குலு குலு” சந்தானம் படமே இல்ல – கோடங்கி விமர்சனம்
"குலு குலு" சந்தானம் படமே இல்ல - கோடங்கி விமர்சனம்
நடிகர்கள் : சந்தானம், அதுல்யா சந்திரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன்.
ஒளிப்பதிவு – விஜய் கார்த்திக் கண்ணன்
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டிங்: பிலோமின் ராஜ்
தயாரிப்பு: – சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் எஸ்.ராஜ் நாராயணன்
இயக்கம் – ரத்னகுமார்
வெளியீடு – ரெட் ஜெயண்ட் மூவிஸ்
பிஆர்ஒ : யுவராஜ்;
நக்கல், நையாண்டி, குசும்பு கும்மாளம் போட்டு காமெடி மட்டுமே செய்து வந்த சந்தானம் காமெடி வாலை சுருட்டி கக்கத்தில் வைத்து அமுக்கிக் கொண்டு... அது வெளியில் தெரியாதபடி குணச்சித்திர வேடம் என்னும் பல வர்ண அங்கியை மாட்டிக் கொண்டு வலம் வந்திருக்கும் படம்தான் குலுகுலு... இதில் சந்தானம் பேர் கூகுள்... இந்த கூகுளை சுத்தித்தான் முழுபடமும் நகர்கிறது... சில இடங்களில் நகர மறுத்து நிற்...








