ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 7
Shadow

சினி நிகழ்வுகள்

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்: வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்க நடவடிக்கை

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இயக்குனர் சசிக்குமாரின் மைத்துனர் அசோக்குமார், பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியிருந்தார். கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில், அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி கொடுமை காரணமாக அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அசோக்குமாரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போலீசார் தேடுவதை அறிந்த அன்புச்செழியன் குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அன்புச்செழியனுக்கு எதிராக காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்  அனுப்பி உள்ளது. வெளிநாடுகளுக்கு அவர் தப்பிச் செல்வவதை  தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  ...
தெலுங்கு பொட்டு 1 கோடிக்கு விற்பனை..!

தெலுங்கு பொட்டு 1 கோடிக்கு விற்பனை..!

CINI NEWS, HOME SLIDER, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், வீடியோ
  ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம்,ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே விற்பனையாவது என்பது வரம் மாதிரி. எல்லா படங்களும் விற்பனையாகி விடுவதில்லை. ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது. இந்த படத்தின் ஆடியோவை மலேசியாவில் வெளியிட்டார்கள். மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங...
ஹாலிவுட் படங்களை மிஞ்சும் இந்திரஜித் – இயக்குனர் கலா பிரபு

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் இந்திரஜித் – இயக்குனர் கலா பிரபு

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஹாலிவுட்லகூட இந்த அளவுக்கு ஒரு பியூர் அட்வெஞ்சர் படம் வந்திருக்காது!- இந்திரஜித் இயக்குநர் கலாபிரபு கலாபிரபு... தமிழ் சினிமாவின் தலையாய தயாரிப்பாளரின் மகன். நினைத்திருந்தால் முதலாளியாகவே இருந்திருக்கலாம். ஆனால் பிடிவாதமாக இயக்குநர் துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதித்துக் காட்டும் முனைப்புடன் இரண்டாவது படத்தை இயக்கி முடித்து விட்டார். படம் நாளை வெளியாகிறது. அதற்கு முன் கலாபிரபுவிடம் பேசியதில் இருந்து... இந்திரஜித் ட்ரெய்லர் பார்த்தாலே பெரிய பட்ஜெட்னு தெரியுதே? என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது. இந்தக் கதை எழுதும்போதே இவ்வளவு செலவு ஆகும்னு தெரியும். அட்வென்சர் படம்கறப்போ அந்த செலவு நியாயமானதா இருக்கும். டெக்னிக்கலா நிறைய விஷயங்கள் தேவைப்பட்டுச்சு. டெய்லி மூணு, நாலு கேமரா செட்டப்ல ஷூட் பண்ணினோம். ஆனா ஒரு படத்தோட வெற்றியை பட்ஜெட் மட்டுமே நிர்ணயிக்காதுனு ஒரு இயக்குநரா நம்புறேன். அதன...
விஜய் யேசுதாஸ் படைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்

விஜய் யேசுதாஸ் படைவீரன் படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
இவோக் சார்பாக மதிவாணன் தயாரிப்பில் பாரதிராஜா மற்றும் விஜய் யேசுதாஸ் நடித்து மணிரத்னம் உதவியாளர் தனா இயக்கும் படைவீரன் படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். முன்னதாக படைவீரன் படத்தை பிரத்தியேகமாக தனுஷிற்காக படக்குழுவினர் போட்டுக் காட்டியுள்ளனர். படம் தனுஷிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் படைவீரன் படத்திற்காக கார்த்திக் ராஜா இசையில், ப்ரியன் வரிகளில் உருவான "லோக்கல் சரக்கா பாரின் சரக்கா... ஊத்திக்குடிச்சா எல்லாம் ஒன்னுடா... " எனத் தொடங்கும் பாடலை தனுஷ் பாடி கொடுக்க, படம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தனுஷ் பாடிய பாடலை காட்சிப்படுத்தி படக்குழுவினர் படத்தை நிறைவு செய்துள்ளனர். படப்பிடிப்பிற்கு நேரில் வந்த தனுஷ் பாடல் படமாக்கப்பட்ட விதத்தை மிகவும் பாராட்டினார். படைவீரன் படம் டிசம்பரில் வெளியாகிறது....
ராஜுமுருகன் கதை, வசனத்தில் ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’புதிய படம்

