இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் உருவான “டெத் இரயில்வே” ஹாலிவுட்டுக்கு சவால் கொடுக்குமா..?
குறைந்த செலவில் உருவாகி மிகச்சிறப்பான படமாக மக்களிடமும், சினிமா வட்டாரத்திலும் வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தை இயக்கிய தரணி ராசேந்திரன் அடுத்த படமாக உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டெத் இரயில்வே’.
இப்படத்தை ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜெ. கமலக்கண்ணன் தயாரிக்கிறார். சர்தக் கல்யாணி இசையமைக்கும் இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சேயோன், கிஷோர், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அசோக் செல்வன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.
கதைப்படி இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்திருந்த 1944-ம் ஆண்டின் பின்னணியில் இப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானியப் படைகள் பர்மா வழியாக இந்தியாவை நோக்கி முன்னேறிய காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களையும், இந்திய வீரர்கள் எதிர்கொண்ட போராட்டங்களையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது...








