மாஸ்டருக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!
மாஸ்டருக்காக டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்!
விஜய்யின் மாஸ்டர் படம் வரும் 13 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். கிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பிறகு மாஸ்டர் படம் திரைக்கு வருகிறது. அதனால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் படத்தின் புரோமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று வருகிறது
ஏற்கனவே 100 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி அளித்திருந்த நிலையில், மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, மீண்டும் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் செயல்பட வேண்டும் என்ற...









