புதன்கிழமை, ஜூன் 10
Shadow

MOVIES

வரவேற்பை பெற்ற எல் ஜி எம்’ பட டீசர்

வரவேற்பை பெற்ற எல் ஜி எம்’ பட டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  வரவேற்பை பெற்று வரும் தோனி எண்டர்டெய்ன்மென்ட்டின் 'எல் ஜி எம்' பட டீசர் தோனி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகியிருக்கும் 'எல் ஜி எம்' படத்தின் டீசரை, இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான எம். எஸ். தோனி, அவருடைய முகநூலில் வெளியிட்டார். வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இப்படத்தின் டீசருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்து வருகிறது. தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தமிழ் தயாரிப்பு 'எல் ஜி எம்'. ( லெட்ஸ் கெட் மேரீட்). இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு செகண்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதற்கு பேராதரவு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசருக்கும் பெரும் வரவ...
ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு

ரெஜினா’ பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *'ரெஜினா' பட டிரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்ட வெங்கட் பிரபு* *'ரெஜினா' பட டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்* யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’. நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படம் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மலையாளத்தில் 'பைப்பின் சுவற்றிலே பிரணயம்' மற்றும் 'ஸ்டார்' ஆகிய கவனிக்கத்தக்க படங்களை இயக்கிய இயக்குனர் டொமின் டி’சில்வா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர்.. இவர் ஏற்கனவே "SN Musicals" மூலம் பல சுயாதீன பாடல்களை தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே-30ல் ‘ரெஜினா’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்ற நிலையில், நேற்று (ஜூன்-5) மாலை இந்தப்படத்தின் டிரைலர் மற்றும் இசை ...
’ஜெயிலர்’- படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!

’ஜெயிலர்’- படப்பிடிப்பை நிறைவு செய்த ரஜினி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். மேலும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. https://twitter.com/sunpict...
கார்த்தி படத்தில் வில்லனாகும் அரவிந்த் சாமி!

கார்த்தி படத்தில் வில்லனாகும் அரவிந்த் சாமி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பருத்திவீரன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கைதி, சர்தார் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கார்த்தி. இவர் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன்-2 படத்தில் நடித்திருந்த வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கதில் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கார்த்தியின் 27வது படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தி 27 படத்தை 96 படத்தை இயக்கி பிரபலமடைந்த பிரேம் குமார் இயக்கவுள்ளதாகவும் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமியிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி படத்தில் அரவிந்த் ச...
எலியும், பூனையும் “போர் தொழில்” கதை சொன்ன சரத்குமார்

எலியும், பூனையும் “போர் தொழில்” கதை சொன்ன சரத்குமார்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
*‘போர் தொழில்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு* அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘போர் தொழில்’. இதில் அசோக் செல்வன், ஆர். சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கலைச்செல்வம் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையைமத்திருக்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, கலை இயக்கத்தை இந்துலால் கவீத் மேற்கொண்டிருக்கிறார். புலனாய்வு திரில்லர் ஜானரிலான இந்த படத்தை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட், E4 எக்ஸ்பிரிமென்ட்ஸ் மற்றும் எப்ரியாஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஜுன் 9 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட்டின் பிரமோத் செருவய்யா,, சுனில் சாய்னானி, E4 எக்ஸ்பிரிமென்ட்ஸின் முகேஷ...
‘மார்கழி திங்கள்’படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா!

