திங்கட்கிழமை, நவம்பர் 23
Shadow

சினி நிகழ்வுகள்

தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      *ட்ரீம் நைட் ஸ்டோரீஸ் பிரமாண்ட துவக்கம்: தமிழக சினிமாவில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்!* புதிய தயாரிப்பு நிறுவனமாக மலர்ந்துள்ள ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், தனது முதல் படைப்பான "புரொடக்‌ஷன் நம்பர் 1" மூலம் திரைப்பட உலகில் தனது கால் பதிப்பைத் தெரிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய இயக்குனர் லோகன் இயக்கும் இந்த படத்துக்கான அறிமுக நிகழ்வு, திரையுலக பிரபலங்களும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரமுகர்களும் திரண்ட மகிழ்வான ஒரு இரவாக மாறியது. இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மின்னும் ஆட்டக்காரர் ஷிவம் டூபே, நிகழ்வின் துவக்கமாக விளக்கேற்றும் விழாவில் கலந்து கொண்டார். தொகுப்பாளருடன் நகைச்சுவை கலந்த உரையாடலில் ஈடுப...
வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது!

வடிவேலு – பகத் பாசில் நடிக்கும் ‘மாரீசன்’ ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *வடிவேலு - பகத் பாசில் நடிக்கும் 'மாரீசன்' ஜூலை 25ஆம் தேதி வெளியாகிறது* தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இருவரும் இணைந்து மிரட்டும் 'மாரீசன்' திரைப்படம் எதிர்வரும் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர். இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள 'மாரீசன் ' திரைப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன் , ரேணுகா, சரவணா சுப்பையா , கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஸ்ரீ ஜித் சாரங் படத்...
கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா   இணையும்  ROOT –”Running Out of Time’  கிரைம் த்ரில்லர்!

கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா இணையும் ROOT –”Running Out of Time’ கிரைம் த்ரில்லர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  Verus Productions-ன் புதிய SCI-FI கிரைம் த்ரில்லர் படமான ‘ROOT – Running Out of Time’ இணையும் கௌதம் ராம் கார்த்திக் மற்றும் அபார்ஷக்தி குரானா; பாலிவுட் நட்சத்திரம் அபார்ஷக்தி குரானா, ROOT படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம்; Verus Productions தனது முக்கிய படமான ‘ROOT – Running Out Of Time’ எனும் புதிய Sci-Fi கிரைம் த்ரில்லரை அறிவித்துள்ளது. சூரியபிரதாப் எஸ் இந்த படத்தை இயக்குகிறார், ’நாளைய இயக்குநர் – சீசன் 1’ மூலம் கவனத்தை ஈர்த்தவர், மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டராக பணியாற்றியவர். படத்தின் முதன்மை கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடிக்கிறார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவரின் இந்த புதிய முயற்சி எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உள்ளது. அவருடன் இணைந்து, இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தி...
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் புதிய படம் தொடக்கம்!

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் புதிய படம் தொடக்கம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  “Vyom Entertainments” நிறுவனம், இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் “Untitled Production No.1” என்ற பெயரில் தனது முதல் படத்தை 2–ஜூலை–2025 அன்று துவக்குகிறது. வெற்றிகரமான டிரிப் மற்றும் தூக்குதுரை ஆகிய படங்களுக்கு பிறகு, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த சினிமா பயணத்தை Untitled Production No.1 எனும் பெயரில் புதிய திரைப்படத்தை ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “Vyom Entertainments” நிறுவனம் தயாரிக்க, திருமதி விஜயா சதீஷ் அதை வழங்குகிறார். இன்று அந்த திரைப்படத்திற்கான பூஜையும், சில படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் புகழ்பெற்ற இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கிறார். அவருடன் பிரபல நடிகை குஷி ரவி இணைந்து நடிக்கிறார். இவர்களுடன், அனுபவமுள்ள நடிகர்கள் Y. G. மஹேந்திரன்...
முதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை காண வேண்டும் – தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !!

முதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை காண வேண்டும் – தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
      முதல்வர் ஸ்டாலின் திருக்குறள் திரைப்படத்தை காண வேண்டும் - தொல்.திருமாவளவன் வேண்டுகோள் !! பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை " Welcome Back Gandhi " என்ற பெயரிலும் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில், திருக்குறளை மையமாக வைத்து மிகப் பிரம்மாண்டமாக படைப்பாக வெளியாகியுள்ளது ‘திருக்குறள்’. இப்படத்தை இயக்குநர் A.J.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். தமிழக அரசியல் ஆளுமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், திரு திருமாவளவன், இன்று இப்படத்தினை பார்த்து, படக்குழுவினரைப் பாராட்டினார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் இப்படத்தை பார்க்க வேண்டுமென கோரிக்கையும் வைத்துள்ளார். படம் பார்த்த பிறகு திரு திருமாவளவன் கூறியதாவது… தமிழ் சமூகத்தில் போற்றப்பட வேண்டிய ஒரு படைப்பாக இன்றைக்...
விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்”  தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு

விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்” தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    “விஜயகாந்த்துக்கு அடுத்ததாக விமல் தான்”  தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் ஆர்.வி உதயகுமார் பாராட்டு* *“வித்யாசாகர் இசையில் இரண்டேகால் படங்கள் பண்ணியிருக்கிறேன்” ;  தேசிங்கு ராஜா-2 விழாவில் விமல் சொன்ன புது தகவல்* *“தேசிங்குராஜா முதல் பாகம் காமெடி கலாட்டா என்றால் 2ஆம் பாகம் காமெடி களேபரம்” ; எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரவிமரியாவின் பேச்சு* *“கார்த்திக் ரூட்டில் பயணிக்கிறார் விமல்” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சாம்ஸ் புகழாரம்* *“’பூவெல்லாம் உன் வாசம்’ பாதிப்பில் இருந்து மீண்டுவர எழிலுக்கு 25 வருடங்கள் பிடித்திருக்கிறது” ; தேசிங்கு ராஜா-2 இசை வெளியீட்டு விழாவில் வித்யாசாகர் கலாட்டா* *“மீட்டருக்கு மேலே நடிக்க கூடாது. காமெடி பண்ணக்கூடாது என உத்தரவு போட்டுவிட்டார்கள்” ; தேசிங்கு ராஜா-2 அறிமுக நடிகர் ஜனா சொன்ன தகவல்* *“இளையராஜாவ...
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் 'கயிலன்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு* *இயக்குநர் கே. பாக்யராஜ் 'கயிலன்' படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்* *BTK பிலிம்ஸ் பேனரில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அருள் அஜித் இயக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட திரையுலக முன்னணியினர் பங்கேற்பு* BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்ப...
வெட்டு ,குத்து ,மது, போதை என்று தீமையைப் பரப்பும் பெரிய பட்ஜெட் படங்கள்: தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு!

வெட்டு ,குத்து ,மது, போதை என்று தீமையைப் பரப்பும் பெரிய பட்ஜெட் படங்கள்: தயாரிப்பாளர் கே. ராஜன் பேச்சு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    வெட்டு ,குத்து ,மது, போதை என்று தீமையைப் பரப்பும் பெரிய பட்ஜெட் படங்கள்: தயாரிப்பாளர் விநியோகஸ்தர் கே. ராஜன் பேச்சு! எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் 'மகேஸ்வரன் மகிமை'.இப்படத்தின் கதையை எழுதி இயக்கி தயாரித்து ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் ஆர்.தவமணி. ஒரு முரட்டு சிவ பக்தனின் பக்தியை வெளிப்படுத்தும் வகையில் குடும்பம் சமூகம் சார்ந்த கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.இவ்விழாவில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன் மற்றும் சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்புச்செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இந்தப் படத்தின் கதை நாயகனாக ஹரிஹரன் நடித்துள்ளார்.ஸ்ரீ செழியன் அவருக்கு ஜோடியாக ந...
சிம்புவுடன் சேர்ந்ததால் எனக்கும் தனுஷுக்கும் உரசலா?   வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன்!

சிம்புவுடன் சேர்ந்ததால் எனக்கும் தனுஷுக்கும் உரசலா? வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், வீடியோ
  எனக்கும் தனுஷுக்கும் எந்த உரசலும் இல்லை வீடியோ வெளியிட்ட வெற்றிமாறன்!   சூர்யா நடிப்பில் வெற்றிமாற இயக்குவதாக இருந்த வாடி வாசல் தள்ளிப்போவதால் சிம்புவை வைத்து ராஜன் வகையறா என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கப்போகிறார். இதற்கான முன்னோட்ட ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றது. இந்த சூழலில் தனுஷ் நடித்த வடசென்னை பட்த்தின் பார்ட் 2 விரைவில் தொடங்கும் என சமீபத்தில் தனுஷ் அறிவித்தார்…இந்த பட்த்தையும் வெற்றிமாறனே இயக்க இருக்கிறார். இந்த சூழலில் சிம்புவுடன் வெற்றிமாறனுடன் இணைந்தது தனுஷுக்கு பிடிக்காமல் போனதால் ராஜன் வகையறா பட்த்தில் வடசென்னை பட சாயல் வந்தால் ராயல்டியாக 20 கோடியை தரவேண்டும் என தனுஷ் கேட்டதாகவும், அதற்கு அப்படியானால் வடசென்னை 2 இயக்க 100 கோடி சம்பளமாக தர வேண்டும் என வெற்றிமாறன் திருப்பிக் கேட்டதாகவும் தகவல்கள் பரவியது.       இந்த சூழல...
ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா”

ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின், புதிய பான் இந்தியா திரைப்படம் “மைசா” – ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய ஹீரோயின் சென்ட்ரிக் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அட்டகாசமான  ஆக்‌ஷன் அவதாரத்தை  வெளிக்காட்டிய போஸ்டர், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு“மைசா” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பிரபல  இயக்குநர் ஹனு ராகவபுடியின் உதவியாளராக பணியாற்றிய ரவீந்திர புள்ளே இப்படம் மூலம்  இயக்குநராக  அறிமுகமாகிறார். Unformula Films நிறுவனம் இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட்டில் பான் இந்தியா படைப்பாக இப்படத்தைத் தயாரிக்கிறது. அஜய் மற்றும் அனில் சாய்யபுரெட்டி தயாரிக்கும் இப்படத்தில், இணைத் தயாரிப்பாளராக சாய் கோபா பணியாற்றுகிறார். நேற்றைய அட்டகாசமான ...