ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் திடீர் அஞ்சலி – காரணம் இதுதான்

 

 

கொரானாவால் 1 லட்சத்தை தாண்டிய உயிர் பலிக்கு ஆயிரக்கணக்கான சிவப்பு பலூன்களை பறக்கவிட்டு பிரேசில் அஞ்சலி!

உயிர்க் கொல்லியான கொரோனா வைரசின் பிடியில் அதிகம் சிக்கியுள்ள நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 51 லட்சத்தை நோக்கி விரைகிறது. 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு இரையாகி உள்ளனர்.

அதற்கு அடுத்த நிலையில் உள்ள நாடு, பிரேசில். அங்கு கொரோனா வைரஸ் தொற்று வெறியாட்டம் போடுகிறது. 21 கோடி மக்கள் தொகையை கொண்ட அந்த நாட்டில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தினந்தோறும் சராசரியாக ஆயிரம் பேர் பலியாகிற சோகம், அங்கு தொடர்கிறது. அங்கு நேற்று முன்தினம் 905 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் மொத்த பலி என்பது 1 லட்சத்து 543 ஆக உள்ளது.

இதுவரை தொற்று பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை, 30 லட்சத்து 12 ஆயிரத்து 412 ஆகும்.

பலி 1 லட்சத்தை கடந்த நிலையில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ரியோ டி பாஸ் என்ற புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆயிரம் சிவப்பு நிற பலூன்களை பறக்க விட்டது.

329 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன