புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

யுவனின் பிறந்தநாள் பார்ட்டியில் பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ் – வைரலாகும் வீடியோ!

யுவனின் பிறந்தநாள் பார்ட்டியில் பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ் – வைரலாகும் வீடியோ!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
யுவனின் பிறந்தநாள் பார்ட்டியில் பாடல் பாடி அசத்திய சிம்பு, தனுஷ் - வைரலாகும் வீடியோ! தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் #HBDYuvanShankarRaja என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், பிறந்தநாளையொட்டி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது திரையுலக நண்பர்களுக்காக சிறப்பு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் நடிகர்கள் சிம்பு, தனுஷ், அசோக் செல்வன், வைபவ், பிரேம்ஜி, இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் நடிகர்கள் தனுஷும், சிம்புவும் பாடல் பாடி அசத்தினர். நடிகர் தனுஷ் ‘மாரி 2’ படத்தில் இடம்பெற...
மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?!

மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மீண்டும் ‘96’ பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஜய் சேதுபதி?! பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 96. முழு காதல் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தன. தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன. இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தன் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது....
வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
வசந்தபாலன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்! இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வசந்தபாலன். இதையடுத்து வெயில், அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை பட பிரபலம் துஷாரா விஜயன் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளிப்பருவ நண்பர்களுடன் இணைந்து தயாரிக்கிறார். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிக்பாஸ் பிரபலம் சுரேஷ் சக்ரவர்த்தி ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதுதவிர நடிகர்கள் ஷாரா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் ஆகியோரும்...
இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
இந்தி பட ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ்! கதாநாயகிகளை மையமாக வைத்து உருவாகும் படங்களுக்கு பாலிவுட்டில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் கீர்த்தி சனோன் நடிப்பில் கடந்த மாதம் ஓடிடி-யில் வெளியான படம் ‘மிமி’. இது கடந்த 2011-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘மலா அய் ஹய்ச்சி’ படத்தின் இந்தி ரீமேக் ஆகும். லக்‌ஷ்மண் உடேகர் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பரம் சுந்தரி பாடல் பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. கீர்த்தி சனோன் நடிப்புக்கு பாராட்டுகளும் கிடைத்தன. இந்நிலையில், மிமி படம் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு மொழிகளிலுமே கீர்த்தி சனோன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேசை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வ...
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகும் பிரபல நடிகையின் மகள்! கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘தாமிரபரணி’ படத்தில் அறிமுகமானார் நடிகை பானு. கடைசியாக தமிழில் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து 2015-ம் ஆண்டு நடிகை பானுவுக்கும் தொழிலதிபரான ரிங்கு டோமி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு தற்போது கியாரா என்கிற மகளும் உள்ளார். அவ்வப்போது, தன்னுடைய மகளுடன் எடுத்து கொள்ளும்  புகைப்படங்கள் பானு சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், பானுவின் மகள் கியாரா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார். இயக்குனர் எம்.பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார்....
மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மொட்டை தலையுடன் மாஸ் காட்டும் பகத் பாசில்! சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். பகத் பாசிலின் வில்லன் போஸ்டர் இன்று வெளியானது. மொட்டை தலையுடன் மாஸாக இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த படக்குழு, முதல் பாகத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
நல்ல நேரம் பொறந்தாச்சு…. மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு!

நல்ல நேரம் பொறந்தாச்சு…. மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நல்ல நேரம் பொறந்தாச்சு.... மீண்டும் அதிரடியாக களமிறங்கும் வடிவேலு! இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி படப்பிடிப்பின்போது சிம்புதேவனுக்கும் வடிவேலுக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. படப்பிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் தனக்கு ரூ.10 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தரப்பில் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் காரணமாக வடிவேல் புதிய படங்களில் நடிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் 2 வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்காமல் இருக்கிறார். தற்போது இந்த பிரச்சினையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடிவேலுவிடம் கேட்டபோது, ‘மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வு போல் இருக்கிறது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத...
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டும் நடிகைகள்! வெப் தொடரில் நடிக்க சமீபகால கதாநாயகிகள் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். காரணம், சினிமாவை விட வெப் தொடர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். வெப் தொடர்களுக்கு தணிக்கை கிடையாது. படுகவர்ச்சியான வசனங்களும், ஆபாசமான காட்சிகளும் வெப் தொடர்களில் அனுமதிக்கப்படுகின்றன. படுக்கை அறை காட்சிகள் தாராளமாக இடம்பெறுகின்றன. இதற்காகவே அதில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கிறார்கள். அதிக சம்பளம் என்ற வசிய வலையில் சிக்கி, படுகவர்ச்சியாக நடித்துள்ள கதாநாயகிகள் வருமாறு:- 1. சமந்தா. இவர், ‘பேமிலி 2’ என்ற வெப் தொடரில் படுகவர்ச்சியாக நடித்து இருக்கிறார். 2. ரெஜினா கசன்ட்ரா. பெண்ணும் பெண்ணும் உறவு கொள்கிற ‘லெஸ்பியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 3. அமலாபால். தன்னை விட பல வயது மூத்த ஒரு ஆணுடன் உறவு வைத்துக் கொள்கிற பெண்ணாக,...
‘எல்லா கோட்டையும் அழிங்க… முதல்ல இருந்து ஆடுவோம்..’- சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி!

‘எல்லா கோட்டையும் அழிங்க… முதல்ல இருந்து ஆடுவோம்..’- சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
'எல்லா கோட்டையும் அழிங்க... முதல்ல இருந்து ஆடுவோம்..'- சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டும் சூரி! தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூரி ஆரம்ப காலகட்டத்தில் பலரால் உதாசீனப்படுத்தப்பட்டு, அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார். மேலும் பல்வேறு திரைப்படங்களில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் "பரோட்டா சூரி" கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகப் பிரபலமாக பேசப்பட்டார். மேலும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இதில் சூரியின் அற்புதமான நடிப்பில் உருவான "பரோட்டா காமெடி" இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இவ்வாறு சூரியின் திரைவாழ்க்கையில் முதல் திருப்புமுனை அமைந்த திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. அதன்பின் ரஜினிமுருகன், தேசிங்கு ராஜா, வருத்தப்படாத...
16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்!

16 தையல்… நிற்க முடியவில்லை… அர்ச்சனா உருக்கம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
16 தையல்... நிற்க முடியவில்லை... அர்ச்சனா உருக்கம்! சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் அர்ச்சனா. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் போட்டியாளராக பங்கேற்று கவனம் பெற்றார். சமீபத்தில் இவருக்கு மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை பெற்றதாக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அறுவை சிகிச்சைக்கு பிறகு அர்ச்சனா முதல் முறையாக யூடியூப் சேனலில் நேரலையில் வந்து பேசினார். அவரை பார்த்த ரசிகர்களோ, எப்பொழுது மீண்டும் வேலைக்கு வருவீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர், ‘என்னால் இப்போ கூட வர முடியும். ஆனால் என் வலது தொடையில் 16 தையல் போடப்பட்டிருக்கிறது. 16 தையல் போடப்பட்டிருப்பதால் கால் பலவீனமாக இருக்கிறது. ஷூட்டிங்கிற்கு வந்தால் 15, 16 மணிநேரம் நிற்க வேண்டும். என்னால் தற்போது அவ்வளவு நேரம் நிற்க முடியாது. நான்...