குழந்தைகளுக்கான படமாம் காட்டேரி சொல்கிறார் இயக்குனர்..!
குழந்தைகளையும் கவரும் ‘காட்டேரி ’
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, எஸ் என். பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் டீகே.
படத்தைப் பற்றி இயக்குநர் டீகேயிடம் கேட்டபோது,‘ காட்டேரி என்றால் அனைவரும் இரத்தம் குடிக்கும் பேய் என்று நினைக்கிறார்கள். ஆனால் காட்டேரி என்றால் பழைய மனிதர்கள், மூதாதையர்கள் என்று அர்த்தமும் இருக்கிறது.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை ஒரு முறை சந்தித்து இப்படத்தின் ஒன் லைனைச் சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டது. அத்துடன் இந்த ...









