இரவு ஊரடங்கு விலகினால்தான் “வலிமை” ரிலீசாம்... மீண்டும் போனிகபூர்-வினோத் கூட்டணிக்கு ஓகே சொன்ன அஜீத்!
போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வலிமை'
இது பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல், இரவு நேர ஊரடங்கு, தியேட்டர்களுக்கு 50 சத்வீத இருக்கை கட்டுப்பாடுகள் காரணமாக பட வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் தள்ளி வைத்தது.
பல ஆண்டுகளாக வலிமை அப்டேட் கேட்டு காத்திருந்த ரசிகர்கள் ரிலீஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் ரிலீஸ் தள்ளிப்போன தகவல் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சூழலில் ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டால் வரும் மார்ச் மாத இறுதியில் வலிமை திரைப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வலிம...
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் ரஜினிகாந்த். பல கோடி ரசிகர்களை உலகம் முழுதும் வைத்திருக்கிறார்.
இவருடயை மூத்த மகள் ஐஸ்வர்யா. பிரபல சினிமா தயாரிப்பாளரான அவருக்கு நடிகர் தனுஷுக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இது ஒரு காதல் திருமணம்.
இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த குழந்தைகள் மீது ரஜினி எப்போதும் மிக பாசமாக இருப்பார்.
தமிழ்நாட்டில் உள்ள செலிபிரட்டி தம்பதிகளில் ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் முக்கிய இடமுண்டு. சமீப காலமாக இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், அதை நடிகர் ரஜினியே பல முறை சமரசம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தனுஷும் ஐஸ்வர்யாவும் மனமொத்து பிரிவதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்த தனுஷுன் ட்விட்டர் பதிவில், ‘18 வருடங்களா...
ஜெய்பீம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் சூர்யாவின் அடுத்த படம் எதற்கும் துணிந்தவன்.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ்,
சரண்யா பொன்வண்ணன் போன்ற பலர் நடித்து வெளிவரவிருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இருந்து வரிசையாக பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்
படத்தின் அடுத்த பாடல் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கு முன் விக்னேஷ் சிவன், யுகபாரதி இவர்கள் எழுதிய பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சும்மா சுர்ருனு என்ற பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த பாடலை எழுதியது நடிகர் சிவகார்த்திகேயன். இவர் இதற்கு முன்பு கோலமாவு கோகிலா படத்தில் எனக்கு இப்போ கல்யாண வயசு, நம்ம வீட்டு பிள்ளை படத்தில் காந்த கண்ணழகி போன்ற பல பாடல்களை ...
தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வரும் நடிகை டிம்பிள் ஹயாத்தி, தெலுங்கில் கல்ப் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தமிழில் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடித்த தேவி 2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற, நடிகர் தனுஷ் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான அத்ரங்கி ரே படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் டிம்பிள் ஹயாத்தி.
தற்போது நடிகர் விஷால் நடிப்பில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள டிம்பிள் ஹயாத்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை டிம்பிள் ஹயாத்தி அவருடைய வலைத்தளப் பக்கத்தில், அனைவர...
அருள்நிதியின் டி-பிளாக் டிரைலர் வெளியானது!
‘வம்சம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து ‘மௌனகுரு’, ‘டிமாண்டி காலனி’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘பிருந்தாவனம்’, ‘கே 13’ என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.
இந்நிலையில், நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கினார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது அப்படக்குழு.
இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது....
அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தை பாராட்டிய கமல்!
சுகுமார் இயக்கியத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. இப்படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடல் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ‘புஷ்பா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியதாக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நேரம் ஒதுக்கி எங்களின் ‘புஷ்பா’ திரைப்படத்தைப் பார்த்த அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசன் சாருக்கு மிக்க நன்றி. நீங்கள் மிகவும் இனிமையானவர். எங்கள் அனைவரது பணி குறித்தும் நீங்கள் கூறிய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி” என்று தெரிவித்து அதனுடன் சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்....
விஸ்வரூபம் - கதக் நடனக் கலைஞர் பிர்ஜூ மகாராஜ் காலமானார்!
புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இன்று காலமானார். சமீப காலமாக சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தார். 83 வயதான பிர்ஜூ மகாராஜ் நேற்றிரவு, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பிர்ஜூ மகாராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
பிரபல கதக் நடனக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரான பிர்ஜூ மகாராஜ் தனது திறமைக்காக நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது பெற்றுள்ளார். இவர் நடிகர் கமல்ஹாசன் நடித்து இயக்கிய விஸ்வரூபம் திரைப்படத்தில் 'உன்னைக் காணாத நான்' என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றி பலரின் பாரட்டுக்களை பெற்றவர் என்பது குறி...
சிம்புவின் மாநாடு படத்தை நக்கல் அடித்து மீம்ஸ் வீடியோ வெளியிட்ட பிரேம்ஜி!
அண்ணன் வெங்கட் பிரபு படத்தையே கலாய்த்து அவரது தம்பி பிரேம்ஜி பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.
டைம் லூப் திரைக்கதையில் உருவாக்கப்பட்ட மாநாடு படத்தில் ஒரே காட்சிகள் திரும்பத் திரும்ப இடம்பெறும். ஆனால் காட்சியமைக்கப்பட்ட விதம் மற்றும் எடிட்டிங், பின்னணி உள்ளிட்டவை காரணமாக மாநாடு படத்தின் ஒவ்வொரு சீன்களையும், ரசிகர்கள் ரசித்துப் பார்த்தனர்.
ஆனால், ஒரு சிலருக்கு மாநாடு படம் இன்று வரையில் புரியாமல் இருப்பதையும் மறுக்க முடியாது. அவர்களில் ஒரு ரசிகர் மாநாடு படம் தனக்கு பிடிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மாநாடு இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி, வெங்கட் பிரபுவையும் டேக் செய்துள்ளார்.
https://twitter.com/Premgiamaren/status/1482559144658083845?ref_...
அச்சமில்லை அச்சமில்லை.. துல்கர் சல்மானுக்கு குவியும் பாராட்டுகள்!
திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்து தற்போது இயக்குனராக களம் இறங்கியிருக்கும் பிருந்தா மாஸ்டர்.
இவர் துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்குகிறார்.
கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தை தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடர்சியாக இப்படத்தின் அறிவிப்புகள் வெளியானது.
இந்த திரைப்படம் பிப்ரவரி மாதம் 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஹே சினாமிக படத்தில் துல்கர் சல்மான் பாடிய அச்சமில்லை பாடல் வெளியாகி அனைவரின் பாரட்டுகளையும் பெற்று வருகிறார்....