வியாழக்கிழமை, நவம்பர் 26
Shadow

சினி நிகழ்வுகள்

காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, `ஒவ்வொரு வாரமும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என்...
விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில்  பேசிய  நடிகர் விஜய்,  சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும். மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியி...
“எங் மங் சங்” படம் மூலம் குழந்தைகளை கவர களமிறங்கிய பிரபுதேவா..!

“எங் மங் சங்” படம் மூலம் குழந்தைகளை கவர களமிறங்கிய பிரபுதேவா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் "எங் மங் சங்". இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். மற்றும் தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா இவர்களுடன் பாகுபலி வில்லன் பிரபாகர் இந்த படத்திலும் வில்லன் வேடம் ஏற்கிறார். கதை, திரைக்கதை, வசனம், எழுதி அர்ஜுன்.எம்.எஸ். இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா, பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட...
ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

ரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்துக்கு அரசியல் தலைவர்கள் பாராட்டு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
    இந்திய சமூகத்தில் புரையோடிப் போயிருக்கிற சாதியம் குறித்து உலக அளவிலான விவாதங்களைத் தொடங்கி வைத்திருக்கிறது “பரியேறும் பெருமாள்” திரைப்படம். “நீலம் புரொடக்சன்ஸ்” சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் மற்றும் தமிழன் பிரசன்னா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திராவிடர் வ...
சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்…  குற்றம்சாட்டும் நடிகர்

சைக்கோ கதை சிக்கல்… நம்ப வைத்து ஏமாற்றிய மிஷ்கின்… குற்றம்சாட்டும் நடிகர்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், வீடியோ
    சைக்கோ கதை எனக்காக உருவாக்கப்பட்டது - மிஷ்கின் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் - புதுமுக நடிகர் மைத்ரேயா குமுறல் பிரபல இயக்குனர் மிஷ்கின், தற்போது ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் எனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ லிங்க்... https://www.youtube.com/watch?v=-1F4PmrCv6Y...
ரொம்ப பெரிய வெற்றி இது…இந்த சந்தோஷத்தை கொண்டாடு  -கதிரை வாழ்த்திய விஜய்!

ரொம்ப பெரிய வெற்றி இது…இந்த சந்தோஷத்தை கொண்டாடு -கதிரை வாழ்த்திய விஜய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோருடன் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளத்தில் பலரும் ‘பரியேறும் பெருமாள்’ படம் குறித்து பகிர்ந்து வருகிறார்கள். இது விஜய்யின் தகவலுக்கு சென்றிருக்கிறது. இது தொடர்பாக கதிரைத் தொடர்பு கொண்டு விஜய் பேசியிருக்கிறார். இது குறித்து கதிர் கூறும்போது, ‘ஜெகதீஷ்க்கு போன் செய்து, தம்பி கதிர் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். வாழ்த்துகள் சொல்லிவிடு என்று சொல்லியிருக்கிறார். அப்போது நானும் ஜெகதீஷுடன் தான் இருந்தேன். உடனே இங்க தான் கதிர் இருக்கிறான். நீங்களே சொல்லிவிடுங்கள் என்று போனை என்னிடம் கொடுத்துவிட்டார். அப்போது, ரொம்ப சந்தோஷமா இருக்கிறது கதிர். உன்...
சிவாஜி பேரன் – சுஜா வருணி காதல் நவம்பரில் திருமணம்

சிவாஜி பேரன் – சுஜா வருணி காதல் நவம்பரில் திருமணம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
  ப்ளஸ் டூ என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்து பல படங்களில் நடித்துள்ள சுஜா வருணி மிளகா படத்தின் மூலம் பிரபலமானார். பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற சுஜா கடைசியாக இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் நடித்திருந்தார். தற்போது வாடீல் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுஜாவும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவும் காதலித்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. திருப்பதி கோவிலில் வைத்து இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சுஜா, இருவருக்கும் இடையே காதல் இல்லை என்றும் நட்பு மட்டும் தான் இருப்பதாக கூறினார். இந்த நிலையில், சுஜாவுக்கும், சிவாஜி தேவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இருவரு...
கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்

கீர்த்தி சுரேஷ் சிரிப்புக்கு ஸ்ரீரெட்டி கண்டனம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னையும் படுக்கையில் பயன்படுத்தி விட்டு நடிக்க வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார். பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பெயர் பட்டியலையும் வெளியிட்டார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் அந்த பட்டியலில் இருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் சங்கத்தினர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக திரண்டனர். தேசிய மகளிர் ஆணையமும் இந்த பிரச்சினையில் தலையிட்டது. ஐதராபாத்தில் பாதுகாப்பு இல்லை என்று ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாக தயாராகிறது. இந்த படத்தை தடை செய்யும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று நடிகர் ச...