செவ்வாய்க்கிழமை, ஜூன் 16
Shadow

சினி நிகழ்வுகள்

சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து

சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர் அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார். அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என்று கூறியிருந்தார். மேலும் வைரமுத்து மீது புகார் அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, என்னுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் வழக்கு தொடர்வேன்’ என்றார். htt...
எழுமீன் டிக்கெட் விலையில் 30 லட்சம் மாணவர்களுக்கு சலுகை- தயாரிப்பாளர் அறிவிப்பு

எழுமீன் டிக்கெட் விலையில் 30 லட்சம் மாணவர்களுக்கு சலுகை- தயாரிப்பாளர் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம்...
நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள். ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது. இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்...
3வது மனைவி மீது 2வது மனைவி கொலைவெறி தாக்குதல் வேடிக்கை பார்த்தாரா மன்சூர் அலிகான்!

3வது மனைவி மீது 2வது மனைவி கொலைவெறி தாக்குதல் வேடிக்கை பார்த்தாரா மன்சூர் அலிகான்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் மன்சூர் அலிகான் அவர்களின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா, 2வது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான்(வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான்(வயது சுமார் 15) ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதா அவர்களை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர். இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், வஹிதா, லைலா அலிகான் மற்றும் மீரான் மீது புகார் தெரிவித்துள்ளார். பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 2வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது....
ஹீரோ ஆன நாட்டுப்புற பாடகர்!

ஹீரோ ஆன நாட்டுப்புற பாடகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் டி.வியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகராக சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடலை பாடி முதல் பரிசு வென்றார்கள் செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி தம்பதியினர். இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. அதற்கு பிறகு இந்த பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் அம்ரீஷ் இசையில் உருவாக்கப்பட்டது...யூடியூப்பில் இன்று வரை 13 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு களித்திருக்கிறார்கள். உலகம் முழுதும் பிரபலமான இந்த குழு “ கரிமுகன் “ என்ற படத்தின் மூலம் சினிமாவில் களமிறங்கி இருக்கிறார்கள்.. செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் யோகிராம், பாவாலட்சுமணன், விஜய் கணேஷ், வின்செண்ட் ராய், தீபாஸ்ரீ ரா.கா.செந்தில் இவர்களுடன் இயக்குனர் செல்ல தங்கையாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.  ஒளிப்பதிவு    எழில் பூஜித்.  ஏ விமல் புரொடக்சன்ஸ் சார்பாக T.சித்திரைச்செல்வி , M.ச...
பரியேறும் பெருமாள் கலைஞர் பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

பரியேறும் பெருமாள் கலைஞர் பார்த்திருந்தால் கொண்டாடியிருப்பார் – ஸ்டாலின் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை கொண்டாடியிருப்பார். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் நெகிழ்ச்சி. சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களை பெற்ற பரியேறும் பெருமாள் படத்தை இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டுகளித்தார். உடன் துர்காஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் , கிருத்திகா உதயநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் திரைப்படத்தை கண்டு களித்தனர். படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டினார். மேலும் அவர் கூறியதாவது "தலைவர் கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாக பாராட்டியிருப்பார். நிறைய வருடங்களுக்குப்பிறகு நான் பார்த்த சிறந்தபடம் . திரைப்படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று வாழ்த்தினார்....
காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

காற்றின் மொழி படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `காற்றின் மொழி'. படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, `ஒவ்வொரு வாரமும் ரிலீசாகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆயுத பூஜை நாளிலும் படங்கள் வரிசைக் கட்டியிருப்பதால், திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகிறது. அதனை தவிர்க்க படத்தை நவம்பர் மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்துள்ளோம். தீபாவளிக்கு பிறகு படம் ரிலீசாகும். படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்' என்...
விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

விஜயை பார்த்து அதிமுகவுக்கு பயமா..? அமைச்சர் மாபா பாண்டியராஜன் பதில்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. நடிகர் பிரசன்னா தொகுத்து வழங்கிய இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ். தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இசை வெளியீட்டு விழாவில்  பேசிய  நடிகர் விஜய்,  சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நிஜத்தில் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும். மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியி...