அரசியல் முடிவை அறிவிப்பார் ரஜினிகாந்த்: சகோதரர் சத்தியநாராயணராவ்
கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு திருமண மண்டபத்தில், மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், ரஜினியின் 68-வது பிறந்த நாள் விழா நடந்தது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணராவ் பங்கேற்று, 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக கொண்டாடி வருகின்றனர். அவர் மீது தமிழக மக்கள் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருந்தால் இப்படி கொண்டாடுவார்கள். நாங்கள் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தோமோ தெரியவில்லை. எனது தாய், தந்தை பிறந்தது கிருஷ்ணகிரி அருகே உள்ள நாச்சிகுப்பம் தான். எனவே, நானும், ரஜினியும் கிருஷ்ணகிரியை சேர்ந்தவர்கள் தான். இன்றும் நாச்சிக்குப்பத்தில் தான் எங்கள் உறவினர்கள் இருக்கிறார்கள்.
இந்த விழாவில் துப்புரவு தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த...









