மாஸ்டர் பட தயாரிப்பாளர் மகளை மணந்த நடிகர் அதர்வா தம்பி!
நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகி உள்ள மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ மக்ள் சினேகா பிரிட்டோ ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை என்ற பெயரில் படம் இயக்கி இருந்தார்.
இவருக்கும் மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷுக்கும் சென்னையில் திருமணம் நடை பெற்றது.
வைரஸ் பீதி காரணமாக மிக குறைந்த எண்ணிக்கையில் உறவினர்கள், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு சொகுசு ரிசார்ட்டில் இந்த திருமணம் நடை பெற்றது....
இப்போதைக்கு தியேட்டர்கள் திறக்க வாய்ப்புகள் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
கொரோனா ஊரடங்கிற்குப்பிறகு கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தளர்வுகள் அளித்து வருகிறது. பெரும்பாலானவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 10-ந்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
வரும் 1-ந்தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில் ‘‘மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் தற்போதைக்கு தியேட்டர்களை திறக்கும் வாய்ப்பு இல்லை. கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப...
*கார்த்திக் ராஜு இயக்கத்தில் மீண்டுமொரு த்ரில்லர்! - நாயகியாக ரைசா வில்சன்!*
கொரோனா என்ற வார்த்தை அனைவருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விஷயத்தில் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆனால், சிலர் கொரோனா காலத்தையே தங்களுக்கு சாதகமாக்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அதில் இயக்குநர் கார்த்திக் ராஜுவும் ஒருவர். கொரோனா அச்சுறுத்தலா அவர் இயக்கி வந்த 'சூரப்பனகை' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. பரபரப்பாக ஓடிக்கொண்டே இருந்த கலைஞர்களுக்கு எப்போதுமே சும்மா வீட்டில் உட்கார்ந்திருப்பது பிடிக்காது.
கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியவுடன், குறைந்த குழுவினர் கொண்டு பணிபுரியும் வகையில் கதையொன்றை யோசித்து எழுதினார் கார்த்திக் ராஜு. அது நல்லதொரு த்ரில்லராக முடியவே, 'சூர்ப்பனகை' தயாரிப்பாளர் ராஜ்சேகர் வர்மாவும் நானே தயாரிக்கிறேன் என்று கூறவே உடனடியாக தொடங்கி முடித்தும் விட்டார்கள். கொரோனா காலத்தில் உருவா...
தமிழக சட்டசபைத்தேர்தலை மனதில் வைத்து "ஆர்ட்டிக்கள் 15" பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி
*போனி கபூரின் பே வியூ ப்ரொஜெக்ட் எல் எல் பி , உதயநிதி ஸ்டாலின்,இயக்குனர் அருண் ராஜா காமராஜா இணைந்து வழங்கும் படம்=இந்தியில் வெளிவந்து வெற்றி பெற்ற "ஆர்டிக்கல் 15' படத்தின் ரீ மேக்.*
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில் வேற்று மொழிகளில் வெற்றி அடைந்த பல படங்களை தங்களது மொழிகளில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்று உள்ளன. குறிப்பாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற பல படங்களை ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து பெரும் வெற்றி பெற்றவர் பிரபல தயாரிப்பாளரான போனி கபூர். சமீபமாக அவர் ஹிந்தியில் வெற்றி பெற்ற படங்களை தமி...
கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் இருந்து தற்போது வரை சினமா ஷூட்டிங் நடத்தப்படவில்லை. இதனால் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
மத்திய அரசுக்கும், அந்தந்த மாநில அரசுகளுக்கும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பில் இருந்தும் ஷூட்டிங் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ஜவடேகர், மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் சினிமா ஷூட்டிங் நடத்தப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நடைமுறைகள்:-
1. படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
2. 6 அடி சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
3. குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு படப்பி...
சினிமா படப்பிடிப்புக்கு அனுமதியளித்த மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்று அறிவித்த தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷகுமார் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கை விவரம்:
இன்றைய திரைத்துறையின் நிலை பற்றிய எனது பார்வை!
OTT
சமீப காலங்களாக பரவலாக பரபரப்பாக பேசப்படும் தளம். இந்த தளம் சாமான்ய தயாரிப்பாளர்களுக்கு ஆனதல்ல. பெரிய பட்ஜெட் படங்கள், மிகப் பெரிய நடிகர்கள், இப்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படங்களுக்கும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தயாரிப்பாளர்களுக்கும் மட்டுமே சாத்தியமாகக் கூடிய வியாபாரமாக கூடிய தளமாக கூறப்படுகிறது. அதையும் மீறி ஒரு சில படங்கள் திரையிடப்படுகின்றன, அதன் உண்மை நிலை... பங்கு சதவீத அடிப்படையில் அந்த படங்கள் திரையிடப்படுகிறது. அப்படி திரையிடப்படும் படங்களுக்கு எந்தவித விளம்பரமும், வருவாயை ஈ...
நேரடியாக டிஜிட்டல்: அமேசான் ப்ரைம் வீடியோ சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் வேர்ல்ட் பிரீமியரை அறிவித்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படத்தில் கதாநாயகனாக சூர்யாவும், கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் பாபு, பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர்.
சூரரைப்போற்று அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகளவில் திரையிடப்படப்போகிறது.
அமேசான் ப்ரைமின் சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடிகள், அமேசான் ஒரிஜினல்ஸ், அமேசான் பிரைம் மியூசிக்கில் விளம்பரமில்லா இசை, இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புக்களின் விரைவான டெலிவரி, டாப் டீல்களை உடனடியாக பெறுதல். பிரைம் ரீடிங்கில் வரம்பற்ற வாசிப்பு மற்றும் பிரைம் கேம...
வீட்டில் இருந்தபடியே 100 ரூபாய் செலவில் சினிமா பார்க்க வருகிறது அண்டாவ காணோம்!
IOS , Android, Fire Stick,Smart Tv, Web Browser போன்றவற்றில் எளிமையான முறையில் கிடைக்கும்வகையில் Jsk Prime Media புதிய OTT தளம் அறிமுகமாகிறது. தங்க மீன்கள், தரமனி மற்றும் எண்ணற்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளர் J Satish Kumar Jsk Audio மற்றும் Jsk Prime YouTube Channel வெற்றியை தொடர்ந்து அவரின் அடுத்த முயற்சியாக JSK PRIME MEDIA OTT வெளியாகிறது. இதில் நீங்கள் எப்போதும் பார்க்கும் வகையில் 50 திரைப்படங்கள் இலவசமாக இடம்பெறும்.அதில் மக்கள் நீங்கள் விரும்பிய திரைப்படங்களை சந்தாதாரர் கட்டணமின்றி இலவசமாக பார்க்கலாம். அதுமட்டுமில்லாது புத்தம் புதிய திரைப்படங்களும் வெளியாகவுள்ளன.
புதிதாக வெளியாகும் திரைப்படங்களை மட்டும் அந்தந்த...