சனிக்கிழமை, ஜூன் 13
Shadow

உலகம்

நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!

நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    நடுவானில் தீப்பிடித்து சிதறிய விமான என்ஜின் அமெரிக்காவின் டென்வர் நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு என்ஜினில் தீப்பிடித்துள்ளது. இதனால் விமானம் உடனடியாக டென்வர் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டது. நிலைமையை விளக்கிக் கூறி டென்வரில் அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி டென்வர் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டனர். எனினும் வரும் வழியிலேயே விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவி, சில பாகங்கள் உடைந்து தரையில் விழுந்துள்ளன. இதனால் பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டது....
அமெரிக்காவின் முதன் பெண்மணி அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்

அமெரிக்காவின் முதன் பெண்மணி அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
அமெரிக்காவின் முதன் பெண்மணி அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் வரலாற்று பெருமைகளைப் பெறும் அமெரிக்காவின் முதன் பெண்மணி ஆவார். மனைவிமார்கள் தங்களது கணவர்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பார்கள். ஜில் பைடனும் அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர்தான். சில தருணங்களில் சீக்ரெட் ஏஜெண்டைப் போல, அசம்பாவிதங்களில் இருந்து ஜோ பைடனைக் காப்பாற்றியவர் ஜில் பைடன். அமெரிக்க மக்கள் இதுபோன்ற காட்சிகளை பலமுறை கண்டிருக்கிறார்கள். ஜில் பைடன், ஜோ பைடனின் இரண்டாவது மனைவி. தனது காதல் மனைவியும் மகளும் விபத்தில் மரணமடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு 1978-ஆம் ஆண்டில் ஜில் பைடனை ஜோ பைடன் திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தவர் ஜில் என்று ஜோ பைடன் பலமுறை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். தாயை இழந்த இரு மகன்களையும் அன்புகாட்டி வளர்த்த விதம் குறித்தும் ...
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸ் நாட்டின் போன்டாகைடன் நகரில் இருநது தென்கிழக்கே 219 மீட்டர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 139 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. இந்த நடுநடுக்கம் பிலிப்பைன்ஸின் முக்கிய வணிக மையமான கருதப்படும் தவாயோ நகரில் உணரப்பட்டுள்ளதுது. இங்குள்ள வீடுகள் ஆட்டம் கண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் உண்டான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து உடனடியாக தகவல்கள் ஏதும் இல்லை....
டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்!

டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
டிரம்ப்பின் கொள்கை முடிவுகளை தலைகீழாக மாற்றிய பைடன்... அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார். கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சனை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் பைடன். கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார். அதன்பின்னர், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து உள்ளிட்ட உத்தரவுகளில் கையெழுத்திட்டார். பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது தொடர்ப்ன டிரம்ப் ...
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்டு டிரம்ப்!

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்டு டிரம்ப்!

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டொனால்டு டிரம்ப்! அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு விழாவை தொடர்ந்து ஜோ பைடன் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளைமாளிகையில் நாளை குடியேற உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் அலுவலகம் மற்றும் வீடாக செயல்பட்டு வந்த வெள்ளைமாளிகையில் இருந்து தற்போதைய அத...
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றார் ஜோபைடன் அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர். அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவியேற்கும் விழா இன்று நடைபெற்று வருகிறது. அமெரிக்க பாராளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.  அவருக்கு பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பதவிப்பிரமானமும், ரகசியகாப்பு பிரமானமும் செய்துவைக்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்க வரலா...
ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் நெடுஞ்சாலையில் சென்ற 130 வாகனங்கள் ஒன்றொடென்று மோதல்!

ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் நெடுஞ்சாலையில் சென்ற 130 வாகனங்கள் ஒன்றொடென்று மோதல்!

HOME SLIDER, உலக செய்திகள், உலகம்
ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் நெடுஞ்சாலையில் சென்ற 130 வாகனங்கள் ஒன்றொடென்று மோதல்! ஜப்பானில் வீசிய கடும் பனிப்புயல் காரணமாக, நெடுஞ்சாலையில் சென்ற கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளான. சுமார்  130 கார்கள் ஒன்றொடென்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது வடக்கு ஜப்பான் மியாகி (Miyagi district) மாகாணத்தில் உள்ள தோஹோகு பகுதியில் ( Tohoku Expressway)  இன்று மதிய வேளையில் பனிப்புயல் தாக்கியது. அதிக பட்சமாக 100 கிமீ / மணி (62 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக உள்ளூர் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பனிப்புயலானது அந்த மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையை கடுமையாக தாக்கியது.  இதன் காரணமாக, சாலை முழுவதும் பனியால் மூடப்பட்டது. அப்போது, அந்த வழியாக சென்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள், ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனாது. ஒரே இடத்தி...
அமெரிக்க அதிபராக நாளை பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக நாளை பதவி ஏற்க உள்ள ஜோ பைடன்

HOME SLIDER, politics, உலக செய்திகள், உலகம்
  நாளை அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்க உள்ள ஜோ பைடன் அதிக வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  நாளை ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.  இதற்காக மிகத் தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து  வருகின்றன.  அவர் தேர்தலில் வெற்றி பெற்றும் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் மிகவும் இழுத்தடித்து தற்போது வேறு வழியில்லாமல் ஒதுங்கி உள்ளார். தற்போது பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு நவம்பர் மாதம் 78 வயதை எட்டி உள்ளார்.  இதனால் அவர் மிகவும் வயதான அதிபர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.  இதற்கு முன்பு டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரியில் டிரம்ப் பதவி ஏற்ற போது அவருக்கு 70 வயதாகி இருந்தது.   இதற்கு முன்பு ரொனால்ட...
பிரச்சனை நீடித்து வருகிற அருணாச்சல பிரதேச எல்லையில் ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்த சீனா!

பிரச்சனை நீடித்து வருகிற அருணாச்சல பிரதேச எல்லையில் ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்த சீனா!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
  பிரச்சனை நீடித்து வருகிற அருணாச்சல பிரதேச எல்லையில் ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்த சீனா இந்தியா - சீனா இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த ஆண்டு லடாக் எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இரு பக்கமும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதன்பின் பல கட்டங்களாக பல தரப்பினருக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்றாலும், சீனா பின்வாங்குவதில் தயக்கம் காட்டியது. இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையிலும் பிரச்சனை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சுபான்ஸ்ரீ மாவட்டத்தில் உள்ள டிசாரி சூ ஆற்றங்கரையோரத்தில் சீனா 101 வீடுகளை கொண்ட ஒரு புதிய கிராமத்தையே கட்டி முடித்துள்ளது. இந்திய பகுதியுடன் கூடிய சுமார் 4.5 கி.மீட்டரில் இந்த கிராமம் அமைந்துள்ளதால் இந்தியாவுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாத...
சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா

சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் பரவிய கொரோனா ஜப்பானில் கொரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா பரவியிருக்கும் தகவல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஐஸ்கிரீம் மூலமும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டியன்ஜின் என்ற இடத்தில் இயங்கும் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்களில் கொரோனா தொற்றை கண்டறிந்த அதிகாரிகள், அந்த ஆலையை மூடி சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த பணியாளர்களை தனிமைபடுத்தி, கண்காணித்து வருகின்றனர்...