வியாழக்கிழமை, நவம்பர் 26
Shadow

சினி நிகழ்வுகள்

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக ரீ-என்ட்ரி!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக ரீ-என்ட்ரி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
ஐஸ்வர்யா தனுஷ் இயக்குனராக ரீ-என்ட்ரி! ரஜினிகாந்தின் மகளும், தனுசின் மனைவியுமான ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வைராஜா வை ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார். 3 படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன், சுருதிஹாசன் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தில் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் பிரபலமானது. ‘வை ராஜா வை’ படத்தில் கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்து இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் நடிகர் தனுஷ் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு ஐஸ்வர்யா படங்கள் இயக்காமல் ஒதுங்கினார். இந்நிலையில் 6 வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ், தற்போது புதிய படம் இயக்க இருப்பதாகவும், திகில் கதையம்சம் உள்ள படமாக இது உருவாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கி...
நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வைத்திருந்தாரா?- வெளியான புதிய தகவல்!

நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வைத்திருந்தாரா?- வெளியான புதிய தகவல்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ஷாருக்கானின் மகன் போதை பொருள் வைத்திருந்தாரா?- வெளியான புதிய தகவல்! மும்பையில் இருந்து கோவாவுக்கு நேற்று முன்தினம் சென்ற சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுடன் விருந்து நடக்க இருப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து 25-க்கும் மேற்பட்ட போதை பொருள் தடுப்பு பிரிவினர் சுற்றுலா பயணிகள் போல அந்த கப்பலில் சென்றனர். நேற்று முன்தினம் இரவு நடுக்கடல் அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் வினியோகம் நடந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடியாக ஈடுபட்டு 2 பெண்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானும்  ஒருவர் ஆவார். அவர்கள் 8 பேரிடமிருந்தும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கைப்பற்றினார்கள். இதையடுத்து மும்பை அழைத்து வரப்பட்டு அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தடை ச...
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம்! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை ஆபிரகாம் (கோடங்கி) வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவி கவிதா பேசும் போது, "நிறைய நடிகர்களை நாம் தினம் சந்திக்கிறோம். ஆனால் சிலர் பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்கும் ஒரு நல்ல புரிதலோடு உறவுகளோடு பழகுவார்கள். அவர்களில் ஒருவர் தான் வினய் ''உன்னாலே உன்னாலே'' படத்திலிருந்து எப்படி அவரை சந்தித்தேனோ அன்று முதல் இப்போது வெளியாக உள்ள டாக்டர் படம் வரைக்கும் அவருடைய இயல்பும் குணமும் மாறவில்லை. இரண்டு தடவை வெவ்வேறு படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் போய்...
விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே!

விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
விசா பெறுவதற்காக தான் திருமணம் செய்தேன்- ராதிகா ஆப்தே! தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கபாலி படத்தில் நடித்து பிரபலமானவர் ராதிகா ஆப்தே. ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ராதிகா ஆப்தே அளித்துள்ள பேட்டியில், ‘‘நான் 8 வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த பெனட்டிக் டைலர் என்ற இசைக்கலைஞரை திருமணம் செய்து கொண்டேன். ஆனாலும் எனக்கு திருமண முறைகள் மீது நம்பிக்கையே இல்லை. அப்படியென்றால் எதற்காக நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று என்னை கேட்கலாம். நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன். இங்கிலாந்து இளைஞரை மணந்தாலும் இப்போது நான் இந்தியாவில்தான் இருக்கிறேன். அவ்வப்போது இங்கிலாந்துக்கு சென்று எனது கணவரை சந்தித்துவிட்டு வருகிறேன். சினிமாவில் நடிப்பதற்காக எனது கணவரை பிரிந்து நான் தன...
திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா!

திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது – கணவரை பிரிந்தார் சமந்தா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது - கணவரை பிரிந்தார் சமந்தா! தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து இருவரும் இதுவரை எந்த பதிலும் சொல்லாமல் வந்தனர். தற்போது சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவு...
சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சூர்யா நடித்திருக்கும் ‘ஜெய் பீம்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யா நடித்திருக்கும் 'ஜெய் பீம்' வெளியீட்டு தேதி அறிவிப்பு! தீபாவளிக்கு வெளியாகிறது சூர்யாவின் 'ஜெய் பீம்' ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக வெளியாகும் சூர்யாவின் 'ஜெய் பீம்' சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' நவம்பர் மாதம் 2ஆம் தேதியன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழுவதும் பிரத்யேகமாக வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ, இந்தியா மற்றும் 240 நாடுகளில், நவம்பர் 2ஆம் தேதி, சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'ஜெய் பீம்' படம் பிரத்யேகமாக வெளியாகிறது என அறிவித்திருக்கிறது. இயக்குனர் த. செ. ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் 'ஜெய் பீம்' திரைப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்திருக்கிறார்கள். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தில் பழங்குடி சமூகங்களுக்கு இடையேயான...
பிகினி உடையில் பூனம் பஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள்!

பிகினி உடையில் பூனம் பஜ்வா – வைரலாகும் புகைப்படங்கள்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
பிகினி உடையில் பூனம் பஜ்வா - வைரலாகும் புகைப்படங்கள்! ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தின் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரி’ படத்தில் நடித்தார். அதுக்கு அடுத்தப்படியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது....
ரஜினி படத்தில் நடித்த ஷெரின்!

ரஜினி படத்தில் நடித்த ஷெரின்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ரஜினி படத்தில் நடித்த ஷெரின்! செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷெரின். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது இவர் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஷெரின் நடிப்பில் தற்போது ‘ரஜினி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி இருக்கிறார். விஜய் சத்யா இதில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். மேலும் வனிதா, மூக்குத்தி முருகன், குக்வித் கோமாளி பாலா, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினி படத்தை ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பர்ஸ்ட்லுக் போஸ்டர், பாடல்கள், டீச...
விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்!

விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்! நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். ‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நான் ஈ படத்தில் நடித்த நானி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி ...
சமந்தா- நாக சைத்தன்யா  திருமண செலவு!  இத்தனை கோடியா?

சமந்தா- நாக சைத்தன்யா திருமண செலவு! இத்தனை கோடியா?

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
சமந்தா- நாக சைத்தன்யா திருமண செலவு! இத்தனை கோடியா? பல்லாவரத்து பொண்ணு என தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் முதன்முதலாக தனது பயணத்தை தொடங்கி பின் சின்ன சின்ன படங்கள் நடித்து இப்போது முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக ஹிட் படங்கள் கொடுத்த இவர் விரைவில் ஹிந்தியில் படம் நடிப்பார் எனப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கூட அண்மையில் நடிகை சமந்தாவுடன் நடிக்க விரும்புவதாகவும், பேமிலி மேன் 2 படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் கூறியுள்ளார். இந்த நேரத்தில் தான் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என வைரலாக செய்திகள் பரவி வருகின்றன. சமந்தா-நாக சைத்தன்யாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக கோவாவில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள நடந்தது. அக்டோபர் 6, 2017ம் ஆண்ட...