உங்களது விமர்சனங்கள் எனக்கு செருப்படி மாதிரி இருந்தது – விஜய் சேதுபதி
லெனின் பாரதி இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்திற்கு நீங்கள் அளித்த விமர்சனம் எனக்கு செருப்படி மாதிரி இருப்பதாக விஜய் சேதுபதி பேசினார்.
விஜய்சேதுபதி தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை. மலைவாழ் மூட்டை தூக்கும் தொழிலாளிகளின் வாழ்வியலை இயல்பாக கூறி இருக்கும் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி, ‘இந்த படத்தை இயக்குனர் லெனின் பாரதிக்காக தயாரிக்க சம்மதித்தேன். படத்தை பார்த்தபோது எனக்கு திருப்தியை தரவில்லை. படத்துக்கு செலவழித்த தொகை வந்தால் போதும் என்று நினைத்தேன். வாங்க யாரும் முன்வரவில்லை. சில லட்சங்கள் நஷ்டத்தில் வெளியிடலாமா என்றும் முயற்சித்தேன். முடியவில்லை. அந்த சூழலில் தான் சரவணன் வந்து ரிலீஸ் செ...









