நான் கண் மூடுவதற்குள் தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் – ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசும் போது,
இது ஒரு இசை வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை, படத்தின் வெற்றி விழா மாதிரி இருக்கிறது. நான் கடைசியாக கொண்டாடிய வெற்றி விழா சிவாஜி தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த வெற்றி விழாவுக்கு வந்த கலைஞர் அன்று பேசினார். அவரது அந்த குரலை மறக்க முடியாது. அவரது குரலை மறுபடியும் கேட்க வேண்டும். 75 ஆண்டுகளாக ஒலித்த அந்த குரல், மீண்டும் ஒலிக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன். விரைவில் அவரது குரல் ஒலிக்கும் என்று நம்புகிறேன்.
சிவாஜிக்கு பின்னர் ரோபோ படம் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பின்னர் உடல் நலம் மோசமானதால் படத்தின் வெற்றியை கொண்டாடவில்லை. பின்னர் ராணா படம் சரியாக போகவில்லை. புத்திசாலியுடன் பழகலாம். அதிபுத்திசாலியுடன் பழக கூடாது. அவர்க...









