திங்கட்கிழமை, மே 13
Shadow

என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

 

 

கொரானாவால் என் கணவர் இறப்புக்கு அரசின் அலட்சியம் தான் காரணம் – பகீர் குற்றம் சுமத்தும் சாத்தான்குளம் சிறப்பு எஸ்.ஐ. மனைவி

கொரானா ஊரடங்கு நேரத்தில் சாத்தான்குளம் அப்பா மகன் இரட்டை படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஐநா மன்றம்வரை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த காவல்நிலைய இரட்டைக்கொலை வழக்கில் காவல்துறையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உட்பட 10 போலீசார் கைது செய்யப்பட்டனர்.

அதில் சிறப்பு எஸ்.ஐ-யான பால்துரையும் ஒருவர். மதுரை சிறையில் அடைக்கப்பட்ட பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் மதுரை அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்த சூழலில், “தன் கணவர் பால்துரையின் உயிருக்கு ஆபத்து என்று அவர் மனைவி மங்கையர்திலகம் மதுரை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

அதில், “என் கணவர் தட்டார்மடத்திலிருந்து சாத்தான்குளத்துக்கு ஒரு வாரம் மட்டும் மாற்றப்பட்டார். அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சாத்தான்குளம் வழக்கில் எந்தக் குற்றமும் செய்யாத என் கணவரை பழி வாங்குகிறார்கள்.
எங்கள் சொந்த செலவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். அதனால், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் உயிருக்கு எதாவது ஆகிவிடும்” எனக் கூறியிருந்தார்.

ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியான நிலையில், மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக கூறி வந்த நிலையில் மதுரை மாநகர போலிஸ் கமிஷனரிடமும் புகார் கொடுத்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலைஎஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தற்போது எஸ்.எஸ்.ஐ பால்துரையின் உடல் கொரோனா சிறப்பு வார்டில் இருந்து போலிஸ் பாதுகாப்புடன் அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சரியான சிகிச்சை இல்லாததே கணவன் இறப்புக்கு காரணம் பால்துரையின் மனைவி குற்றச்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது மனைவி மங்கையர்திலகம், மற்றும் மகன் பிரவான் கூறும்போது, “இந்த வழக்கில் சம்பந்தம் இல்லாமல் என் கணவரை திட்டமிட்டு போலிஸார் சேர்த்துள்ளனர்.

இந்த மன அழுத்தத்தின் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார். அதேபோல் சர்க்கரை அளவு அதிகரித்து காணப்பட்டிருந்தது. அவருக்கு தொடர்ந்து முறையான சிகிச்சை அளித்து இருந்தால் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால், கொரோனா இருப்பதாக காரணம் காட்டி உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தனது கணவர் இறந்து விட்டார். உரிய சிகிச்சை அளித்திருந்தால் தனது கணவரை காப்பாற்றியிருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாததால் என் கணவர் இறந்து விட்டார். நான் பயந்தது போலவே நடந்துவிட்டது” என்கிறார் பால்துரை மனைவி.

இந்த சூழலில் சாத்தான்குளம் அப்பா மகன் கொடூர படுகொலைக்கு முதல் காரணம் பால்துரை கொடுத்த தகவலின் பேரில்தான் போலீசார் அன்று இரவு ஜெயராஜை விசாரணைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். அப்பாவை போலீஸ் அழைத்து சென்றதால் மகன் பென்னிக்ஸ் தாமாக போலீஸ் நிலையம் சென்று இருக்கிறார். அதன்பிறகு போலீசாரால் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டு மறுநாள் அடுத்தடுத்து பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு எஸ்.ஐ.பால்துரை கொரானாவால் பலியான தகவல் பரவியதும் “அப்பாவிகள் படுகொலையில் சிபிஐ விசாரணை முடிந்து தீர்ப்பு வருவதற்குள் கடவுள் தீர்ப்பு எழுதி தண்டனையும் கொடுத்து விட்டார்” என்ற ரீதியில் மீம்ஸ்கள் வலம் வரத் தொடங்கி விட்டது.

பால்துரை கொரானாவால் பலியானதால் அவரோடு ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்த போலீசார் முருகன், முத்துராஜ் இருவருக்கும் கொரானா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பால்துரை கொரானாவால் பலியானதால் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

பால்துரை கொரானாவால் உயிர் இழந்த்ச்தால் அவரது உடல் சுகாதார துறை வழிகாட்டுதல் படி அடக்கம் செய்யப்படும் என தெரிகிறது.

223 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன