வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு!
தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளுக்கும், புது முகங்களுக்கும் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும்.
தாதா87 படம் மூலமாக தாத்தாவாக இருக்கும் சாருஹாசனை தாதாவாக காட்டி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டவர் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி.
ஏற்கனவே தென்னிந்திய சினிமா உலகில் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றிய படியே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நிகில்முருகன்.
இந்த இருவரும் “பவுடர்” படத்தின் மூலமாக இணைந்திருக்கிறார்கள். விஜய்ஸ்ரீஜி இயக்கத்தில் ராகவன் என்ற போலீஸ் அதிகாரியாக நிகில்முருகன் நடித்து வருகிறார்.
இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அஜீத்தின் அலிமை படம் நேற்று வெளியான சூழலில், நிகிலின் பவுடர் படக் காட்சி ஒன்று டீசராக வெளியானது.
அந்த காட்சியில் ரவுடிகள் பட்டாக்கத்தி ம...
சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகை சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.
இதில், ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க, சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நீலிமா குணா, மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பா...
நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்து நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள 28வது படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது.
திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இப்படத்தில் விக்ரம் வில்லன் கதாப்பாத்திரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில் விக்ரம் தரப்பிலிருந்து இந்த தகவல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் “மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் ...
*இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!*
Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”.
நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்
*தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது…*
எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. M3 Mudaliyar Brother’s Film உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை,
நல்ல தயாரிப்புகளை உருவாக்க வேண்டுமென ஆரம்பித்துள்ளேன், நல்ல புர...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி, அவருடைய சினிமா பயணம் தொடங்கி 15 வருடம் ஆகியிருக்கிறது. 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். இவருடன் இணைந்து பிரியாமணி கதாநாயகியாக நடித்திருந்தார்.
கார்த்தி கதாநாயகனாக அறிமுகமான முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இவருடைய சினிமா பயணத்தில் இவருக்கு பருத்திவீரன் முக்கியமாக திரைப்படமாக அமைந்தது. பெரிதும் பேசப்பட்ட இப்படத்தில் கார்த்தியின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.
அதன்பின் அவர் ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ் என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
இன்று (23-02-2022) கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் வெளியாகி 15 வருடங்கள் ஆகியிருக்கிறது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை கார்த்தி அவருடைய சமூக வலைத...
வலிமை திரைப்படம் குறித்து ஒரு சின்ன அப்டேட் கிடைக்காதா? என்று பல மாதங்களாக ஏங்கித் தவித்த நடிகர் அஜித் குமார் ரசிகர்களுக்கு சமீப நாட்களாக போதும் போதும் என்கிற அளவிலான ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் ரிலீஸ் குறித்த அப்டேட்கள் கிடைத்த வண்ணம் உள்ளது.
முன்னதாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ள தேதி தான் - பிப்ரவரி 24.
அப்படியாக இந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்தின் முன்பதிவுகள் படுவேகமாக நடந்து வரும் நிலைப்பாட்டில் வலிமை திரைப்பட ரிலீஸ் குறித்து ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
அது வலிமை திரைப்படமானது மொத்தம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறித்த அப்டேட் ஆகும்.
போட்டிபோட்டுக் கொண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ரசிகர் கூட்டத்தை வைத்து பார்க்கும் போது வலிமை திரைப்படம் ...
இயக்குநர் பாலாவின் B Studios தயாரிப்பில் RK சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப்படத்தை இயக்கிய இயக்குநர் M.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார்.
படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்ஸ்டூடியோ 9 நிறுவனர் சிவக்குமார் பேசியதாவது…*
எங்கள் திரைப்பட விழாவிற்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. எங்கள் திரைப்படம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் நன்றி.
*சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது…*
மலையாளத்தில பல அவார்டுகள் அள்ளி குவிச...
தமிழில் இயக்குனர் செல்வராகன் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமசுடன் இணைந்து 'வாசி' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குனர் விஷ்ணு ஜி.ராகவ் இயக்கியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் டொவினோ தாமஸ் இருவரும் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
'வாசி' திரைப்படத்தை கீர்த்தி சுரேசின் அக்கா தன்னுடைய ரேவதி கலாமந்திர் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் போலவுள்ளது என ரசிகர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்....
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 'டான்', 'அயலான்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
இதையடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் தயாராகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டுள்ளார்.
அந்த கதை அவருக்கு பிடித்துப்போகவே ஒப்பந்தமாகியுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்த பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் 'மன்மத லீலை' என்ற திரைப்...