“பாக்சர்” ஆகும் நடிகர் அருண்விஜய்..!
நடிகர் அருண் விஜய் தனது முயற்சிகளை ஒருபோதும் கைவிட்டதில்லை. தனது எனர்ஜியால் எப்போதும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களை செய்ய தயாராக இருப்பவர். அவர் தனது படமான 'பாக்ஸர்' படத்தில் நடிக்க முழுமையாக ஊக்கத்தோடு இருக்கிறார். அவரது அனைத்து திறன்களையும் வெளிக்கொணரும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தை எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரிக்கிறார்.
இந்த படத்தை பற்றி அருண் விஜய் கூறும்போது, "இந்த படத்தின் தொடக்கத்தில் இருந்தே எல்லாமே என்னை கவர்ந்தது. இந்த படத்தின் அறிவுப்பு கூட எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஆரம்பத்தில் ஜனவரி 2019 வாக்கில் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் வி. மதியழகன் சார் எனக்கு பிறந்த நாள் பரிசாக முன்னதாகவே என் பிறந்த நாளில் படத்தை அறிவித்து என்னை ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு விளையாட்டை ம...









