வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

சினி நிகழ்வுகள்

சுசீந்திரனின் சாம்பியன் டிசம்பரில் ரிலீஸ்

சுசீந்திரனின் சாம்பியன் டிசம்பரில் ரிலீஸ்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  இயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது ! இயக்குனர் சுசீந்திரனின் “ சாம்பியன் “ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் துவங்கியது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ஜீனியஸ் திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள சாம்பியன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டை மையமாக வைத்து வந்த “ வெண்ணிலா கபடி குழு “ , “ ஜீவா “ போன்ற வெற்றி படங்களை இவர் இயக்கியுள்ளார். தற்போது உருவாகி வரும் சாம்பியன் புட்பாலை மையமாக கொண்டது. இதில் புதுமுகம் ரோஷன் , மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு GK ரெட்டி , அஞ்சாதே நரேன் , ஜெயப்ரகாஷ் , RK சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை அரோல் குரொலி , ஒளிப்பதிவு சுஜ...
எழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி

எழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வையம் மீடியாஸ் வழங்கும் படம் ‘எழுமின்’. இதில் விவேக், தேவயானி, அழகம் பெருமாள், பிரேம், ரிஷி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் வி.பி.விஜி. தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் வி.பி.விஜி. இப்படம் (அக்டோபர் 18) உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதி படத்தில் நடித்த சிறுவர்கள் ஆறு பேரையும், இயக்குனர் வி.பி.விஜியையும் அழைத்து பாராட்டி உள்ளார்....
காற்றின் மொழி பாடல் எழுதிய போட்டியாளர்களோடு கலகல கலந்துரையாடல்!

காற்றின் மொழி பாடல் எழுதிய போட்டியாளர்களோடு கலகல கலந்துரையாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  காற்றின் மொழி - பாடல் எழுதும் போட்டி - தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்! காற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் தமிழகமுழுவுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். பாப்டா நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் தயாரித்து , ஜோதிகா நடித்து , ராதா மோகன் இயக்கியுள்ள...
திருட்டு விசிடிக்கு படமெடுக்கும் தியேட்டர்களுக்கு தடை! விஷால் அதிரடி..!

திருட்டு விசிடிக்கு படமெடுக்கும் தியேட்டர்களுக்கு தடை! விஷால் அதிரடி..!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியீட்டுள்ளார்கள். அதில், ஒரு திரைப்படத்தினை மிகுந்த பொருட்செலவில், அந்த திரைப்படத்தின் தயாரிப்பார் பல கஷ்டங்களை கடந்து தாயரிக்கிறார். அவ்வாறு தயாரித்த அந்த திரைப்படத்தினை கடும் சிரமங்களுக்கிடையேவெளியிடுகிறார். ஆனால் அந்த திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி மூலம் இணையதளங்களில் வந்து விடுகிறது இது திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டு தான் வெளியாகிறது என்று ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் 10 திரையரங்குகள் மூலம் திருட்டுத்தனமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டு அந்த திரையரங்குகளின் மீது சட்ட ரீதியாக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஆனால் மேலும் மேலும் தொடர்ந்து இது நடந்து கொண்டுதான் வருகிறது. திருட்டுத்தனமாக பைரஸி எடுக்கப்பட்டு ஆதாரத்துடன் உறுதி செய்யபட்ட தியேட்டர்கள்: ...
நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால்

நடிகைகள் பாலியல் புகாரை விசாரிக்க 3 பேர் குழு- விஷால்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  சமீபத்தில் இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் பொருட்படுத்தாமல் தனுஸ்ரீ தத்தா தொடர்ந்து பாலியல் புகாரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். அவருக்கு பெண்கள் அமைப்பு, பெண் எழுத்தாளர்கள், பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர். தனுஸ்ரீ தத்தாவைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மேலும் பல பெண் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகளை வெளியிட முன்வந்தனர். இதற்காக சமூக வலைதளத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக் தொடங்கப்பட்டது. அதில் பல பெண்கள் தெரிவித்த பாலியல் புகார்கள் வெளியிடப்பட்டன. முதலில் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் மீது பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்தார். தென்னிந்தியாவில் முதல் முறையாக பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் செய்தார். சென்ன...
பயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்

