வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம்

HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
சர்வதேச கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் தனுஷ், பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் பிரான்ஸ் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வித்தியாசமான கவர்ச்சி உடையணிந்து சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்து அனைவரின் பார்வையையும் கவர்ந்தனர். இதில் ஐஸ்வர்யா ராய்யின் புகைப்பங்கள் தற்போது வைரலாகி வருகிறது. பிரான்ஸில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஐஸ்வர்யா ராய் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். அதில், அவரது மகளுக்கு முத்தம் கொடுத்த புகைப்படமும் அடங்கும். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி இன்று கவர்ச்சியான உடையுடன் வந்த ஐஸ்வர்யா ராய், அனைவரையும் கவர்ந்தார்....
அப்போ எடுக்கல, ஆனா, இப்போ எடுத்துட்டேன் – சிங்கீதம் சீனிவாச ராவ்

அப்போ எடுக்கல, ஆனா, இப்போ எடுத்துட்டேன் – சிங்கீதம் சீனிவாச ராவ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி இருக்கும் படம் ‘நடிகையர் திலகம்’. இப்படம் தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சாவித்திரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். சாவித்ரியின் திரைப்பயணத்தில் முக்கியமான பலர் பற்றியும் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ். அவர் தனது முகநூல் பக்கத்தில் "பலரும் நீங்கள் சாவித்ரியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறீர்களா, எனக் கேட்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் நான் எடுத்ததில்லை. ஆனால், இப்போது எடுத்துவிட்டேன்" என எழுதி, சாவித்ரி வேடத்தில் இருக்கும் கீர்த்தி சு...
விஜய் ஆண்டனி நன்றி மறவாத மனிதர் – ஆர்.கே.சுரேஷ்

விஜய் ஆண்டனி நன்றி மறவாத மனிதர் – ஆர்.கே.சுரேஷ்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ஆர்.கே.சுரேஷ் பேசும்போது, ‘நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் லாபத்தில் ஓவர் ப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். கிருத்திகாவை பார்த்து பிரமித்தேன். கதையில் என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா. படத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தே...
4 ஹீரோயின்களோடு விஜய் ஆண்டனியின் “காளி”

4 ஹீரோயின்களோடு விஜய் ஆண்டனியின் “காளி”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம்
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் 'காளி'. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர். விஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ். ஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்கு...
சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா

சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
சைனா படத்தின் இசை வெளியீட்டு விழா ! இயக்குநர் ஹர்ஷவர்தனா இந்த படத்தினை  இயக்கியுள்ளார். இப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.வேத் சங்கர் சுகவனம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு  அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ’7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ – டிவைன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சூர்யன் FM இல் (SURYAN FM ) நடைபெற்றது. ஜூன் மாதம் இத்திரைப்படம் வெளிவர இருக்கிறது....
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைகிறார் மோகன்லால்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைகிறார் மோகன்லால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சூர்யாவுடன் இணைந்து கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார். தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைய உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த்  தெரிவித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் முதலில் சூர்யாவுடன் இணைந்து அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் தற்போது மோகன்லால் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் இந்த வார தொடக்கத்தில் இயக்குனரை சந்தித்ததாகவும், அதில் ஒரு பகுதியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தின் மூலம் சூர்யா மற்றும் மோகன்லால் ரச...
‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா..!

‘காலா’ படத்தில் நீட் தேர்வுக்கு பலியான அனிதா..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அதிக மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போராடி உயிர்விட்ட அனிதாவின் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வருகிறது. அனிதா கதாபாத்திரத்தில் ஜுலி நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது. இந்த படத்தில் வரும் தெருவிளக்கு என்ற பாடலில் இந்த காட்சி வருகிறது. தெருவிளக்கு வெளிச்சத்துல, நாங்க முன்னேறுவோம் என்று தொடங்கும் வரிகளுக்கு பின்னணியில் அனிதா படம் காட்டப்படுகிறது. மும்பை தாராவி பகுதியில் அனிதாவின் சுவரொட்டியை ஒட்டி வைத்து ‘டாக்டர் அனிதா, தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்’ என்று வாசகத்தை அதில் குறிப்பிட்டு உள்ளனர். மும்பை விழித்தெழு இயக்கம் என்றும் அந்த சுவரொட்டியின் கீழ் எழுதி உள்ளனர். நெல்லையில் இருந்து சென்று தாராவி பகுதியில் தாதாவாக மாறி அங்குள்ள தமிழ் மக்களுக்காக போராடுபவர் பற்றிய படமாக க...
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு

இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சினிமா படத்தொடக்க விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார். அப்போது பாரதிராஜா, ‘இந்து கடவுளான பிள்ளையாரை இறக்குமதி கடவுள் என்று பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்படுத்துவோரின் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்று ஆவேசமாக பேசினார். இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வி.ஜி.நாராயணன் என்பவர் இந்து கடவுளை பாரதிராஜா அவமதித்து விட்டதாக வடபழனி போலீசில் புகார் செய்தார். ஆனால் புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் வி.ஜி.நாராயணன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த பின்  இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி  உத்தரவிட்டார். இதனையடுத்து வடபழனி போலீசார் இயக்குனர் பாரதிராஜா மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்....
திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் – காலா ஹீரோயின் பளீச்

திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் – காலா ஹீரோயின் பளீச்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் - காலா ஹீரோயின் பளீச் 71 வது கேன்ஸ் திரைப்படவிழாவில் காலா பட  நடிகை  ஹூமா குரேஷி கலந்து கொண்டு அவரது சொந்த  அனுபவங்கள் ,குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- "இந்தியாவிலும்  உலகின் மற்ற இடங்களிலும்   பெண்கள்  துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது.. பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள்  பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் குறித்து  நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன் " சிறுமிகள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன இதற்கு "சட்டங்கள் மட்டுமே உதவ முடியாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் தன்னார்வமாகவும் இருக்க வேண்டும்.  "பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல...
திருடனாக மாறிய விஜய் ஆண்டனி

திருடனாக மாறிய விஜய் ஆண்டனி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக வெற்றிப் படங்களாக கொடுத்ததைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஆனார். எதிர்மறை தலைப்புகளையே தொடர்ந்து தனது படங்களுக்கு வைத்தார். இந்தியா - பாகிஸ்தான், எமன், சைத்தான் என்று வரிசை நீண்டது. அவரது நடிப்பில் காளி படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அவர் தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ என்ற தலைப்பிலும் ‘கொலைகாரன்’ என்ற தலைப்பிலும் நடித்துவருகிறார். அடுத்து ‘திருடன்’ என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கும் கதை. இந்த படத்துக்காக விஜய் ஆண்டனியை ஸ்டைலிஷாக மாற்றவிருக்கிறாராம் செந்தில்குமார்....