சென்னையில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி கூட்டம்
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அஞ்சலிக் கூட்டம் சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக போனிகபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் மும்பையில் இருந்து வந்து இருந்தனர். அங்கு ஸ்ரீதேவியின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன. பிரார்த்தனையும் நடந்தது. இதில் தமிழ் திரையுலகினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தமிழகம் மட்டுமின்றி இந்திய திரைப்பட ரசிகர்களை கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மரணம் சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. தமிழகத்தின் சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கிராமம் தான் என்பதாலும், தமிழ் திரையுலகிலும், இந்தி திரையுலகிலும் கொடி கட்டி பறந்தவர் என்பதாலும், அவர் மரணம் அடைந்ததை பலர...