‘மார்கழி திங்கள்’படப்பிடிப்பை தொடங்கிய மனோஜ் பாரதிராஜா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'தாஜ்மகால்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. இதைத்தொடர்ந்து, 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா', உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'மாநாடு' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'மார்கழி திங்கள்'. புதுமுகங்களை கொண்டு உருவாகிவரும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். 'மார்கழி திங்கள்' படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொட...
பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்” டீசர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, திரைப்படங்கள், நடிகர்கள்
    *பரபரக்கும் திரில் பயணம், வெளியானது “போர் தொழில்" டீசர்* குற்ற விசாரணை பின்னணியில், ரசிகர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லர், “போர் தோழில்,” திரைப்படம் ஜூன் 9 அன்று திரைக்கு வர உள்ளது. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தும் அட்டகாசமான டீசரை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில் பயணத்தை அழகாக காட்டுகிறது டீசர். வன்முறை மிகுந்த இருண்ட உலகில், ஒவ்வொரு மூலையிலும் எதிர்பாராத ஆபத்து பதுங்கியிருக்கும் நிலையில், ஒரு பிரகாசமான ஆனால் இளகிய இதயம் கொண்ட ஒரு புதிய இளம் காவலதிகாரி தனது வாழ்வில், மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறார். அவரது முதல் விசாரணையில் பணியில் வெற்றிபெற, அவருக்கு எதிர்தன்மை கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட ஒரு மூத்த காவலருடன் இணைய வேண்டும். ஒன்றாக, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் கடந்து, ஒரு சைக்கோ கொலையாளியை வேட...
என் தயாரிப்பாளர் ஒரு பிச்சைக்காரன் – ஆதாரம் விழாவில் பகீர் கிளப்பிய பெண் இயக்குனர்

என் தயாரிப்பாளர் ஒரு பிச்சைக்காரன் – ஆதாரம் விழாவில் பகீர் கிளப்பிய பெண் இயக்குனர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
    ஆதாரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! MATINEE FOLKS நிறுவனம் சார்பில் G. பிரதீப் குமார், ஆஷா மைதீன் தயாரிப்பில் இயக்குநர் கவிதா இயக்கத்தில், புதுமுகங்கள் அஜித் விக்னேஷ், பூஜா சங்கர் நடிப்பில், சமூக அக்கறை கொண்ட அருமையான படைப்பாக, நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள படம் “ஆதாரம்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு விழா இன்று படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்.. தயாரிப்பாளர் பிரதீப் பேசியதாவது… நண்பர்களால் தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டவன் நான். இந்த இடத்தில் நான் நிற்க காரணம் அவர்கள் தான். அப்ஷா மைதீன் இன்று வர முடியவில்லை. அவருக்கும் சேர்த்து உங்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நண்பர்களால் தான் இந...
நள்ளிரவில் போன் செய்து தயாரிப்பாளர் ஓகே சொன்ன  கதை தீராக்காதல் – ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி

நள்ளிரவில் போன் செய்து தயாரிப்பாளர் ஓகே சொன்ன  கதை தீராக்காதல் – ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நள்ளிரவில் போன் செய்து தயாரிப்பாளர் ஓகே சொன்ன  கதை தீராக்காதல் - ஐஸ்வர்யா ராஜேஷ் நெகிழ்ச்சி   லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா நடிப்பில் உருவாகியிருக்கும் அழகான காதல் திரைப்படம் 'தீராக் காதல்'. இப்படம் மே 26 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில் படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் மோகன்ராஜா பேசியதாவது இந்தப்படத்தில் 'உசுராங்கூட்டில்..' என்ற பாடலை எழுதியுள்ளேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கு நன்றி. பாடலாசிரியரைப் படுத்தி எடுப்பதில் முதன்மையானவர் சித்து தான். பல முறை விவாதத்திற்குப் பின் 'உசுராங்கூட்டில்..' என்ற வார்த்தை பிடித்து, அதில் பாடல் எழுதினோம். அவருடன் எ...
என் காட் பாதர் என் அப்பா – தனது 100வது பட விழாவில் ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சி

என் காட் பாதர் என் அப்பா – தனது 100வது பட விழாவில் ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  A.J. சுஜித் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் தேவாவின் 100 வது படமான "பிரியமுடன் ப்ரியா" படத்தின்இசை வெளியீட்டு விழா விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசியது... *பிரியமுடன் ப்ரியா என்ற திரைப்படம் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்த 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது* இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் நூறாவது படமான பிரியமுடன் ப்ரியா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. நடிகர் அசோக் குமார், நடிகை லீசா நடித்துள்ள இந்த படத்தை A.J சுஜித் இயக்கி உள்ளார். இதில் சிறப்பு விருந்தினர்களாக தேனிசைத் தென்றல் தேவா, கங்கை அமரன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் T.வேலு, தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பேரரசு, ஆர்.வி.உதயகுமார், லட்சுமி ராமகிருஷ்ணன், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் S. கதிரேசன், R.ராதாகிருஷ்ணன் இணைச்செயலாளர் செளந்தரபாண்டியன், செயற்குழு உறுப்பினர் N. விஜயம...