நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!
நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்
அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு என்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது.
நிலைமையை விளக்கிக் கூறி டென்வரில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
எனினும் வரும் வழியிலேயே விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன. இதனால் பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது....









