இயக்குனர் செல்வமணி திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதி… கேள்விகளை தவிர்க்கும் வழியா..?!
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் , ரத்தான இயக்குனர் சங்க செயலாளர், பெப்சி தலைவர் என பல பதவிகளில் இருக்கும் ஆர்.கே.செல்வமணி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கும் சங்கத்தின் முன்னாள் தலைவர் இயக்குனர் விசு, முன்னாள் செயலாளர் கவிஞர் பிறைசூடன் ஆகியோருக்கும் டிரஸ்ட் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்பு எழுத்தாளர்கள் சங்கத்தின் பணம் 36 லட்சத்தை விசு, பிறைசூடன் ஆகியோர் கையாடல் செய்து விட்டார்கள் என சங்கத்தின் இப்போதைய தலைவர் பாக்யராஜ் புகார் அளித்தார்.
அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வரும் இயக்குனர் விசு ஆடியோ மூலம் பாக்யராஜுக்கு பதில் சொல்லி இருந்தார்.
இந்த சூழலில் அந்த சங்கத்தின துணை தலைவர் ஆக உள்ள இயக்குனர் செல...









