புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் கிடைக்குமா?- ஆர்யன் கான் தரப்பில் வாதாடும் முன்னாள் அட்டர்னி ஜெனரல்! மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் கடந்த 2-ந் தேதி போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலர் போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்யன் கான் மற்றும் சிலரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் கடந்த 8-ம் தேதி முதல் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி 2 முறை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2 முறையும் ஆர்யன் கானின் ஜாமீன் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், சொகுசு கப்பலில் போதை விருந்தில் பங்கேற்ற வழக்கில் கைது ச...
சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் புகார்!

சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தயாரிப்பாளர் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சிம்புவின் தாய், தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் புகார்! பட அதிபர் மைக்கேல் ராயப்பன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டேன். இந்த திரைப்படம் 50 சதவீதம் முடிவடைந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து, இந்த படத்தை இத்துடன் ரிலீஸ் செய்து விடலாம் என்றும், ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டால் நான் ஒரு திரைப்படத்தை இலவசமாக நடித்து தருவேன் என்றும் உறுதியளித்தார். எனவே நான் அந்த படத்தை வெளியிட்டேன். படம் சரியாக ஓடாததால் எனக்கு ரூ.15 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதன் பின்னர் என்னால் அடுத்த திரைப்படம் தயாரிக்க முடியவில்லை. அதேநேரம் சிம்பு தரப்பில், தன்னுடைய உறுதிமொழியை நிறைவேற்றா...
தமிழ் எழுத தெரியாத ரஜினி I பட்டாசு கொளுத்திய  மகள் சவுந்தர்யா

தமிழ் எழுத தெரியாத ரஜினி I பட்டாசு கொளுத்திய மகள் சவுந்தர்யா

CINI NEWS, HOME SLIDER, kodanki voice, சினி நிகழ்வுகள், வீடியோ
தமிழ் எழுத தெரியாத ரஜினி I பட்டாசு கொளுத்திய மகள் சவுந்தர்யா   https://youtu.be/BQK3P7oLVJ8
“தல கோதும்”.. ஜெய் பீம் படத்தின் லிரிக்கல் டிராக் வெளியீடு

“தல கோதும்”.. ஜெய் பீம் படத்தின் லிரிக்கல் டிராக் வெளியீடு

CINI NEWS, சினி நிகழ்வுகள்
  *தல கோதும்.. ஜெய் பீம் படத்தின் லிரிக்கல் டிராக் வெளியீடு* ஜெய் பீம் படத்தில் இடம்பெற்றுள்ள தல கோதும்.. எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் டிராக் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெய் பீம்' படத்தின் தமிழ் ட்ரெய்லர் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. ட்ரெய்லரே மெகா ஹிட் ஆன நிலையில் தற்போது படத்தின் 'தல கோதும்..' பாடலின் லிரிக்கல் டிராக் வெளியாகியுள்ளது. கேட்பதற்கு இதமாக இருக்கும் இந்தப் பாடலுக்கு சீன் ரால்டன் இசையமைத்துள்ளார். பிரதீப் குமார் பாடியுள்ளார். ராஜூமுருகன் எழுதியுள்ளார். 'ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ளது. ஆகையால், தெலுங்கில் 'சிருகாலி..' எனத் தொடங்கும் இதே பாடலின் லிரிக்கல் டிராக்கும் வெளியாகியுள்ளது. 'சிருகாலி..' பாடலை ஸ்ரீகாந்த் ஹரிஹரன் பாடியுள்ளார், நரசிம்மன் விருபுத்தூர் எழுதியுள்ளார். h...
தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை!

தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தனி நீதிபதியின் கருத்துகள் என்னை புண்படுத்தின: விஜய் வேதனை! நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கான இறக்குமதி வரி விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நடிகர்களுக்கு எதிராக கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதன்பின் கட்ட வேண்டிய வரி பாக்கியை செலுத்திவிட்டார். என்றாலும், தனி நீதிபதியின் கருத்துகளை நீக்க வேண்டும் என விஜய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மேல்முறையீடு மனு விசாரணையின்போது, பொதுப்படையாக நடிகர்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்து தேவையற்றது. உயர்நீதிமன்ற தனி நீதிபதி கருத்து தனிப்பட்ட முறையில் தன்னை புண்படுத்தியுள்ளது. 32.30 லட்சம் ரூபாய் கடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்டு விட்டது. கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில், அதை ...
தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் – புகைப்பட தொகுப்பு!

தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் – புகைப்பட தொகுப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தேசிய விருது பெற்ற தமிழ் கலைஞர்கள் - புகைப்பட தொகுப்பு! 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சிறந்த படம் அசுரன் தேர்வு செய்யப்பட்டு படத்தை தயாரித்த கலைப்புலி தாணுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் - தனுஷ், சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி, சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்), சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு) வழங்கப்பட்டது. தாதாசாகேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த்!   அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறும் தனுஷ்!   சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக துணை நடிகர் விருது பெறும் விஜய் சேதுபதி!   சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட...
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
பூஜையுடன் தொடங்கிய ஆர்யாவின் அடுத்த படம்! ’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ படங்களுக்குப் பிறகு, ஆர்யா நடித்துள்ள ‘எனிமி’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் அடுத்தபடம் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர். இன்று பூஜையுடன் தொடங்கிய இப்படத்தில் கதாநாயகியாக ’ஜகமே தந்திரம்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கிறார். மேலும் சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்....
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக ‘தாதாசாகேப் பால்கே’ விருதை பெற்றார் ரஜினிகாந்த்! திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதை இந்தி திரையுல உலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் அமிதாப்பச்சன் ஏற்கனவே பெற்றுள்ளார். மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கும், இயக்குனர் பாலச்சந்தருக்கும் இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்துக்கு 2019-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இன்று டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தாதாசாகேப் பால்கே விருதை ரஜினிகாந்துக்கு வழங...
நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…. ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!

நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது…. ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’!

CINI NEWS, HOME SLIDER, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நண்பன் மறைந்தாலும் நட்பு மறையாது.... ‘பால் வாக்கர்’ மகளின் திருமணத்தை நடத்தி வைத்த ‘வின் டீஸல்’! மறைந்த ஹாலிவுட் நடிகர் பால்வாக்கர் மகள் திருமண விழாவில், மணமகளுடன் பிரபல நடிகர் வின் டீஸல் நடந்து வந்த தருணத்தை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படம் மூலம் இந்திய ரசிகர்களின் மனம்கவர்ந்தவர்கள் நடிகர்கள் பால் வாக்கர் மற்றும் வின் டீஸல். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பால் வாக்கர் கார் விபத்து ஒன்றில் மரணமடைந்தார். இந்நிலையில், அவரது மகள் மிடோ வாக்கருக்கு நடைபெற்ற திருமணத்தில் தந்தை இடத்தில் நடிகர் வின் டீஸல், மணமகளுடன் மணமேடைக்கு வந்தது ரசிகர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் முதல் ஆறு பாகங்களில் நடித்தவர் பிரபல நடிகர் பால் வாக்கர். இவர் கடந்த 2013-ம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

குவியும் பட வாய்ப்பு… சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குவியும் பட வாய்ப்பு... சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்! தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றார். தற்போது தமிழில் ரஜினியுடன் ‘அண்ணாத்த’, செல்வராகவனுடன் ‘சாணிக்காயிதம்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அண்ணாத்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதுதவிர மலையாளத்தில் மோகன்லால் உடன் ‘அரபிக்கடலின் சிங்கம்’, தெலுங்கில் மகேஷ்பாபு உடன் ‘சர்காரு வாரி பாட்டா’, சிரஞ்சீவியுடன் ‘போலா சங்கர்’, நானிக்கு ஜோடியாக ‘தசரா’ போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால், நடிகை கீர்த்தி சுரேஷ், சம்பளத்தை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. நானி ஜோடியாக தசரா படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டதாகவும், ...