பயோபிக் படங்களில் நடிக்க ஆசைப்படும் பூஜா குமார்

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
மூத்த நடிகை வைஜெயந்தி மாலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவானால் அதில் கதையின் நாயகியாக நடிக்க ஆசைப்படுகிறேன் என்று ‘விஸ்வரூபம்’ புகழ் நடிகை பூஜா குமார் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,‘விஸ்வரூபம் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கிட்டத்தட்ட நான்காண்டு கால கடின உழைப்பிற்கு ரசிகர்கள் வெற்றி என்ற அங்கீகாரத்தை அளித்து படக்குழுவினரை மகிழ்ச்சியடைய வைத்தனர். இதனால் உற்சாகத்தில் திளைக்கிறேன். கமல்ஹாசனிடம் மருதநாயகத்தை எப்போது தொடங்கவிருக்கிறீர்கள்? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர், ‘அது போன்ற படங்களுக்கு கடின உழைப்பு, நீண்ட கால தயாரிப்பு, முன் தயாரிப்பு, ஆய்வு பணிகள் என அதிக உழைப்பை கேட்கும். அதனால் அதற்கு காலம் தான் பதில் சொல்லும்’ என்று என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஆனால் அவர் மருதநாயகத்தை தொடங்கினால், வாய்ப்பு கிடைத்தால் அதில் ...
நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

நானா படேகரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும் – தனுஸ்ரீ தத்தா

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  பிரபல பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் நடிகர் விஷாலுடன் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் பாலிவுட்டின் மூத்த நடிகரான நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் கூறியுள்ளார். 2008-ம் ஆண்டு ‘ஹார்ன் ஒகே பிளீஸ்’ என்ற இந்தி படத்தின் பாடல் காட்சி படமாக்கப்படும் போது அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்று குற்றம் சாட்டி இருந்தார். தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை நானா படேகர் மறுத்து வந்தார். தனு ஸ்ரீதத்தா பொய் கூறுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் நானா படேகர், நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர்சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகிய 4 பேர் மீது தனுஸ்ரீ தத்தா மும்பை ஒஹிவாரா போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து நானா படேகர் உள்பட 4 பேர் மீது போலீசார் 354 மற்றும் 509 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்...
சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து

சின்மயி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் – வைரமுத்து

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர் அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார். அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என்று கூறியிருந்தார். மேலும் வைரமுத்து மீது புகார் அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, என்னுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் வழக்கு தொடர்வேன்’ என்றார். htt...
எழுமீன் டிக்கெட் விலையில் 30 லட்சம் மாணவர்களுக்கு சலுகை- தயாரிப்பாளர் அறிவிப்பு

எழுமீன் டிக்கெட் விலையில் 30 லட்சம் மாணவர்களுக்கு சலுகை- தயாரிப்பாளர் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை - எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம்...
நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

நாங்கள் உண்மையில் காதலிக்க வில்லை – கௌரி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள், நடிகைகள்
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘96’. பிரேம் இயக்கியுள்ள இப்படத்தில் திரிஷா கதாநாயகியாகா நடித்திருக்கிறார். மேலும் இதில் விஜய் சேதுபதி, திரிஷாவின் பள்ளி பருவ காட்சியில் ஆதித்யா பாஸ்கரும், கௌரியும் நடித்திருந்தார்கள். ஆதித்யாவும் கௌரியும் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களை பெருமளவு கவர்ந்திருக்கிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. இதையடுத்து இவர்கள் இருவரும் உண்மையில் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவியது. இதையறிந்த கௌரி, நாங்கள் இருவரும் காதலிக்க வில்லை. 96 திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு கதாபாத்திரத்தில் காதலர்களாக நடித்தோம். திரைக்குப் பின்னால் இல்லை. எங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று கூறியிருக்கிறார்...