புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. இதே நிலை கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த நிலையில், பொங்கலுக்கு மாஸ்டர், ஈஸ்வரன் உள்ளிட்ட படங்கள் ரிலீசாக உள்ளதால், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்குமாறு நடிகர் விஜய் கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை அடுத்து திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களுக்கும் இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது....
தியேட்டர்களில் 100 சதவீத சீட் நிரப்ப அரசு அனுமதிக்க வேண்டும் “ஈஸ்வரன்” சிம்பு அறிக்கை

தியேட்டர்களில் 100 சதவீத சீட் நிரப்ப அரசு அனுமதிக்க வேண்டும் “ஈஸ்வரன்” சிம்பு அறிக்கை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! "ஈஸ்வரன்" பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்ன...
2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள், விவகாரங்கள் தொகுப்பு!

2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகள், விவகாரங்கள் தொகுப்பு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
  2020 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல்வேறு விவகாரங்கள் சர்ச்சையை ஏற்படுத்தின, அதன் முழு தொகுப்பை காணலாம். 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் திரையுலகமே முடங்கி இருந்தாலும், சர்ச்சைகள் குறைந்தபாடில்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை வெடித்துக்கொண்டே தான் இருந்தது. அதன் தொகுப்பை தற்போது காணலாம். பெரியார் சர்ச்சை ஜனவரி மாதம் 14-ந் தேதி நடந்த துக்ளக் பத்திரிக்கையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் குறித்து கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பலர் வலியுறுத்தினர். ஆனால் ரஜினி, நான் நடந்ததை தான் சொன்னேன், இதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூறினார். விஜய் வீட்டில் ரெய்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் நெய்வேலியில் நடந்து கொண்டிருந்தபோது, வருமான...
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு சின்மயி கண்டனம்!

பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு சின்மயி கண்டனம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சிவானியின் தாயார், அவரை திட்டியதற்கு, பாடகி சின்மயி டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்தனர். அதில் முதல் நபராக வந்த சிவானியின் அம்மா, சிவானியை வறுத்தெடுத்தார். சிவானியின் அம்மா நடந்து கொண்ட விதம் சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி பிக்பாஸ் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் சிவானியை அவரது அம்மா கண்டித்ததற்கு சிலர் பாராட்டு தெரிவித்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி என்று பார்க்காமல் தனது மகளை இவ்வாறு திட்டி அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது என்றும் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாடகி சின்மயி இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில், “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பதில்லை, ஆனால் அந்த தாய் தன் மகளை...
திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் – மோகன்லால் அறிவிப்பு

திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் – மோகன்லால் அறிவிப்பு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கொலை செய்த மகளை காப்பாற்ற போராடும் தந்தை பற்றிய கதை. ரூ.5 கோடி செலவில் உருவான இந்த படம் ரூ.75 கோடி வசூல் குவித்தது. இதன் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. திரிஷ்யம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது 7 வருடங்களுக்கு பிறகு திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். அ...
இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு – இயக்குநர் சுசீந்திரன்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  இன்னும் சில வருடங்களில் நடிப்பில் இந்தியாவிலேயே முதல் இடத்திற்கு வருவார் சிம்பு - இயக்குநர் சுசீந்திரன் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியதாவது: படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, இதேமாதிரி போய்கிட்டே இருக்க வேண்டும் என்று ஆசை. படம் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள். இயக்குநர் பாரதிராஜா பேசும்போது, நான் பார்த்து வளர்ந்தபிள்ளை சிம்பு. நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு. நான் பார்த்து பழகிய சிம்பு வேறு. தங்கமான பையன். அவரைப் பற்றி சொன்னார்கள். ஆனால், 7 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 6.45க்கே வந்துவிடுவார். இப்படம் விரைந்து முடிப்பதற்கு இதுவே உதாரணம். மிகவும் ஒழுக்கமானவர் சிம்பு. இப்படத்தின் பாடல்கள் எப்படி நன்றாக வந்திருக்கிறதோ அதுபோன்ற படமும் நன்றாக வந்த...
21திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள “சா” படத்தின் முதல் பார்வை

21திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள “சா” படத்தின் முதல் பார்வை

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *21திரைப்பிரபலங்கள் வெளியிட்டுள்ள "சா" படத்தின் முதல் பார்வை* சாதீயக் கொடுமைகளின் கோரமுகமாய் விளங்கும் ‘ஆணவக் கொலை’யை, மையக் கருவாய்க் கொண்டு ‘சா’ எனும் ஒற்றை எழுத்தில் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஒன்று தயாராகி வருகிறது. Wafi Group Middle East நிறுவனத்தின் சார்பில் கேராளாவை சேர்ந்த சஞ்ஜீவ் மாதவன் தயாரித்துள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பேரரசு,நடன இயக்குனர் அஜய் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.இ.சபரி. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் அவுஸ்திரேலியாவில் வாழும் ஈழத்து இசையமைப்பாளர் அருண்குமாரசுவாமி. இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார் கவிஞர் அஸ்மின். இப்படத்தின் முதல் பார்வை புத்தாண்டு தினத்தில் இந்தியா,இலங்கை, அவுஸ்திரேலியா மூன்று நாடுகளில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இலங்கையில், இப்படத்தின் முதல்பார்வையி...
ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் டிசைனும் ஹாலிவுட்டில் சுட்டதாம்!

ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் டிசைனும் ஹாலிவுட்டில் சுட்டதாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டர் டிசைனும் ஹாலிவுட்டில் சுட்டதாம்! ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது? என்று ரசிகர்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பிவந்தனர். இந்தநிலையில், செல்வராகவன் ஆயிரத்தில் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் புத்தாண்டு தினமான இன்று தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024இல் வெளியாகும் என்று, அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார் செல்வராகவன். செல்வராகவனின் இந்த ட்விட்டை பகிர்ந்த நடிகர் தனுஷ், “ இந்த படம் செல்வராகவனின் கனவு, இதற்காக நீண்ட காலமாக காத்திருக்கிறோம். இளவசரன் மீண்டும் 2024இல் வருவான்” எனத் தெரிவித்துள்ளார். செல்வராகவன் வெளியிட்ட ஆயிரத்தில் ஒருவன் 2 பட போஸ்டர் டிசைன் ஹாலிவுட் படத்தின் போஸ்டர் காப்பி என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து கழுவி ஊற்றி விட்டனர். ஒரு டிசைன் கூட சொந்த கற்பனையாக உ...
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!

பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
பூஜா குமாருக்கு கல்யாணமாகி,குழந்தையே பிறந்தாச்சா!! தமிழ் சினிமாவில் 2020 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். மேலும் இவர் கமல் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற  பிளாக்பஸ்டர் படமான விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பு ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மேலும் இவர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். நடிகை பூஜா குமார் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகை பூஜாகுமார் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவர் விஷால் கோஷி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. இந்த நிலையில் பூஜா குமார்...
நடிகை நக்மா குடும்பத்தாருடன் சூர்யா – ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம்!

நடிகை நக்மா குடும்பத்தாருடன் சூர்யா – ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நக்மா குடும்பத்தாருடன் சூர்யா - ஜோதிகா புத்தாண்டு கொண்டாட்டம் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஜோதிகாவின் சகோதரியும் நடிகையுமான நக்மா குடும்பத்தாருடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா இருவரையும் பார்த்த ரசிகர்கள் இருவரும் என்ன இப்படி வளர்ந்து விட்டார்கள் என்று வியப்படைந்து இருக்கிறார்கள்    ...