திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

சினி நிகழ்வுகள்

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும்  ‘மதுரவீரன்’ பட பாடல்..!

சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் ‘மதுரவீரன்’ பட பாடல்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், முன்னோட்டம், வீடியோ
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘மதுரவீரன்’. பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்து இயக்கி வரும் இந்த படத்தில் ‘என்ன நடக்குது நாட்டுல’ என்று துவங்கும் ஒரு பாடல் இடம்பெறுகிறது. https://youtu.be/6yzZPzwLZwc சமீபத்தில் வெளியான இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமகாலத்தில் நம் சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரித்து காட்டும் விதமாக அமைந்துள்ள இப்பாடல் குறித்து இயக்குனர் பி.ஜி.முத்தையா கூறும்போது, ‘‘எனக்கு படத்தில் பட்டுக்கோட்டையார் பாடலை போல ஒரு பொதுவுடமை பாடல் தேவைப்பட்டது. இதை நான் கவிஞர் யுகபாரதியிடம் கூறியதும் அவர், ‘‘என்ன நடக்குது நாட்டுல’ என்று தொடங்கும் பாடல் வரிகளை எழுதி கொடுத்தார். நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இப்போது அந்த பாடல் மக்களிடம் சென்றடைந்துள்ளது. அரசியல் கட்சி பொதுகூட்டங்களிலும் இப்பாடல் தற்போது முக்கிய பங்கு...
ஜனவரி26ல் களமிறங்கும் உதயநிதியின் ‘நிமிர்’..!

ஜனவரி26ல் களமிறங்கும் உதயநிதியின் ‘நிமிர்’..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள்
ப்ரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நமிதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி முதலானோர் நடிக்கும் படம் ‘நிமிர்’. மலையாள ’மகேஷின்டே பிரதிகாரம்’ படத்தின் ரீ-மேக்காக உருவாகியுள்ள இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு மற்றும் போஸ்ட புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்து விட்ட நிலையில் இப்படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றுள்ளது. https://youtu.be/Us4SdcEh--4 ‘நிமிர்’ படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். தர்புகா சிவா மற்றும் அஜனீஷ் லோகநாந்த் இசை அமைக்கும் இந்த படத்தில் இடம் பெறும் ‘நெஞ்சில் மாமழை…’ என்று துவங்கும் பாடலை சமீபத்தில் எ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ‘நிமிர்’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....
கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்..!

கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
கீர்த்திசுரேஷ் குடும்பத்தோடு செல்பி எடுத்த விஷால் லிங்குசாமி இயக்கத்தில் விஷால்-கீர்த்திசுரேஷ் நடிக்கும் படம் ‘சண்டக்கோழி-2’. இதற்காக சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னிமில் மைதானத்தில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், விஷாலுடன் கீர்த்திசுரேஷ் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதை காண்பதற்காக கீர்த்திசுரேசுடன் அவருடைய அப்பா, அம்மா, பாட்டி ஆகியோர் வந்து இருந்தனர். அவர்கள் விஷால், இயக்குனர் லிங்குசாமி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ‘சண்டக்கோழி-2’ படப்பிடிப்பை காண குடும்பத்தினர் வந்ததால் கீர்த்திசுரேஷ் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். கீர்த்திசுரேஷ் சூர்யாவுடன் நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைக்கு வந்துள்ளது. இப்போது விஷாலுடன் ‘சண்டக்கோழி-2’ விக்ரமுடன் ‘சாமி ஸ்கொயர்’, சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, ஏ.ஆர்.முரு...
உலகின் மிகவும் அழகான நடிகராக ஹிரித்திக் ரோஷன் தேர்வு..!

உலகின் மிகவும் அழகான நடிகராக ஹிரித்திக் ரோஷன் தேர்வு..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
உலகின் மிகவும் அழகான நடிகராக ஹிரித்திக் ரோஷன் தேர்வு..! பன்னாடுகளை சேர்ந்த ஒரு சர்வதேச சர்வே நிறுவனம் 2018-ம் ஆண்டுக்கான ஹேன்ட்ஸம் நடிகர் யார்? என்பதை அறிய நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட் நாயகன் ஹிரித்திக் ரோஷன் முதல் நபராக தேர்வாகியுள்ளார். ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பாட்டின்சன், தைவான் நடிகர் காட்பிரே காவ், கிறிஸ் இவான்ஸ், டேவிட் போரியனஸ், கனடா நடிகர் நோவா மில்ஸ், ஹென்றி காவில், டாம் ஹிடில்ஸ்டன் மற்றும் சாம் ஹேவ்கான் ஆகியோரை பின்னுக்குத்தள்ளி இந்த இடத்துக்கு ஹிரித்திக் ரோஷன் தேர்வாகியுள்ளார் அவருக்கு இந்த சிறப்பிடம் அளிக்கப்பட்டது தொடர்பாக அந்த சர்வே நிறுவனம் தெரிவித்துள்ள விபரத்தின்படி, உயரமாகவும், கவர்ச்சிகரமாகவும் உள்ள ஹிரித்திக் ரோஷன், திரையுலகில் நுழைந்த காலத்தில் இருந்தே பல பெண்களை கவர்ந்திழுத்துள்ளார். கவர்ச்சிகரமான கண்களும், திடகாத்திரமான உடல்கட்டும் அவருடைய தோற்றத்...
கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..! உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம்

கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..! உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
கமலை ஒதுக்கி ரஜினியை வரவேற்கும் குருமூர்த்தி..! உடையும் ஆன்மீக அரசியல் ரகசியம் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னாலும் சொன்னார் ஷெட்டில் தூசி படிந்து கிடக்கும் வண்டிகளும், ரிப்பேர் ஆகி ஓரம் கட்டப்பட்ட வண்டிகளும் அவரச கதியில் பிரசாரத்துக்கு ரெடியாக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் ரஜினியோ தனிக்கட்சி, அதிலும் ஆன்மீக அரசியல் என்று பொடி வைத்து பேசியிருக்கிறார். தமிழகம் மதசார்பற்ற மாநிலம் என்ற நிலையில் ரஜினியின் ஆன்மீக அரசியல் எடுபடுமா என்ற விவாதம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பிஜேபியின் ஆதரவோடுதான் ரஜினி ஆன்மீக அரசியல் நிலைப்பாடு எடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் இல்லாமல் இல்லை. அதை மெய்ப்பிக்கும் விதமாக ரஜினியின் பாபா முத்திரையில் பாஜவின் தாமரை சின்னம் முன்பாகவும், அதற்கு பின்னால் பாபா முத்திரையும் இருந்தது. வெளிப்படையாக விமர்சனங்கள் எழுந்த்தும் பா...
தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை -வைரமுத்து விளக்கம்

தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை -வைரமுத்து விளக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஆண்டாளை பெருமைப்படுத்துவதே எனது நோக்கம், ஆண்டாள் பற்றிய தனது கட்டுரை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுள்ளது என கவிஞர் வைரமுத்து விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த கவிஞர் வைரமுத்துவின் அறிக்கை: “தமிழை ஆண்டாள் என்ற என் கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் மேற்கோள் காட்டிய ஒரு வரியின் ஒரு சொல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது; பரப்பப்பட்டும் இருக்கிறது. அருள் கூர்ந்து அந்தக் கட்டுரை முழுவதையும் தவறாமல் நீங்கள் படிக்க வேண்டும். அப்போது விளங்கும் என் கட்டுரை யார் மனதையும் புண்படுத்தாது என்று. குறிப்பாக என்னைத் தங்கள் வீட்டில் ஒரு சகோதரனாய் நினைக்கிற எத்தனையோ தாயுள்ளங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது என்று என் மனம் துடிக்கிறது. தேவதாசி என்பது ஆண்டாள் காலத்தில் மிக மிக உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட வார்த்தை. கடவுளுக்கு மட்டுமே சேவை செய்வதற்காகத் தம் மொத்த வாழ்வையும் ஒப்படைத்துக்கொண்ட உ...
பொங்கல் நாளில் விருந்தாக ரிலீஸ் ஆன  அருண் விஜய்யின்  ‘தடம்’ பட டீஸர்..!

பொங்கல் நாளில் விருந்தாக ரிலீஸ் ஆன அருண் விஜய்யின் ‘தடம்’ பட டீஸர்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருண் விஜய் நடித்துவரும் ‘தடம்’ பட டீஸர்..! ‘தடையறத் தாக்க’ படத்துக்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் ‘தடம்’. ஆக்‌ஷன் எண்டெர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார் அருண் விஜய். இந்தர் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். https://youtu.be/I4gIzCPYupk தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய மூன்று பேரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது  ...
நரகாசுரனை காக்க வைக்கும் அரவிந்த்சாமி..!

நரகாசுரனை காக்க வைக்கும் அரவிந்த்சாமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘துருவங்கள் 16’ என்ற தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் கார்த்திக் நரேன். இவர் இரண்டாவதாக இயக்கியுள்ள படம் ‘நரகாசூரன்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷண், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ளனர். ரான் யேதான் யோகன் இசையமைக்க, சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ ஷூட்டிங் நடைபெற்ற ஊட்டியில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்றுள்ளது. மொத்தம் 41 நாட்கள் படப்பிடிப்பைத் திட்டமிட்டு, அதன்படியே 41 நாட்களில் ஷூட்டிங்கை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன். இயக்குநர் கெளதம் மேனனுன், கார்த்திக் நரேனுடன் சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், அரவிந்த் சாமி டப்பிங் பேச வேண்டியது மட்டுமே பாக்கி. அதுவும் முடிந்துவிட்டால் சென்சாருக்கு அப்ளை செய்து...
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த்

என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்- ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்: நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும், தை முதல் நாளில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டும் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து வீட்டில் புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் டுவிட்டர் வாயிலாக தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு என் மனமார்ந்த பொங்கல் நல் வ...
வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

வாழ்வில் ஏற்றம் பெரும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்..! – கோடங்கி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, Photos, politics, REVIEWS, Trailer, Uncategorized, சினி நிகழ்வுகள், செய்திகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், முன்னோட்டம், விமர்சனம், வீடியோ
பிறந்தது தை..! வாழ்வில் மாற்றத் “தை” தொழிலில் ஏற்றத் “தை” வசதியில் உயரத் “தை” உலகுக்கு வீரத் “தை” தேவையான பணத் “தை” அளவில்லாத செல்வத் “தை” எல்லாரோடும் சமாதானத் “தை” எப்போதும் சந்தோஷத் “தை” குறைவில்லாமல் பெற இறைவனின் ஆசியும், நல்ல நண்பர்களின் துணையும் இருக்கட்டும். இனிய பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துகள்..! அன்புடன் கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்...