சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

உலகம்

Built A New, Secret Nuclear Weapons System, says Trump

Built A New, Secret Nuclear Weapons System, says Trump

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
  Built A New, Secret Nuclear Weapons System, says Trump President Donald Trump claimed that he had overseen the creation of a new U.S. nuclear weapons system, saying, “We have stuff that you haven’t ever seen or heard about,”as the two discussed tensions between the United States and North Korea. Trump discussed the weapons system while reflecting on how close the United States and North Korea came to nuclear war in 2017, according to excerpts from "Rage" published Wednesday by The Washington Post.
கடலில் கப்பல் விபத்து எண்ணெய் கசிவால் டால்பின்கள் பலி

கடலில் கப்பல் விபத்து எண்ணெய் கசிவால் டால்பின்கள் பலி

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள குட்டிநாடான மொரிஸியஸில் ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3,800 டன் எண்ணெய் சரக்குடன்  கடல் பகுதியில் சென்ற பொழுது பாறையில் மோதி விபத்துள்ளானது. இந்த சம்பவத்தில் கப்பலில் இருந்த எண்ணெய்கள் கடலில் கசியத் தொடங்கியது. கசிவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சி மேற்கொண்ட பொழுதிலும் பலனில்லை. இதனால் மொரிசியஸ் அரசு அவசர நிலை அறிவித்து அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்த எண்ணெய் கசிவு விபத்தால் அரிய கடல் உயிரினமான டால்பின்கள் அடுத்தடுத்து உயிரிழந்து கரை ஒதுங்கியுள்ளன. இதுவரை 30-க்கும் மேற்பட்ட இருந்துள்ளதாக மொரிசியஸ் நாட்டின் மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எண்ணெய் கசிவு விபத்து காரணமாக ஜப்பான் கப்பலில் ஒரு மாலுமி கைது செய்யப்பட்டுள்ளார்...
கடல் நீரை மேகம் உறுஞ்சும் அதிசயம் அமெரிக்காவில்…!

கடல் நீரை மேகம் உறுஞ்சும் அதிசயம் அமெரிக்காவில்…!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  அமெரிக்கா கடலில் ஒரே நேரத்தில் ஆறு இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்த அதிசய காட்சி வெளியாகி உள்ளது. லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் மேற்கு புளோரிடா பகுதிகளில் புயல் சின்னம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தின் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றிருந்தவர்கள் கடலில் பேரதிசயத்தைக் கண்டனர். ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் கடல் நீரை மேகம் உறிஞ்சி எடுத்துக் கொண்டிருந்தது. ஹாலிவுட் படங்களில் வருவது போன்று இந்தக் காட்சி இருந்ததாக இதனைப் படம் பிடித்தவர்கள் தெரிவித்துள்ளனர்....
ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி!

ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    ரூ.2.5 கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தியின் கண் கண்ணாடி! மகாத்மா காந்தி வட்ட வடிவ மூக்கு கண்ணாடி அணிவது வழக்கம். அவரது, தங்க பிரேம் போட்ட மூக்கு கண்ணாடி ஒன்று இங்கிலாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஹன்ஹாம் என்ற இடத்தில் உள்ள ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த கண்ணாடி 10 ஆயிரம் பவுண்டு முதல் 15 ஆயிரம் பவுண்டு வரை ஏலம் போகலாம் என்று அந்த நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் அந்த மூக்கு கண்ணாடி 2 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுக்கு (சுமார் ரூ.2 கோடியே 55 லட்சம்) ஏலம் போய் உள்ளது. அபூர்வமான இந்த மூக்கு கண்ணாடி நம்பமுடியாத விலைக்கு விற்பனையாகி இருப்பதாக அதை ஏலம் விட்ட ஈஸ்ட் பிரிஸ்டல் ஆக்சன்ஸ் ஏல மையத்தைச் சேர்ந்த ஆன்டி ஸ்டோவ் தெரிவித்தார். இங்கிலாந்தில் உள்ள மங்கோட்ஸ்பீல்டு என்ற இடத்த...
அமெரிக்காவில் பள்ளிகள் திறப்பால் 1.5 லட்சம் மாணவர்களுக்கு வைரஸ்!

