சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

உலகம்

ஜெர்மனியில் மீண்டும் ஜனவரி 10 வரை கொரோனா ஊரடங்கு!

ஜெர்மனியில் மீண்டும் ஜனவரி 10 வரை கொரோனா ஊரடங்கு!

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
  ஜெர்மனியில் அதி தீவிரம் அடைந்துவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜனவரி மாதம் முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்களை அடைக்க உத்தரவு. கொரோனா வைரசால் மிகவும் அதிக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இங்கு நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பரவல் இரண்டாம் அலை வீச தொடங்கியுள்ளது. நேற்றுவரை ஜெர்மனியில் 13,36,101 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21,900 பேர் இறந்துள்ளனர். இதனால் மீண்டும் ஜெர்மனியில் ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதுவும் இந்த ஊரடங்கை மிகவும் கடுமையாக பின்பற்ற போவதாக கூறப்படுகிறது. அதன்படி வரும் புதன் கிழமை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இந்த புதிய கட்டுப்பாடுகளின்படி, சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள், வங்கிகள...
அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவரும் சண்ட்ரா லிண்ட்செ என்ற பெண்ணுக்கு போடப்பட்டது. அமெரிக்க நேரப்படி காலை 9.30 மணிக்கு சண்ட்ராவுக்கு அமெரிக்காவின் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது....
புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய மர்மநபர்!

புறப்படவிருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய மர்மநபர்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தின் லாஸ் வேகாஸ் நகரில் உள்ள மெக்ஹரன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஓரிகான் மாகாணம் போர்ட்லேண்ட் நகருக்கு நேற்று மதியம் 2 மணியளவில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் புறப்பட தயாரானது. விமானம் புறப்பட தயாரானபோது பாதுகாப்பையும் மீறி விமான நிலையத்தின் வேலியை தாண்டி விமான ஓடுதளத்திற்குள் மர்மநபர் நுழைந்தார். அந்த நபர் விமான ஓடுதளத்திற்குள் வேகமாக ஓடி வருவதை கண்ட அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் விமானிகள் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்குள் அந்த நபர் போர்ட்லேண்ட் புறப்படுவதற்கு தயாராக இருந்த அலாஸ்கார் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை பகுதி மீது அத்துமீறி ஏறினார். இதனால், விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கை பகுதியில் ஏறிய அந்...
பிரமீடு அருகே எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது

பிரமீடு அருகே எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், நடிகைகள்
  எகிப்து நாட்டில் மாடலிங் துறையில் பிரபலமானவர் சல்மா அல்-ஷைமி. மாடல் அழகியான இவர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் மிகவும் பிரபலநபராக இருந்துவந்தார். இதற்கிடையில், சல்மா அல்-ஷைமி கடந்த வாரம் தலைநகர் கெய்ரோவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் 4 ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த டிஜொசெர் பிரமீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்றுள்ளார். தனது புகைப்படக்கலைஞருடன் பிரமீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற அவர் அங்கு எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தான் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சல்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், எகிப்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீறி பிரமீடு பகுதியில் கவர்ச்சியான முறையில் புகைப்படங்கள் எடுத்ததாக சல்மா மீது குற...
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு பெயரை உலக அரங்கில் கொச்சைப்படுத்த சதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழனின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை கொச்சைப் படுத்தவும், ஜல்லிக்கட்டு என்றாலே காளைகளை அடக்கி வெட்டி கொன்று தின்னும் காட்டுமிராண்டித்தனமான நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு என உலக அரங்கில் பதிய வைத்து தமிழனின் மரபு கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய வீர விளையாட்டை அழிக்கவும் மாபெரும் சதி நடக்கிறது. அதனால்தான் மலையாள மொழியில் எடுக்கப்பட்ட ஜல்லிக்கட்டு படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் தமிழனின் வீர விளையாட்டை அழிக்கும் சதி. ஜல்லிக்கட்டு ஆஸ்கர் பரிந்துரை புறக்கணிப்போம் - கோடங்கி https://youtu.be/rrpC85Axkoc...
மெக்சிகோவில் கிறிஸ்துமசை முன்னிட்டு களைகட்டும் பூ விற்பனை

மெக்சிகோவில் கிறிஸ்துமசை முன்னிட்டு களைகட்டும் பூ விற்பனை

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
    *மெக்சிகோவில் கிறிஸ்துமசை முன்னிட்டு களைகட்டும் பூக்கள் விற்பனை* மெக்சிகோ நாட்டில் கிறிஸ்துமசை முன்னிட்டு பூக்கள் விற்பனை சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. அந்நாட்டின் கிறிஸ்துமஸ் பூவாக விளங்கும் "Nochebuena" பூ அடர்ந்த சிவப்பு நிறத்தில் பெரியதாக காணப்படும். இந்த பூக்களை அங்குள்ள வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் காணலாம். மேலும் அங்குள்ள பூ மார்க்கெட் சந்தையிலும் இந்த வகை பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் இந்த வருடம் கொரோனா காரணமாக பூ விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்....
இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை

இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
இலங்கையில் பிச்சை எடுத்தாலும், பிச்சை கொடுத்தாலும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் டி.ஐ.ஜி அஜித்ரோஹணா, கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வர்த்தக நோக்கத்துடன் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றார். தினசரி சம்பளத்தின் அடிப்படையில் பலர் பிச்சை எடுப்பதாகவும், போக்குவரத்து சிக்னல்களில் பிச்சை எடுப்பவர்களால் நெரிசல் ஏற்படுகிறது என்றும் அவர் கூறினார். இதனால் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பதும், இடுவதும் தண்டனைக்கு உரிய குற்றம் என்று அவர் தெரிவித்தார். பிச்சை எடுப்பவர்கள் மற்றும் அளிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்....
தைவானில் பயிற்சியில் ஈடுபட்ட அதிநவீன போர் விமானம் மாயம்!

தைவானில் பயிற்சியில் ஈடுபட்ட அதிநவீன போர் விமானம் மாயம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
  அதிநவீன போர் விமானம் மாயம்... தைவானில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதிநவீன எப் 16 ரக போர் விமானம் மாயமானது. தைவான் கிழக்குப்பகுதியில் உள்ள குவலியன் விமானப்படை தளத்தில் இருந்த எப் 16 ரக போர் விமானங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது, 44 வயதான கர்னல் ஜியாங் என்ற விமானி ஓட்டிய எப் 16 போர் விமானம் ரேடாரின் பார்வையில் இருந்து மறைந்தது. கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பையும் இழந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாயமான எப் 16 போர் விமானத்தை தேடும்பணியை தைவான் விமானப்படையினர் துரிதப்படுத்தியுள்ளனர். போர் விமானம் தென்சீன கடலில் விழுந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது...
பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது!

பிரேசிலில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்தது!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் 3-வது இடத்தில் உள்ளது. அங்கு கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் புதிதாக 38 ஆயிரத்து 397 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அங்கு 60 லட்சத்து 20 ஆயிரத்து 164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கொரோனா உயிரிழப்பில் உலக அளவில் 2-வது இடத்தில் இருந்து வரும் பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 552 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் அங்கு மொத்த உயிரிழப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 662 ஆக உயர்ந்துள்ளது....
பின்லாந்து அருகே பலத்த காற்றால் தரை தட்டி நின்ற கப்பல்!

பின்லாந்து அருகே பலத்த காற்றால் தரை தட்டி நின்ற கப்பல்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில், 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகள் இருந்துள்ளனர். கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் பால்டிக் கடல் வழியே சென்றபொழுது பலத்த காற்று வீசியுள்ளது.  இதனை தொடர்ந்து மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி நின்றது. எனினும், கப்பலில் எந்த கசிவும் ஏற்படவில்லை.  இதனால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை.  இதன்பின்னர் இன்று காலை கப்பல் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது....