சினி நிகழ்வுகள்
உறுதிகொள் பட விழாவில் கமலை வம்புக்கிழுத்த மன்சூர்..!
APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் " உறுதி கொள்"
கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது...
கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால்GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP.துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச.
தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினி...
இயக்குனர் பாதி தயாரிப்பாளர் மீதி கதை சொன்ன ” பண்டிகை”..!
டீ டைம் டாக்கீஸ் சார்பில் விஜயலக்ஷ்மி ஃபெரோஸ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா, கயல் ஆனந்தி, சரவணன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பண்டிகை'. ரங்கூன் படத்துக்கு இசையமைத்த விக்ரம் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். ஆரா சினிமாஸ் வாங்கி வெளியிடும் இந்த படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. படத்தை பற்றிய அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
பருத்தி வீரனுக்கு பிறகு நல்ல படம் அமைந்தால் நடிப்பது என்ற கொள்கையில் உறுதியாக இருந்து வருகிறேன். அதனாலேயே ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ஃபெரோஸ் சொன்ன கதை பிடித்து போய் இந்தப் படத்தில் நடித்தேன். மிகவும் நேர்த்தியாக படத்தை உருவாக்கியிருக்கிறார். நல்ல இயக்குனராக வருவதற்கான அத்தனை தகுதியையும் அவரிடம் ஆரம்பத்திலேயே பார்த்தேன். பெரிய இயக்குனராக வருவார் என்றார் நடிகர் சரவணன்.
அங்காடி தெரு படத்தை போல படம் முழுக...
இளவட்ட பசங்க ஆடியோ வெளியீட்டு விழா
ஆடியோவை தமிழ்நாடு கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் வெளியிட்டார்
200 வருடமாக நடந்து வரும் பிரச்சனையை அலசியிருக்கும் தோட்டம்..!
Blue eye productions என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு "தோட்டம்" என்று பெயரிட்டுள்ளனர். இந்தப்படத்தில் சிங்கை ஜெகன் நாயகனாக நடிக்கிறார்.
முக்கிய வேடத்தில் கே.எஸ்.மணியம் நடிக்கிறார்..
நாயகியாக தனா மற்றும் விவியாஷான் என்ற சீன நடிகையும் நடிக்கிறார்.
மற்றும் ரூபன் லோகன் தியாகு, ஜீவி. அகில்வர்மன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் அரங்கண்ணல் ராஜ் கூறியதாவது.
ஒவ்வொரு நாடும் பொருளாதார முன்னேற்றம் அடைவதே அந்த நாட்டின் விவசாய வருமானத்தைக் கொண்டே.
இலங்கை, மலேசியா மற்ற இதர நாடுகளும் இதில் அடங்கும்..
அந்த விவசாய கூலித் தொழிலாளியாகப் பயன்படுத்தப் பட்டவர்கள் பெரும்பாலும் இந்தியர்களே. அதிலும் குறிப்பாக தமிழர்களே.
அப்படி உழைத்து உருவாக்கிய தோட்டங்களும் பெரும் வணிக சந்தையாகி விட்டது..
தோட்டத் தொழிலாளர்கள் வாழ்க்கை மட்டும் அதே நிலையில் தான் இருக்கிறது.
அப்படி உருவாக்கிய தோ...
நன்றி சொன்ன “மரகத நாணயம்’ டீம்..!
நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுக்கும் முயற்சியில் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்து கடந்த வாரம் வெளியான படம் தான் 'மரகத நாணயம்'. ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முண்டாசுப்பட்டி ராம்தாஸ், டேனி ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வாரம் புதுப்படங்கள் வெளியாகி இருந்தாலும் அதே அளவு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மரகத நாணயம். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
உறுமீன் படத்தை தொடர்ந்து நாங்கள் எடுக்கும் அடுத்த படம் வயது வரையறையின்றி அனைத்து மக்களாலும் ரசிக்கப்படுகிற படமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம். அதற்காக நிறைய கதைகளை கேட்டேன். அதில் ஒன்று தான் சரவண் சொன்ன க...
வெங்கட் பிரபுவின் ” பார்ட்டி” மூலம் சில்வர் ஜூப்ளிஆண்டில் T.சிவா’ வின் ‘அம்மா கிரியேஷன்ஸ்
தமிழ் சினிமா உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையை பதித்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இவரது ஒவ்வொரு படமும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்பை உண்டாக்கும் . அவ்வாறான இவர் தனது அடுத்த படத்தின் விவரங்களையும் மோஷன் போஸ்ட்டரையும் வெளியிட்டுள்ளார் .
T.சிவா' வின் 'அம்மா கிரேஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு 'பார்ட்டி' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலன் 'அம்மா கிரேஷன்ஸ் ' தனது 25 ஆம் ஆண்டில் அடிவைக்க உள்ளது.
இளசுகளின் நாடியை என்றுமே நன்கு அறிந்து வைத்திருக்கும் வெங்கட் பிரபு 'பார்ட்டி ' என படத்திற்கு பெயரிட்டுள்ளதால் , அவரது ரசிகர்கள் குதூகலமடைந்துள்ளனர். இதில் பிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்க உள்ளார். KL பிரவீன் எடிட்டிங் செய்யவுள்ளார் .
இப்படத்திற்க்காக பெரும் நட்சத்திர பட்டாளத்தை வெங்கட் பிரபு ஒன்று சேர்த்துள்ளார். சத்யராஜ் , நாசர...


