வியாழக்கிழமை, மே 16
Shadow

ஜாவா தீவில் படமான சூர்யாவின் காப்பான் ரகசியம். !

 

கே.வி. ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு கேமராமேனாக அறிமுகமானவர். காதல் தேசம், முதல்வன், பாய்ஸ், சிவாஜி என பல்வேறு படங்களில் கேமராமேனாக பணியாற்றியுள்ளார்.

சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் மூன்றவதாக உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. இதில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா மற்றும் சமுத்திரகனி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளனர்.

கோ படத்தில் இடம்பெற்ற ‘அமளி துமளி’ பாடல் காட்சியாக்கப்பட்ட லொக்கேசன், அயன் படத்தில் இடம்பெற்ற பெரும்பான்மையான லொக்கேசன்கள் எல்லாம் தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதிதானவை. இந்நிலையில் அதேபோன்று வித்தியாசமான லொக்கேசனில் ‘காப்பான்’ படத்துக்கான பாடல் ஒன்றை படமாக்கியுள்ளார் கே.வி.ஆனந்த் .

இந்தோனேசியாவின் ஜாவா தீவு பகுதியில் இந்த பாடலை படமாக்கியுள்ளனர். படப்பிடிப்பு தளத்தில் எடுத்த இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடல் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கப்போகிறதாம்!.. காப்பான் திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

298 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன