அரசியல் சர்ச்சைகளை உருவாக்குமா ‘ சிவா மனசுல புஷ்பா’
ஸ்ரீவாராகி அம்மன் பிலிம்ஸ் சார்பில் வாராகி கதை எழுதி, இயக்கி தயாரித்து வரும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. இது முழுக்க முழுக்க அரசியல் படம். சமீப காலமாக மக்கள் அன்றாடம் பார்த்த, கேட்ட அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கதையாம். இந்த படத்தில் நாயகனாக வாராகி-யே நடிக்கிறார். அவருடன் புதுமுகங்கள் ஷிவானி, நதியாஸ்ரீ, சுதா, டி சிவா, தவசி ராஜ் உள்பட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் விழா சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே கே ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் உடனிருந்தனர்.
பின்னர் இப் படத்தைப் பற்றி பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநரும் ஹீரோவுமான வாராகி , “பல அரசியல் சர்ச்சைகளை நி...









