சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா!
சமுத்திரக்கனி படத்தில் செளந்தரராஜா!
“அப்பா” படத்திற்கு பின் சமுத்திரக்கனி தயாரித்து, இயக்கி நடிக்கும் படம், “தொண்டன்”. தொண்டன் படத்தில் சமுத்திரக்கனி, விக்ராந்த் உடன் சௌந்தரராஜாவும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சசிகுமார் நடித்து, அவரது பட்டறையில் இருந்து வந்த எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த, சுந்தரபாண்டியன் படம் தான், சௌந்தரராஜாவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. மீண்டும் தன்னுடைய தாய் குடும்பத்தின் வழிகாட்டியாகவும் தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளியாகவும் இருக்கிற இயக்குநர் சமுத்திரக்கனி படத்தில் நடிப்பது, தமிழ் சினிமாவில் தனக்கு நல்ல பெயரோடு இன்னும் பெரிய அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும் என்ற மகிழ்ச்சியில் இருக்கிறார், சௌந்தரராஜா.
Actor Soundararaja in Director Samuthirakani’s next!
After the movie “APPA”, Director Samuthirakani, is all set to p...

