நாளில் இயக்குநர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் மிகப்பெரிய அவசியமாகிறது. அதே சமயம் வெகு சில இயக்குநர்கள் தான், இந்த மண் பற்றியும் மண்ணின் மைந்தர்கள், அவர்களது வலி நிறைந்த வாழ்க்கைகள் இவற்றைப் பற்றியும் திரைப்படங்களாக எடுக்க வேண்டும்,, அதை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும், தன்னுடைய படங்கள் மூலமாக அவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்கிற நோக்கில் படங்களை உருவாக்கி வருகின்றனர்,. அப்படி சமூக நோக்கில், பல வருடங்களாக கஷ்டங்களை மட்டுமே சந்தித்து வருகின்ற, தமிழகத்த...
ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்!

ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  *'ராக் ஸ்டார் ' அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ் 'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில்... பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு.. பார்க்கிங்.. என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்...
கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ இசை ஆல்பம்

கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ இசை ஆல்பம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' இசை ஆல்பம் !!* இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் பாடலை  கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில் தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான, 'ச்சீ ப்பா தூ...' பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை அழைத்து...
சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு!

சரிகமா ஒரிஜினல்ஸின் ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ இசை ஆல்பம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
    *சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் வெளியீடு* இசையமைப்பாளர் தரண்குமார் இசையில், வாஹீசன் ராசய்யா ராப் எழுத்தில், 'ச்சீ ப்பா தூ...' சரிகமா ஒரிஜினல்ஸ் இசை ஆல்பம் வெளியானது !! சுயாதீன இசை ஆல்பங்களில் அடுத்தடுத்து பல அற்புதமான ஆல்பங்களை வழங்கி வரும் சரிகமா நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக, இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுதியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் திரை இசையைக் கடந்து தற்போது ரசிகர்கள் மத்தியில் இன்டிபென்டன்ட் இசைக்கான வரவேற்பு பெருகி வருகிறது. தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார், பல புதுமையான இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வருகிறார். அவரின் அடுத்த வெளியீடாக சரிகமா ஒரிஜினல்ஸின் 'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடல் வெளியாகி வரவேற்பைக் கு...
TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !!

TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் !! தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது. AR Group இதனை வழங்குகிறது. இந்த விருது விழாவில் தென்னிந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பணியாற்றும் திறமையான ஊடக நண்பர்களுக்கான நியூ இந்தியன் டைம்ஸ் மீடியா விருதுகள், சிறந்த தொகுப்பாளர் | சிறந்த நிருபர் | சிறந்த வீடியோ எடிட்டர் | சிறந்த வீடியோ கேமராமேன் | சிறந்த நகல் எடிட்டர் | சிறந்த குரல் ஓவர் கலைஞர் | சிறப்பு பிரிவு ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளது. TNIT குழுமத்தின் CEO ரகுபட் இந்த விருது விழாவை நடத்துகிறார். இந்த விழாவினை பற்றிய அறிமுகத்தை மீடியா நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக TNIT சார்பில் பத்திரிக்கை ஊடக ந...
தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாகக் களமிறங்கும் “PRK Productions” தயாரிப்பு நிறுவனம் !!

தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாகக் களமிறங்கும் “PRK Productions” தயாரிப்பு நிறுவனம் !!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
    தமிழ் திரையுலகில் பிரம்மாண்டமாகக் களமிறங்கும் “PRK Productions” தயாரிப்பு நிறுவனம் !! தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில், புதிய தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார். புதிதாகக் கால் பதித்திருக்கும், “PRK Productions” நிறுவனம் வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும், நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் துவங்கிய இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு ஆர் கே செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு மோகன மகேந...
கேரளாவில் நிலா என்ற பெயரில் புதிய ஒயின் அறிமுகம்

கேரளாவில் நிலா என்ற பெயரில் புதிய ஒயின் அறிமுகம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கேரள வேளாண் பல்கலை. தயாரித்துள்ள புதிய வகை ஒயினை நேரடியாக கடைகள் அமைத்து விற்பனை செய்ய மாநில அரசு திட்டம் மது விற்பனையை நிர்வகிக்கும் ‘பெவ்கோ’ நிறுவனம் மூலமே மது வகைகள் விற்க முடியும் என்ற விதிகள் இதற்காக திருத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் கேரளாவில் நிலா என்ற பெயரில் புதிய ஒயின் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரள வேளாண் பல்கலை. உருவாக்கியுள்ள புதிய வகை ஒயினை, மதுபானக் கடைகளின் நிர்வாகம் மூலம் அல்லாமல் நேரடியாக விற்பனை செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முந்திரி, மாம்பழம், அண்ணாசி, வாழை ஆகியவற்றைக் கொண்டு 12.4% - 14.5% அளவில் ஆல்கஹால் இருக்கும் வகையில், ‘நிலா' என்ற இந்த ஒயின் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்...