லிங்குசாமியின் தி வாரியர் பிரமாண்ட விழா
“தி வாரியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு
இயக்குநர் N லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கிம் ம் அதிரடி திரைப்படம் “தி வாரியர்”. Srinivaasaa Silver Screen சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார்.
பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் ஜூலை 14 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
படத்தின் வெளியீட்டினை ஒட்டி தமிழ் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் கோலகலமாக நடைபெற்றது.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில்,
இந்த விழாவிற்கு, கிட்டத்தட்ட அனைத்து முன்னணி திரைப்பட இயக்குனர்களையும் வரவழைத்துள்ள லிங்குசாமி யுனிவெர்ஸை இங்கு காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்,
...









