‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்..!
‘கீ’க்காக ‘இரும்புத்திரை’ ரிலீஸை தள்ளி வைத்த விஷால்!
ஜீவா, நிக்கி கல்ராணி நடிப்பில் அறிமுக இயக்குனர் காளீஸ் இயக்கியுள்ள படம் ’கீ’. மைக்கேல் ராயப்பனின் ‘குலோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் அவரது மகன் செராபியன் ராயசேவியர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/IWqeTxCdsrk
மைக்கேல் ராயப்பன் இதற்கு முன் தயாரித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்த, இது சம்பந்தமாக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார் மைக்கேல் ராயப்பன். இந்த விஷயத்தின் மீது ஏன் விஷால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று இவ்விழாவில் பேசு...