ராஜுமுருகன் கதை, வசனத்தில் ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’புதிய படம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது.  தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜுமுருகன் கதை, வசனத்தை எழுதுகிறார்.திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குனர் சரவணன் ராஜேந்திரன். இவர் பாலு மகேந்திரா, கமல்ஹாசன், ராஜுமுருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இப்படம் குறித்து ராஜுமுருகனிடம் பேசிய போது ரங்கா எப்படி இந்த படத்திற்குள் வந்தார் என்கிற விஷயத்தை சுவாரஷ்யமாக சொன்னார்.  “எதிர்பாராத நேரத்தில் மழை பெய்வது போலத்தான் வாழ்க்கையிலும் சில ஈரமான சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிறது. அடர்த்தியான கதை, எளிமையும் அழகியலுமான திரைக்கதை, நல்ல தயாரிப்பாளர் எல்லாம் அமைந்துவிட்டது. இதன் பிறகு தொடர்ந்து கதாநாயகனுக்கான தேடலில் இருந்தோம். பலரையும் பார்த்து எதுவும் சரியாக அமையாமல் சலித்து போன நேரத்தில் நண்பர் ...
திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்

திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரி என்பவருக்கும், நடிகை நமீதாவுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலில் திருமணம் நடக்க உள்ளது. அதையொட்டி இருவரும் நேற்று மாலை ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்டு ரேணிகுண்டா வந்தனர். ரேணிகுண்டாவில் இருந்து கார் மூலம் திருப்பதிக்கு வந்தனர். திருப்பதி கோவிந்தராஜசாமி கோவில் எதிரே உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இருவருக்கும் நேற்று இரவு 8 மணியளவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் முக்கியமான நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. திருமண நிச்சயதார்த்தத்தில் ஒருசிலர் மட்டுமே பங்கேற்றனர்...
மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் திகில் படம் மல்லி..!

மஞ்சு தீக்‌ஷித் நடிக்கும் திகில் படம் மல்லி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  முத்து சன்னதி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ரேணுகா ஜெகதீஷ் தயாரிக்கும் படத்திற்கு“மல்லி” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ரத்தன் மெளலி நாயகனாக நடிக்கிறரர்.. இவர் 13ம் பக்கம் பார்க்க ,வெள்ளிக்கிழமை 13 ம் தேதி அரசகுலம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவர். நாயகியாக மஞ்சு தீக்‌ஷித் அறிமுகமாகிறார். இவர் மும்பையில் கிஷோர் நமீத் கபூர் நடத்தும் சினிமா பயிற்சி பள்ளியில் நடிப்பு  பயின்றவர். இந்த பள்ளியில் தான் ஹிருத்திக் ரோஷன் அல்லு அர்ஜூன் ரன்வீர்கபூர் போன்றவர்கள் நடிப்பை பயின்றவர்கள்.. இன்னொரு நாயகியாக தேஜுஸ்ரீ நடிக்கிறார்.  மற்றும் அருண், ரவிச்சந்திரன், நாகேஷ் சைமன், டெலிபோன்ராஜ்,  அம்சவேலு ஆகியோர் நடிக்கிறார்கள் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கிறார் ரேணுகா ஜெகதீஷ். வசனம் எழுதி இயக்குகிறார் வெங்கி நிலா. படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம் தன் காதலி மஞ்சு தீக்‌ஷித்துடன் உயிருக்கு ப...
படம் பார்க்காமலேயே அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று விசிறி பட விழாவில் பா.ஜ.க.வை இயக்குனர் S.A.சந்திரசேகர் வம்புக்கு இழுத்தார்

படம் பார்க்காமலேயே அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கிறார்கள் என்று விசிறி பட விழாவில் பா.ஜ.க.வை இயக்குனர் S.A.சந்திரசேகர் வம்புக்கு இழுத்தார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
  தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது. “வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார். விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடல...
பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

பாரதியார் போல மாறிய கமல் : வைரலாகிய புகைப்படம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே அதிமுக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தி வருகிறார். மக்களுக்கு நன்மை செய்ய முடியாவிட்டால் ஆட்சியைவிட்டு இறங்குங்கள் என்றும் கருத்து தெரிவித்தார். அத்துடன் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்ட தான் அரசியல்கட்சி தொடங்க உள்ளதாகவும் கூறி உள்ளார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏற்கனவே இருந்த தனது புகைப்படததை மாற்றிவிட்டு தற்போது, பாரதியார் போன்று முண்டாசு கட்டி முறுக்கு மீசை தோற்றத்தில் தன்னுடைய புதிய படத்தை புரபைல் பிக்சராக மாற்றி வெளியிட்டிருக்கிறார்....
சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சமந்தா ஜோடி சேர்ந்த படம் ரிலீஸ்..!

சிவகார்த்திகேயன் பிறந்த நாளில் சமந்தா ஜோடி சேர்ந்த படம் ரிலீஸ்..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் - பொன்ராம் - சூரி - டி.இமான் வெற்றிக் கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன், நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிப்பதாக கூறப்படுகிறது. இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தென்காசியில் தொடங்கியிருக்கிறது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....