புதன்கிழமை, ஜூன் 10
Shadow

சினி நிகழ்வுகள்

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் மிரட்டலான ஹாரர் திர்ல்லரான 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில் மிரட்டலான ஹாரர் திர்ல்லரான 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், 7G திரைப்படம் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !!   Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட மிரட்டலான ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு அதிரடியான போஸ்டர் மூலம் ஜூலை 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுதும் வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ஹாரர் என்றாலே காமெடி என்றாகிவிட்ட தமிழ் சினிமாவின் விதிகளை உடைத்து, ஒரு முழுமையான திரில் அனுபவம் தரும் வகையில், பிளாக் மேஜிக்கை வைத்து, ஒரு ஃபீல் குட் ஹாரர் படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஹாருன். புதிதாக தனக்குச் சொந்தமாக புதிய ...
அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் ‘டிஎன்ஏ’ படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அதர்வா-நிமிஷா சஜயன் நடிக்கும் 'டிஎன்ஏ' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! ஒலிம்பியா மூவீஸ், மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. இது அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 'டாடா' படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, எஸ். அம்பேத்குமார் தலைமையிலான இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து பல படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறது. அவற்றில் ஒன்றுதான் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘டிஎன்ஏ’. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு பெயர் பெற்றவரான அதர்வா முரளியின் இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எ...
R J பாலாஜியின் ‘புரொடக்சன் நம்பர் 3’!

R J பாலாஜியின் ‘புரொடக்சன் நம்பர் 3’!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் இணைந்து வழங்கும் 'புரொடக்ஷன் நம்பர் 3'!* *மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம் ஆர்‌. பி என்டர்டெய்ன்மென்ட் - ஆர். ஜே. பாலாஜி கூட்டணியில் தயாராகும் 'புரொடக்சன் நம்பர் 3'!* 'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌ இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்சன் நம்பர் 3' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை மில்லியன் டாலர் ஸ்டு...
AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் ‘மூன் வாக்’

AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் ‘மூன் வாக்’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *Behindwoods தயாரிப்பில், AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு 'மூன் வாக்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!!* இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், 'மூன் வாக்' எனும் அட்டகாசமான தலைப்பை, Behindwoods நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR ரஹ்மான், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா இணைகிறார்கள் என்ற நிலையில், இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் ...
‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று  வெளியாகிறது!

‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  உஸ்தாத் ராம் பொதினேனி, சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி ஆகியோரின் பான் இந்தியன் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் திரையரங்குகளில் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது! உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களின் மாபெரும் வெற்றிப் படமான ’ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் சீக்குவல் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்துடன் வருகிறார்கள். இந்தப் படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சுதந்திர தினம் படம் ரிலீஸுக்கு சரியான நேரம் என்று படக்குழுவினர் கருதுகின்றனர். ஏனெனில், ஆகஸ்ட் 15 வியாழன் அன்று விடுமுறையைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ரக்க்ஷா பந்தன்) மற்றொரு விடுமுறையும் வருவதால் மக்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுத்து, படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்யும் என்கின்றனர் படக்குழுவி...
“நான் வேற.. அப்பா வேற..” – விஜய் சேதுபதியின் மகன் சூர்யா!

“நான் வேற.. அப்பா வேற..” – விஜய் சேதுபதியின் மகன் சூர்யா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அதற்குள் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். விஜய் சேதுபதி மகன் சூர்யா நடிக்கும் 'பீனிக்ஸ்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. அந்த விழாவில் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பேசிய நீங்கள் தற்போது 'பீனிக்ஸ்' படத்தின் புரொமோசன் பணிக்காக அப்பாவை அழைத்தது ஏன் என்று சூர்யாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு அவர், தந்தையர் தினத்தன்று அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன். அதனால் அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்தேன். அப்பா மட்டும் வரவில்லை, என்னோட அம்மா சகோதரி என அனைவரும் வந்துள்ளனர், என பதிலளித்தார். பின்னர், அவர் வேறு... நான் வேறு.. எ...
ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு!

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'கருடன்' படக்குழு லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிப்பில், நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து, கடந்த மாதம் 31ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'கருடன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்று மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் படக்குழுவினர் சென்னையில் பிரத்யேக நன்றி அறிவிப்பு விழாவை ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் கே. குமார், படத்தை வழங்கிய ஃபைவ் ஸ்டார் செந்தில், விநியோகஸ்தர் சிதம்பரம், இயக்குநர் துரை. செந்தில்குமார், இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநரும், நடிகருமான சசிகுமா...
‘லாரா’  படத்தின் டைட்டில் லுக் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார்!

‘லாரா’ படத்தின் டைட்டில் லுக் சத்யராஜ் வெளியிட்டு வாழ்த்தினார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள். அதுபோலவே கட்டுக்கதைகளுக்கும் அளவில்லை.ஒரு சம்பவத்தைப் பற்றி மக்கள் பேசும்போது ஆளாளுக்குத் திரித்து விதவிதமாகக் கதை கதையாகச் சொல்வார்கள். அப்படி அவர்களால் கட்டப்படும் கட்டுக்கதைகள் சிலவேளை ஆச்சரியமூட்டும்; சில அதிர்ச்சியாகவும் இருக்கும். அப்படிச் சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் மர்மமாகவே இருந்தது. ஆனால் அது பற்றிய கதைகள் விவரங்கள் பல விதங்களில் பரவியிருந்தன. அப்படி ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் 'லாரா '. இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்ப...
அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் ‘பயமறியா பிரம்மை’

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு 69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா & பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம், நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர். பாடலாசிரியர் வெரோனிகா பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகிறே...
‘சென்னை 600028’, ‘அட்ட கத்தி’ போல ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”- இயக்குநர் அனந்த் நம்பிக்கை

‘சென்னை 600028’, ‘அட்ட கத்தி’ போல ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”- இயக்குநர் அனந்த் நம்பிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ’மீசையை முறுக்கு’ திரைப்படத்தில் ஆதியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்த அனந்த், இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகும் படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு வழங்குவதோடு, ரசிகர்களுக்கு தான் வழங்கும் பரிசு என்றும் இப்படத்தை குறிப்பிட்டுள்ளார். இதில், அனந்த் கதையின் மையக்கதாபாத்திரமாக நடித்திருந்தாலும், ஆர்ஜே விஜய், பவானி ஸ்ரீ, இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா, கே.பி.ஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத் உள்ளிட்ட பல புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் லீலா, குமரவேல், விஷாலினி போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களும் நடித்திருக்க, தயாரிப்பாளர் ஐஸ்வர்யா மிக முக்கியமான...