செவ்வாய்க்கிழமை, நவம்பர் 24
Shadow

சினி நிகழ்வுகள்

நீலம் புரொடக்சன்ஸ் புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்!

நீலம் புரொடக்சன்ஸ் புதிய படத்தின் போஸ்டரை வெளிட்ட பா.இரஞ்சித்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இவர் 'நீலம் புரொடக்சன்ஸ்' தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு, ரைட்டர், குதிரைவால் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கும் படத்தை 'நீலம் புரொடக்சன்ஸ்' சார்பில் பா.இரஞ்சித் தயாரிக்கவுள்ளார். 'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் இப்படத்திற்கு 'J.பேபி' என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பா.இரஞ்சித் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார். அந்த போஸ்டரில் அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, லொள்ளு சபா மாறன் இடம்பெற்றுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது....
ஜேஜிஎம் படத்தின் போஸ்டர்!

ஜேஜிஎம் படத்தின் போஸ்டர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தேவரகொண்டா, தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் 'லைகர்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இப்படம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. அதன்பின்னர் மீண்டும் இந்த கூட்டணி புதிய படத்தில் ஒப்பந்தமாகிவுள்ளனர். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜேஜிஎம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கிறார்கள். பூரி ஜெகன்நாத் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்கி பல்வேறு நாடுகளில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் 3ஆம...
கே.ஜி.எப்-2 டிரைலர் செய்த புதிய சாதனை!

கே.ஜி.எப்-2 டிரைலர் செய்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கே.ஜி.எப். படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'யாஷ்' ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த  படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த டிரைலர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. அதாவது டிரைலர் வெளியான 24 மணி நேரத்திற்குள் நாட்டின் அனைத்து மொழிகளையும் சேர்த்து 109 மில்லியனை கடந்து சாதனை படைத்துள்ளது. ...
ஸ்கை டைவிங் சாகசம் செய்த பிரபல நடிகை!

ஸ்கை டைவிங் சாகசம் செய்த பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவரது கை வசம் இரண்டு தமிழ் படங்களும் உள்ளது. கிடைத்த இடத்தை விட கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கும் ஈஷா ரெப்பா, அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நடிகை ஈஷா ரெப்பா தனது கோடை விடுமுறையை துபாயில் கொண்டாடி வருகிறார். அங்கே அவர் விமானத்தில் இருந்து குதித்து செய்த ஸ்கை டைவிங் சாகச வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. https://twitter.com/YoursEesha/status/1508364156860530688?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1508364156860530688%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fcinem...
தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை!

தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பலரும் எதிர்ப்பார்த்திருக்கும் இப்படத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை இணைந்திருக்கும் தகவலை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரை தனுஷ் அவருடைய வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை எல்லி அவுரம் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருள்ளார். இதன்மூலம் இப்படத்தில் இ...
நிறைவடைந்த மாரி செல்வராஜின் மாமன்னன் முதற்கட்ட படப்பிடிப்பு!

நிறைவடைந்த மாரி செல்வராஜின் மாமன்னன் முதற்கட்ட படப்பிடிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர், அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் அனைவரின் மத்தியிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன்மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் மாமன்னன் படத்தை இயக்கவுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'மாமன்னன்' படப்பிடிப்பு தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை மாமன்னன் படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதனை இயக்குனர் மாரி செல்வராஜ் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள...
விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!

விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!

HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *நடிகர் விஜய் தேவரகொண்டா, இயக்குநர் பூரி ஜெகன்நாத் இணைந்து வழங்கும், பிரம்மாண்ட ஆக்சன் டிராமா ‘JGM’!* வரலாறு படைக்கும் கூட்டணி மீண்டும் இணைந்து,  ரசிகர்களுக்கு தங்களது அடுத்த மிஷனை 3.8.2023 அன்று தரவுள்ளார்கள். நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சரித்திரம் படைக்கும் இயக்குனர் பூரி ஜெகன்நாத் ஆகியோர் இணைந்து, உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் நடந்த ஒரு உற்சாகமான நிகழ்வில், தங்கள் அடுத்த திரைப்படமான “JGM”  படத்தை இன்று அறிவித்தனர். இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் டிராமா, பன் மொழி இந்திய பொழுதுபோக்கு திரைப்படம், நடிகர்  விஜய் தேவரகொண்டாவை இதுவரை கண்டிராத  பாத்திரத்தில் காண்பிக்கும், இது அவரது திரைப்பயணத்தில் அடுத்த திருப்புமுனையாக இருக்கும்! JGM திரைப்படத்தை சார்மி கவுர், வம்ஷி பைடிப்பள்ளி மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து  தயாரிக்க...
ரூ.500 கோடி வசூல் ஆர்.ஆர்.ஆர். படைத்த புதிய சாதனை!

ரூ.500 கோடி வசூல் ஆர்.ஆர்.ஆர். படைத்த புதிய சாதனை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட் பலர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ந்தேதி வெளியிடப்பட்டது. உலகம் முழுவதும் இத்திரைப்படம் கடந்த 3 நாட்களில் ரூ.500 கோடி வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது. இதுபற்றி திரைப்பட விமர்சகர் ஒருவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் புதிய சாதனையை படைத்து இருக்கிறது. ரூ.500 கோடி வசூல் செய்துள்ளது(தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது). இந்திய திரைப்பட புகழை எஸ்.எஸ். ராஜமவுலி மீண்டும் கொண்டு வந்துள்ளார் என தெரிவித்து உள்ளார். அதனுடன், குறிப்பு ஒன்றையும் வெளியிட்டு உள்ளார். அதில், விடுமுறை அல்லாத நாளில் மற்றும் கொரோனா காலத்தில் திரைப்படம் வெளியாகி உள்ளது என தெரிவித்து உள்ளார். இதுதவிர, கொரோனா பெருந்தொற்று காலத்தில் வெளியி...
பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு!

பிரபல தயாரிப்பாளர் மீது சிவகார்த்திகேயன் வழக்கு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிவுள்ள டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது அயலான் படத்தில் நடித்து வருகிறார். சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தை இயக்கினார். படம் கலவையான விமர்சனம் பெற்று வசூல் ரீதியாக சரிவை சந்தித்தது. இப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ரூ.11 கோடியை மட்டுமே கொடுத்ததாகவும் அதற்கான டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்தவும் உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்கு தரவேண்டிய சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான திய...
விழா மேடையில் அறை விட்ட சம்பவம் மன்னிப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்!

விழா மேடையில் அறை விட்ட சம்பவம் மன்னிப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, World News, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது இந்த நிலையில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவதற்காக இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு வந்திருந்தார். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகையின் கணவரும் ஹாலிவுட் நடிகருமான வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் முகத்தில் பளாரென அறைந்து, விழா அரங்கை அதிர்ச்சிக்குள்ளாக்கி...