நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதிமுகவில் தன்னை இன்று இணைத்துக் கொண்டார்.இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமியை அவரது வீட்டில் நடிகர் கஞ்சா கருப்பு இன்று சந்தித்தார். அப்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்து கொண்டார் என தெரிவித்துள்ளது....
சீனாவின் சான்யா நகரில் 68வது உலக அழகி போட்டி நடைபெற்றது. இதில் மிஸ் வேர்ல்டு 2018 போட்டி நடந்தது.இதில், மெக்சிகோவை சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் 2018-ம் ஆண்டின் மிஸ் வேர்ல்டு பட்டத்தை வென்றார். கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்....
முன்னெல்லாம் குழந்தை குட்டியோட போய் பாக்குற மாதிரியான படங்களில் நடித்து வந்த விமல் முதல்முறையா குழந்தை இல்லாம குட்டியோட போனாலும் குழந்தை குடுக்குற மாதிரியான படத்துல நடிச்சிருக்கார் அதுதான் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு.
படத்தின் பெயரைப்போலவே படம் தொடங்கியதில் இருந்து முடிகிறவரைக்கும் காம நெடியும்… காமெடியும் கலந்து கட்டி அடிக்கிறது… சில நேரங்களில் உச்சகட்ட ஆபாசம் தலை தூக்கினாலும் அந்த நேரத்திற்கு படம் பார்க்கிறவர்கள் சிரித்து விட்டு சே என்ன கருமம்டா இதற்கு போயா நாம் சிரித்தோம் என்று நினைக்கும் அளவுக்கு அத்தனை காமநெடிகள்…
கதைன்னு சொல்லனும்னா ரொம்ப கஷ்டம்… அதேநேரம், சிங்கம்புலி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான்னு படம் முழுக்க வந்து அவங்க அவங்க பார்ட்டை ஒழுங்கா செய்துட்டு போறாங்க. ஆனந்தராஜ் காமெடி வில்லனா வந்து வழக்கம்போல அதகளம் பண்ணாலும் மன்சூர் நிலைமைதான் ரொம்ப பாவம்… ஒரு பக்க...
விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். படப்பிடிப்பு தளங்களைத் தேர்வு செய்வதற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அட்லி, ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு ஆகியோர் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் அவர்கள் எடுத்த புகைப்படத்தை படக்குழு டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மெர்சல், சர்கார் படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ....
சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது. தல அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.
முதன் முறையாக கிராமிய பின்னணியில் நடிக்கும் அஜித், மதுரையின் காவல் தெய்வமாக விளங்கும் தூக்குதுரை என்ற கதாபாத்திரத்தில் மதுரை வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளார். இதனால், அஜித் ரசிகர்களிடையே இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி வெளியான நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பிரபல தென்னிந்திய தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி ...
கிறிஸ்துமஸ் பண்டிகையில் சீதக்காதி, மாரி–2, அடங்க மறு, கனா ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி–2 தயாராகி உள்ளது. இதில் தனுஷ்–சாய்பல்லவி ஜோடியாக நடித்துள்ளனர். பாலாஜி மோகன் டைரக்டு செய்துள்ளார். காதல், அதிரடி படமாக எடுத்துள்ளனர்
அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி–ராஷிகன்னா ஜோடியாக நடித்துள்ளனர். கார்த்திக் தங்கவேல் டைரக்டு செய்துள்ளார். இது வித்தியாசமான போலீஸ் கதையாக தயாராகி உள்ளது என்றும், முழுமையான அதிரடி படமாக இருக்கும் என்றும் ஜெயம்ரவி கூறினார்.
சீதக்காதியில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் வயதான நாடக கலைஞராக வருகிறார். மேலும் சில தோற்றங்களிலும் நடிக்கிறார். அவரது வயதான வேடம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பல மணிநேரம் இதற்காக மேக்கப் போட்டு நடித்துள்ளார். இந்த படம் அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்...
‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தை தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்று அழைக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த நவம்பர் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ‘ராம ராவண ராஜ்யம்’ என இந்தப் படத்துக்குத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ராமாயண காவியத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், ராம் சரண் ராமனாகவும், ஜூனியர் என்.டி.ஆர். ராவணனாகவும் நடிக்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், கீர்த்தி சுரேசிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
ராமாயணத்தை அடிப்படையாக கொண்ட கதை என்பதால் சீதை வேடத்தில் கீர்...
கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை... உலகெங்கும் டிசம்பர் 14 ம் தேதி வெளியாகிறது!
கலைப்புலி தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடிப்பில் தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பாக்கி முனை படம் வரும் டிசம்பர் 14-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
பக்கா ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள துப்பாக்கி முனையின் டீசர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார்.
துப்பாக்கி முனை படத்துக்கு தணிக்கைக் குழுவில் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
படத்தில் வேல.ர...
விமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்கAR.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம் இம்மாதம் 7 ம் தேதி வெளியாகிறது.
இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியானதில்லை.
கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100தியேட்டர்களுக்குள் தான் வெளியாகும்..ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
முதன் முறையாக உலகம் முழுவதும் 500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.
இந்த விஷயம் திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டுக் கொண்டிருக்கிறது....
லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான ‘2.0’ திரைப்படம் மாஸாக வெளியானது. செல்போன் டவர்களில் இருந்து வரும் கதிர்வீச்சு காரணமாக அழிந்து வரும் பறவைகள் இனத்தை பாதுகாப்பது குறித்த சமூக தகவலுடன் ரோபோட்டிக்ஸை இணைத்து சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக வெளியாக ‘2.0’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியாவில் அதிக பொருட் செலவில் அதிநவீன 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படத்தில், ஆசியாவிலேயே முதன்முறையக 4டி சவுண்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘2.0’ திரைப்படம் வெளியான 7 நாட்களில் உலகளவிலான பாக்ஸ் ஆபீஸில் ரூ.500 கோடி வசூலித்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது.
உலகளவிலான பாக்ஸ் ஆபீஸ் பட்டியலில் இணைந்த இந்திய திரைப்படமான ‘2.0’, 12வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு அமீர்கான் நடித்த ’தூம் 3’ படத்திற்கு அடுத்த இடத்தில் ரஜினிகாந்தின் ‘2.0’ திரைப்படம் ...