புதன்கிழமை, நவம்பர் 25
Shadow

சினி நிகழ்வுகள்

ஆதிராஜன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்தேவா இசையில் மிரட்டலாய் வரப்போகும் “மாஸ்க்”

ஆதிராஜன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்தேவா இசையில் மிரட்டலாய் வரப்போகும் “மாஸ்க்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம்: ஆதிராஜன் தயாரித்து இயக்கும் "மாஸ்க்" ! தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான "சிலந்தி" வெற்றிப் படத்தை இயக்கிய ஆதிராஜன், ரணதந்ரா(கன்னடம்), அருவா சண்ட படங்களைத் தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் நான்காவது படம் "மாஸ்க்". நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கும் சில மனசாட்சியற்ற மருத்துவர்களால் ஏற்படும் விபரீத நிகழ்வுகளும் அதனால் உருவாகும் பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும் பரபரப்பாக சொல்லும் கதைக்கு, நொடிக்கு நொடி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாகரீக சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டும் வகையில் அழுத்தமான கருத்துக்களையும் ஆவேசமாகப் பேசும் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகிறது "மாஸ்க்". கதாநாயகன் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார...
நெப்போலியனுடன் ஜிவி பிரகாஷ் இணையும் புதுப்படம்!

நெப்போலியனுடன் ஜிவி பிரகாஷ் இணையும் புதுப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
    கைபா பிலிம்ஸ், நாசிக் ராவ் மீடியாவுடன் இணைந்து வழங்கும் டிராப் சிட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நெப்போலியன், ஜிவி பிரகாஷ், ப்ராண்டன் டி ஜாக்ஸன் நடிக்கின்றனர். தனது டெவில்’ஸ் நைட் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கைபா பிலிம்ஸ் டெல் கே. கணேசன் தனது பொழுதுபோக்கு திரைப்படமான ‘ட்ராப் சிட்டி’க்கு தயாராகியுள்ளார். இதில் முன்னணி தமிழ் நடிகர் நெப்போலியன், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ராண்டன் டி ஜாக்ஸன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். டெல். கே. கணேசன் மற்றும் ஜி.பி. திமோதியோஸ் ஆகியோர் தொடங்கிய கைபா பிலிம்ஸ், மிச்சிகனில் இருந்து ஒரு முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. டெல் கணேசனின் முந்தைய படமான டெவில்’ஸ் நைட் டிஜிட்டலில் வெளியாகி குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. ட்ராப் சிட்டி படத்தை உலகம் முழுவதும் உள்...
அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் – நடிகர் மோகன் உருக்கம்

அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் – நடிகர் மோகன் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் - நடிகர் மோகன் உருக்கம்   திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது. அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்கு துணையாகவும் பொழுதுபோக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன. தெலுங்கில் எனது முதல் படமான 'தூர்ப்பு வெல்லே ரயிலு' (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி சார் தான் இசையமைப்பாளர். முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப் படத...
திட்டமிட்டபடி நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்குமாம்!

திட்டமிட்டபடி நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்குமாம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  திட்டமிட்டபடி நவம்பரில் சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடக்குமாம்! இந்தியாவின் 51வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் வருகிற நவம்பர் இறுதி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.  இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்படுவது வழக்கம்.  இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் தயாரிக்கப்பட்ட படங்களும் திரையிடப்படும். இந்த திருவிழாவில், சிறந்த நடிகர், நடிகைகள் மற்றும் இயக்குனர் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்படும்.  சிறந்த திரைப்படம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படும். நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமலில் உள்ளது.  இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது.  இதனால், கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் கூட நடத்த முடியாமல் போனது.  பின்னர் ரசிகர்கள் இன்றியும், குறைந்த அளவிலான ரசிகர்களுடனும் க...
சுஷாந்த்சிங் தற்கொலை பேசுகிற யாரும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எந்த குரலும் கொடுக்கவில்லையே – சரத்பவார் கேள்வி

சுஷாந்த்சிங் தற்கொலை பேசுகிற யாரும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எந்த குரலும் கொடுக்கவில்லையே – சரத்பவார் கேள்வி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  சுஷாந்த்சிங் தற்கொலை பேசுகிற யாரும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எந்த குரலும் கொடுக்கவில்லையே - சரத்பவார் கேள்வி   பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யவில்லை. தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என்று அவரது குடும்பம் குற்றம் சாட்டியது. மும்பை காவல்துறை இந்த வழக்கில் சரியாக செயல்படவில்லை. வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் கூறியது. சுஷாந்தின் தந்தை புகார் அடிப்படையில் பீகார் மாநில அரசு வழக்கப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விவகாரத்தில் மகாராஷ்டிர அரசுக்கும், பீகார் அரசுக்கும் இடையில் மோதல் உருவாகியுள்ளது. மேலும், சிபிஐ விசாரணை தேவை என கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதன்முறையாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அரசியல் குறித்த கருத்தை வெளியிட்டுள்...
எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார் – அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

