சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

MOVIES

அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

அஜீத்தின் வலிமை படத்தில் வக்கீல்களை அவதூறாக சித்தரித்து காட்சிகள் நடவடிக்கை எடுக்க போலீசில் புகார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்திய அத்திரைப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாந்தி புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் கடந்த 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படத்தில் வழக்கறிஞர்கள் குறித்து தவறாக சித்தரித்து காட்சிப்படுத்தி உள்ளதாகவும், அத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் சாந்தி, தான் கடந்த 25 ஆம் தேதி வலிமை திரைப்படத்தை குடும்பத்துடன் திரையரங்கில் சென்று கண்டதாகவும், அப்போது அத்திரைப்படத்தின் தொடக்கக் கா...
ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்!

ராதே ஷ்யாம் படக்குழுவினரின் புதிய அப்டேட்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. ராதா கிருஷ்ணகுமார் இயக்கி இருக்கும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ‘ராதே ஷ்யாம்’ படத்தின் டீசர் அக்டோபர் 23-ந் தேதி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளன்று காலை வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது இப்படத்தின் புதிய டிரைலரை மார்ச் 2ஆம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் மார்ச் மாதம் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது....
யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யானை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அருண் விஜய்யின் 33-வது படம் ‘யானை’. ஹரி இயக்கி வரும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் யோகிபாபு நடிக்க, பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய், குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். கிராமத்து பின்னணியில் தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தை மே 6 ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்....
விஜய் – ரஜினி பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த அஜீத்தின் வலிமை வசூல்!

விஜய் – ரஜினி பட முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்த அஜீத்தின் வலிமை வசூல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  அஜித்தின் வலிமை திரைப்படம் முதல் நாளில் 35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விடுமுறை அல்லாத நாளில் வெளியாகி அதிக வசூலை குவித்த திரைப்படம் என்னும் சாதனையையும் வலிமை படைத்துள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வலிமை திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்தது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 1000 திரைகளில் வெளிவந்துள்ள இப்படம் அஜித்தின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங்கை பெற்று அசத்தியுள்ளது. இந்திய அளவில் முதல் நாளில் 35 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் வலிமை திரைப்படம் தமிழகத்தில் 28 கோடி ருபாய் வரை வசூல் செய்துள்ளதன் மூலம் விஜயின் சர்க்கார் படத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் எனும் சிறப்பைப் பெற்றுள்ளது. மேலும் விடுமுறை இல்லாத நாளில் வெளிவந்து அதி...
சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் !

சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, உலக செய்திகள், திரைப்படங்கள்
  சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகும் “கனா” திரைப்படம் ! சிவகார்த்திகேயன் உடைய Sivakarthikeyan Productions நிறுவனத்தின் சார்பில் முதல் தயாரிப்பாக உருவான படம் “கனா”. இப்படம் தற்போது சீனாவில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில், சீன மொழியில் பிரமாண்டமாக வெளியாகிறது. இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் முதன்மை பாத்திரங்களிலும் சிவகார்த்திகேயன் கௌரவ தோற்றத்திலும் நடித்திருந்த “கனா” திரைப்படம், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடம் ஒருமித்த பாரட்டுக்களை பெற்று, பிரமாண்ட வெற்றி பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைத்த இப்படம் மொழிகள் தாண்டியும் பாராட்டு பெற்றது. இப்படம் வெளியான 2018 ஆம் வருடத்தில் பல விருதுகளையும் வென்றது குறிப்பிடதக்கது. இந்நிலையில் தற்போது இப்படம் சீனாவில் வரும் மார்ச் 18 ஆம் தேதி மிகப்பெரும் எண்ணிக்கையிலான ...
வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு! 

வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு! 

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  வலிமையுடன் களம் இறங்கிய ”பவுடர்” போலீசின் பட்டாக்கத்தி டீசர் ரவுசு!   தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளுக்கும், புது முகங்களுக்கும் எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். தாதா87 படம் மூலமாக தாத்தாவாக இருக்கும் சாருஹாசனை தாதாவாக  காட்டி தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்துக் கொண்டவர் இயக்குனர் விஜய்ஸ்ரீஜி. ஏற்கனவே தென்னிந்திய சினிமா உலகில் பத்திரிகை தொடர்பாளராக பணியாற்றிய படியே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் நிகில்முருகன். இந்த இருவரும் “பவுடர்” படத்தின் மூலமாக இணைந்திருக்கிறார்கள். விஜய்ஸ்ரீஜி இயக்கத்தில் ராகவன் என்ற போலீஸ் அதிகாரியாக நிகில்முருகன் நடித்து வருகிறார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அஜீத்தின் அலிமை படம் நேற்று வெளியான சூழலில், நிகிலின் பவுடர் படக் காட்சி ஒன்று டீசராக வெளியானது. அந்த காட்சியில் ரவுடிகள் பட்டாக்கத்தி ம...
சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  சமந்தா நடித்துவரும் ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நடிகை சமந்தா நடிப்பில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன. இதில், ‘சகுந்தலம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் முன்னணி இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்க, சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகிறார். இப்படத்தில், மோகன் பாபு, தேவ் மோகன், சச்சின் கெதகர், கௌதமி, அதிதி பாலன் மற்றும் அனன்யா நாகல்லா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். நீலிமா குணா, மிகப்பெரும் பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க பிரபல தயாரிப்பா...
மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிக்கவில்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிக்கவில்லை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
நடிகர் விக்ரமின் 60-வது படம் ‘மகான்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதன்முறையாக இணைந்து நடித்திருந்தனர். மேலும் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விக்ரம் அடுத்து நடிகர் மகேஷ் பாபு நடிக்கவுள்ள 28வது படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் இப்படத்தில் விக்ரம் வில்லன் கதாப்பாத்திரத்தில் பேசப்பட்டது.   இந்நிலையில் விக்ரம் தரப்பிலிருந்து இந்த தகவல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் “மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் சியான் விக்ரம் நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவல் அனைத்தும் ...
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  *இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!* Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்‌ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவினில் *தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது…* எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. M3 Mudaliyar Brother’s Film உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை, நல்ல தயாரிப்புகளை உருவாக்க வேண்டுமென ஆரம்பித்துள்ளேன், நல்ல புர...