எக்ஸாம் – இணையத் தொடர் விமர்சனம்
ஊட்டி மலைப்பகுதியில் காவல்துறை டிஎஸ்பி ஆக பொறுப்பேற்கச் செல்கிறார் அதிதிபாலன்.அவரைக் கடத்திவிட்டு அந்த இடத்துக்குச் செல்கிறார் துஷாரா விஜயன்.ஒரு காவல்துறை அதிகாரியைக் கடத்தியதோடு அவரைப் போல் பொறுப்பேற்கும் பெருங்குற்றத்தை துஷாரா விஜயன் செய்வது ஏன்? ஆள்மாறாட்டம் செய்து அதிகாரத்தைப் பிடித்து அவர் செய்யும் செயல்கள் என்னென்ன? என்கிற கேள்விகளுக்கான விடையாக விரிந்திருக்கிறது இந்த எக்ஸாம் தொடர்.
துஷாரா விஜயன், தொடரில் போலியான காவலதிகாரியாக நடித்திருக்கலாம்.ஆனால் நிஜ காவலதிகாரிக்குரிய மிடுக்கு,துணிவு உள்ளிட்ட எல்லா அம்சங்களையும் நடிப்புலும் உடல்மொழியிலும் நன்றாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.அவர் ஏன் அப்படிச் செய்கிறார்? என்கிற கேள்விக்கான விடை தெரியும்போது அவருக்கு ராயல் சல்யூட் அடிக்கத் தான் தோன்றுகிறது.
காவல்திகாரியாக நடித்...
இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!
எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்ப...
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!
KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது.
மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப...
இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்க...
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ பட டிரெய்லர் !!
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், கதையின் நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் நடிக்க, இயக்குனர் பா.ரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் பாராட்டு பெற்று வருகிறது.
பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
தற்போது வெளியான டிரெய்லரில் ஒரு தடகள விளையாட்டு வீரன் தனக்கான அங்கீகாரத்துக்கு கோர்ட் படியேறி போராடும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளும், வலுவான வசனங்களும் படத்தின் களத்தை வெளிப்படுத்துவதுடன், படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏ...
மெகா ஸ்டார் ராம்சரணின் “பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!
இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.
கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.
பல ஆண்டுக...
ப்ரைம் வீடியோ வழங்கும் “சிஸ்டம்” படத்தின் அதிரடியான டிரெய்லர் வெளியானது !!
தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.
ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான நீதிமன்ற த்ரில்லர் திரைப்படமான சிஸ்டம், அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ளது. பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஸ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ள...
சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா, சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.
சென்னைஸ் அமிர்தா கல்லூரியின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார். விமான நிலையம் போன்ற நிஜ அனுபவத்தை வழங்கும் ஏர்லைன் கேட்-பாஸ் சிமுலேஷன் பகுதி, சிறிய விமான நிலைய மாதிரி அமைப்பு, உண்மையான விமான அமைப்பு மற்றும் விமான எஞ்சின் பயிற்சி வசதிகள் ஆகியவை மாணவர்களுக்கு தொழில்துறை அனுபவத்தை நேரடியாக வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னைஸ் அமிர்தா குழுமத்தின் தலைவர் திரு.பூமிநாதன் அவர்கள் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 28 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித்தொகையை வழங்கினார்.
சென்னைஸ் அமிர்தாவின் தனித்துவமான பயிற்சி முறையை வெகுவாக பாராட்டிய ஸ்ரீலீலா, மாணவர்களுக்கு வழங்கப...
சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் ...