திங்கட்கிழமை, ஜூன் 8
Shadow

சினி நிகழ்வுகள்

2025 தொடங்கி 2037ம் ஆண்டுக்குள் 7 திரைப்படங்கள் ரிலீசாகும் ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2025 தொடங்கி 2037ம் ஆண்டுக்குள் 7 திரைப்படங்கள் ரிலீசாகும் ‘மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
ஏழு திரைப்படம் - ஒரு பிரபஞ்சம் - எல்லையற்ற புராணக் கதைகள் - கொண்ட 'மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் படைப்பான ' மகாவதார் நரசிம்மா' 2025 ஜூலை 25ஆம் தேதியன்று வெளியாகிறது ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும் க்ளீம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிமேஷன் படைப்பான மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தத் தொடர் 2025 ஆம் ஆண்டு மகாவதார் நரசிம்மாவுடன் தொடங்கி, 2037 ஆம் ஆண்டின் மகாவதார் கல்கி பார்ட் 2 உடன் நிறைவடைகிறது. மகாவிஷ்ணுவின் பத்து தெய்வீக அவதாரங்களை விவரிக்கும் வகையில் இந்த படைப்புகள் தயாராகி இருக்கின்றன. இந்த திரைப்படங்களின் வெளியீட்டு தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் * மகாவதார் நரசிம்மா (2025 ) * மகாவதார் ப...
‘DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

‘DNA’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    'DNA' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், தயாரிப்பாளர் S. அம்பேத்குமார் வழங்க, இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா முரளி - நிமிஷா சஜயன் முன்னணி வேடத்தில் நடித்து, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ஊடாக கடந்த இருபதாம் தேதியன்று வெளியான 'DNA' திரைப்படம் - விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி பயணிக்கிறது. இதை தொடர்ந்து படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழுவினர் நன்றி அறிவிப்பு விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்திருந்தனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பட தொகுப்பாளர் சபு ஜோசப் பேசுகையில், '' இந்த ஒரு தருணத்திற்காக நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளா...
கவனம் ஈர்க்கும் ‘நாக பந்தம்’ படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்

கவனம் ஈர்க்கும் ‘நாக பந்தம்’ படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  கவனம் ஈர்க்கும் 'நாக பந்தம்' படத்திற்கான பிரமாண்டமான அரங்கம் விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள். படத்தின் முன்னோட்டம், அதைத் தொடர்ந்து வந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விராட் கர்ணா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை மு...
சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர். சாருகேசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ பதிவின் மூலம் அனைவரிடமும் பேசியிருந்தார். சத்யராஜ் பேசும்போது," அனைவருக்கும் வணக்கம். ஒருநாள் இயக்குநர் சுரேஷ் கி...
“குட் டே” பட இசை வெளியீடு !!

“குட் டே” பட இசை வெளியீடு !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, Trailer, சினி நிகழ்வுகள், டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், வீடியோ
  “குட் டே” பட இசை வெளியீடு !! New Monk Pictures சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில், ஓர் இரவில் நடக்கும் காமெடி, கலந்த உணர்வுப்பூர்வமான, சமூக படைப்பாக உருவாகியுள்ள படம் “குட் டே”. ஜூன் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. நடிகர் கலை இயக்குநர் விஜய் முருகன் பேசியதாவது… இந்தப்படம் மிகச் சுவாரஸ்யமான படம், மிக நல்ல கதை. படம் பார்த்து விட்டேன் பிரித்திவி மிக அழகாகச் செய்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் கதை.உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி. ஜீவா சுப்பிரமணியம் பேசியதாவது… இந்தப்படத்தில் எனக்கு வித்திய...
விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா* அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'லவ் மேரேஜ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் - இயக்குநர் முருகானந்தம் பேசுகையில், '' இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜூனியர்கள் சீனியர்களை இயக்குவது போல் இருந்தது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்களை அவர்கள் கையாண்ட விதம் நன்றாக இருந்தது. ஒரு குடும்பம் போல் படப்பிடிப்பு தளம் கலகலப்பாக இருந்தது. ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் ஒவ்வொரு வித...
டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி.!

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி.!

HOME SLIDER, NEWS, politics, அரசியல், சினி நிகழ்வுகள், செய்திகள், தமிழக அரசியல்
  தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்த ஆவணங்கள் போதுமான ஆதாரங்களாக இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு டாஸ்மாக்கில் மதுபான கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல், மதுபான போக்குவரத்து டெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ரூ.1000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த முறைகேடுகளில் சில முக்கிய தொழிலதிபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சந்தேகித்தது. அதன்படி, ஆகாஷ் பாஸ்கரன், தமிழ் திரையுலகில் பிரபலமான தயாரிப்பாளராகவும், “Dawn Pictures” என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளவர். அவர் தயாரித்து வரும் படங்களில் தனுஷின் “இட்லி...
விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !

விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!* அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் சார்பில், தயாரிப்பாளர் விநாயகா அஜித் தயாரிப்பில், நடிகர் விமல் நாயகனாக நடிக்க, அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், கிராமப்புற பின்னணியில், காமெடி எண்டர்டெயினராக உருவாகும் புதிய படம், பூஜையுடன் துவங்கியது. காரைக்குடியில், படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியுள்ளது. மலையாளத் திரையுலகில் சமீபததில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற “ககனச்சாரி, பொன்மேன்” படங்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட் நிறுவனம், இந்த புதிய படம் மூலம், தமிழ் திரையு...
மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா!

மெட்ராஸ் மேட்னி’ படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    *'மெட்ராஸ் மேட்னி' படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா* மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் & இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருந்த மெட்ராஸ் மேட்னி எனும் திரைப்படம் ஜூன் மாதம் 6 ஆம் தேதியன்று வெளியானது. இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஊடகங்களும் நல்ல படைப்பு என்ற விமர்சனத்தை வழங்கி வருகிறது. இதனால் இந்த திரைப்படம் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும் , ரசிகர்கள...
‘மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

‘மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் - பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார். அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் - தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் காந்தம் போன்ற திரை தோற்றத்துடன் இணைந்து தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறார். இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவு...