‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் – KING’ படத்தின் புதிய போஸ்டர்!
‘கொலையாளி அல்ல..! நான் காதலன்..!’ என்ற அதிரடியான வாசகத்துடன் வெளியான நடிகர் ஷாருக்கானின் ‘கிங் - KING’ படத்தின் புதிய போஸ்டர்!
இந்தியா முழுவதிலும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் நடிக்கும் ‘கிங்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்த போஸ்டரில் ஷாருக்கானின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. அதிலும் ஆக்ஷன் + தீவிரம் + சிறிதளவு காதல் ஆகியவற்றை ஒன்றிணைத்திருப்பதுடன், உதடுகளுக்கு இடையே ஒரு ரோஜாப்பூவையும், கண்களில் கனல் கக்கும் தீப்பொறியையும், கைகளில் துப்பாக்கியையும் ஏந்தியபடி தோன்றும் ஷாருக்கானின் பிரமிக்க வைக்கும் தோற்றம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அத்துடன், ஆக்ஷன் திரில்லர் என்டர்டெய்னராக உருவாகியிருக்கும் இந்தத...









