விஜய் இடத்தை பூர்த்தி செய்த விஜய் ஆண்டனி
சர்ச்சை கதை எடுப்பதால் மிரட்டல் வந்தால் அது பற்றிய பயமில்லை என்று `டிராஃபிக் ராமசாமி' அறிமுக விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:
சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி'. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் திரையீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும் போது,
" இந்தப் படத்தை இயக்கியுள்ள விக்கி என்னைப் பற்றியோ, என் படங்கள் பற்றியோ, எதுவுமே தெரியாமல் என்னிடம் வந்து சேர்ந்தார். ஒரு கட்டத்தில் நான் இனி படம் எதுவும் இயக்கப் போவதில்லை என்று கூறி, நான் என்னிடம் இருந்த ஐந்தாறு உதவி இயக்குநர்களை எ...