அமெரிக்காவில் பள்ளிகள் திறப்பால் 1.5 லட்சம் மாணவர்களுக்கு வைரஸ்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
  அமெரிக்காவில் பள்ளிகளை திறந்ததால் வந்த வினை - 15 நாட்களில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு..!!* உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் ஜூலை 15 முதல் 30 வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3,38,000 குழந்தைகள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு குழந்தைகள் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது....
அமெரிக்க அதிபரானால் எல்லைப் பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பேன் – அதிபர் வேட்பாளர் ஜோ அறிவிப்பு

அமெரிக்க அதிபரானால் எல்லைப் பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பேன் – அதிபர் வேட்பாளர் ஜோ அறிவிப்பு

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
  அமெரிக்க அதிபரானால் எல்லைப் பிரச்சனைகளில் இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பேன் - அதிபர் வேட்பாளர் ஜோ அறிவிப்பு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிடுகிறார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்தியாவின் 74-வது சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் பங்கேற்றார். அப்போது ஜோ பைடன் பேசியதாவது:- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவுடன் சிவில் அணு ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு முன்னணியில் இருந்த நான்தான் பணியாற்றினேன். அப்போது நான் கூறியது, இந்தியாவும், அமெரிக்காவும் நெருங்கிய நட்ப...
டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த நமது மூவர்ண தேசிய கொடி!

டைம்ஸ் சதுக்கத்தில் பறந்த நமது மூவர்ண தேசிய கொடி!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்தியா முழுவதும் சுதந்திர தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடியான மூவர்ண கொடியை ஏற்றினர். இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்று. இங்கு மூவர்ணக் கொடி ஏற்று விழா நடப்படுவது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது....
டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை வெளியே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு!

டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது வெள்ளை மாளிகை வெளியே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  டிரம்பின் செய்தியாளர் சந்திப்பின்போது வெள்ளை மாளிகைக்கு அருகே மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடும் சத்தத்தைக் கேட்ட ட்ரம்ப்பின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், ட்ரம்ப்பைச் செய்தியாளர்கள் அறையில் இருந்து பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர். செய்தியாளர்களையும் மற்றொரு அறையில் அடைத்து வைத்தனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்கள் அறைக்கு வந்த ட்ரம்ப்'' வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆனால் ஆபத்து ஏதும் இல்லை. உளவுத்துறை அதிகாரிகள் சிறப்பாகச் செயல் பட்டுள்ளனர்'' என்று சொல்லி விட்ட...
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இந்தியாவின் மூவர்ண கொடி பறக்கும்!

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் முதல் முறையாக இந்தியாவின் மூவர்ண கொடி பறக்கும்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
  இந்தியாவில் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகம் முழுவதிலும் வசித்து வரும் இந்தியர்கள் சுதந்திர தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். இந்நிலையில், இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் வசித்து வரும் இந்தியர்கள் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் நமது நாட்டின் தேசியக் கொடியான மூவர்ண கொடியை ஏற்ற உள்ளனர். இதில் அமெரிக்க வாழ் இந்தியர்களும் பங்கேற்கின்றனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கமும் ஒன்று. இங்கு மூவர்ணக் கொடி ஏற்று விழா நடப்படுவது இது முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ஆகஸ்டு 5-ம் தேதி நடந்த அயோத்தி ராமர் கோவில் அடிக்கல்...
ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் திடீர் அஞ்சலி – காரணம் இதுதான்

ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் திடீர் அஞ்சலி – காரணம் இதுதான்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம், செய்திகள்
    கொரானாவால் 1 லட்சத்தை தாண்டிய உயிர் பலிக்கு ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் அஞ்சலி! உயிர்க் கொல்லியான கொரோனா வைரசின் பிடியில் அதிகம் சிக்கியுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தை நோக்கி விரைகிறது. 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் உள்ள நாடு, பிரேசில். அங்கு கொரோனா வைரஸ் தொற்று வெறியாட்டம் போடுகிறது. 21 கோடி மக்கள் தொகையை கொண்ட அந்த நாட்டில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக ஆயிரம் பேர் பலியாகிற சோகம், அங்கு தொடர்கிறது. அங்கு நேற்று முன்தினம் 905 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி என்பது 1 லட்சத்து 543 ஆக உள்ளது. இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை, 30 லட்சத்து 12 ஆயிரத்து 412 ஆகும். பலி 1 லட்சத்தை கடந...