எஸ்.வி.சேகர் ஜெயிலுக்கு போக ஆசைப்படுகிறார் – அமைச்சர் ஜெயக்குமார் நக்கல்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
    ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது எஸ்.வி.சேகரின் நீண்ட நாள் ஆசை... அதை அரசு நிறைவேற்றும்" என நக்கல் அடித்த அமைச்சர். தேசிய கொடியை அவமதிப்பு செய்தார், முதல்வரை தவறாக விமர்சித்தார் என நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் வந்துள்ளதே... அதன் பேரில் எஸ்.வி.சேகர் கைதாவாரா? என அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்த போது " தேசிய கொடியை அவமதிப்பு செய்திருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரை அவதூறாக பேசினால் ஈசியாக மக்களிடம் தன்னை விளம்பர படுத்திக் கொள்ள முடியும் என்பதால் அவர் அப்படி நடந்து கொள்கிறார். அவருக்கு ரொம்ப நாள் ஆசை ஜெயிலுக்கு போக வேண்டும் என்று. அந்த ஆசையை அரசு நிறைவேற்றும்" என நக்கல் அடித்தார் அமைச்சர் ஜெயக்குமார்....
“தல”அஜீத்துடன் நடிகர் அம்சவர்தனை ஒப்பிட்ட “பீட்ரு” இயக்குனர்!

“தல”அஜீத்துடன் நடிகர் அம்சவர்தனை ஒப்பிட்ட “பீட்ரு” இயக்குனர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  "தல"அஜீத்துடன் நடிகர் அம்சவர்தனை ஒப்பிட்ட "பீட்ரு" இயக்குனர்! தாதா87 படத்தின் மூலம் சாருஹாசனை தாதா ஹீரோவாக களம் இறக்கி பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் விஜய்ஸ்ரீ இப்போது ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தையும், அம்சவர்தன் நடிப்பில் பீட்ரு படத்தையும் இயக்கி வருகிறார். இந்த ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தடை பட்டுள்ளது. அதே நேரம் சமூக வலைதளங்களில் பரபரப்பான கருத்தை வெளியிட்டு அனைவர் கவனத்தையும் ஈர்ப்பது வழக்கம். இந்த சூழலில் தனது டிவிட்டர் பக்கத்தில் தல அஜீத்தும், நடிகர் அம்சவர்தனும் குணத்தால் ஒன்று என ஒப்பிட்டு ஒரு பதிவு போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அந்த பதிவில் இயக்குனர் விஜய்ஸ்ரீ கூறியிருப்பதாவது: "நடிகர் அஜித் பிறருக்கு உதவி செய்வதை விளம்பரம் செய்வது இல்லை, அது போல் நடிகர் #அம்சவிருதன் பல உதவிகளை செய்வது வருகிறார். விளம்பரம் பட...
எட்ஜ்’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் ஸ்ருதிஹாசன் குஷி!

எட்ஜ்’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பால் ஸ்ருதிஹாசன் குஷி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
  'எட்ஜ்' பாடலுக்கு பெரும் வரவேற்பு - ஸ்ருதிஹாசன் உற்சாகம் கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடைய முதல் ஒரிஜினல் பாடலான 'எட்ஜ்' நேற்று (ஆகஸ்ட் 8) வெளியானது. இந்தப் பாடல் 2021-ல் ஸ்ருதிஹாசன் வெளியிடவுள்ள ஆல்பத்தின் அங்கமாக உள்ள பாடலாகும். 'எட்ஜ்' பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் கொள்ள பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். இது ஸ்ருதிஹாசனின் மற்றொரு பரிமாணம். இதற்கு எந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்பதெல்லாம் எண்ணாமல் வெளியிட்டார் ஸ்ருதிஹாசன். ஆனால் இதற்கு கிடைத்த வரவேற்பு அவரை திக்குமுக்காடச் செய்திருக்கிறது என்று சொல்லலாம். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, பாலிவுட் நடிகர...
நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார்.

நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார்.

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ராணா காதலியை கரம் பிடித்தார். லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானாலும் பாகுபலி படம் தான் ராணாவை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக திருமணத்துக்கு வரும் விருந்தினர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரும் கொரானா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது இந்த சூழலில் அறிவிக்கப்பட்ட நாளான இன்று ராணாவுக்கும் மஹிமாவுக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. சக நடிகர் நடிகைகள் திரையுலக பி...